முன்பு அடுத்து Page:

மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா

மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும்  சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா

நாதியா, ஏப்.23 மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையில் தேர்தல் ஆணையத் தின் சிறப்பு பார்வையாளர்களின் செயல்பாடு உள்ளது என அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார். நாதியா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் தேர்தலை காரணம் காட்டி, இரண்டு ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்து, மேற்கு வங்க அரசுக்கு எதிராக இயக்கி வருகின்றனர். இந்த அதிகாரிகள், மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையிலும்,....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:20:04

தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி இலங்கையில் அவசரநிலை அமல் பலி 290-ஆக அதிகரிப்பு; இதுவரை 24 பேர் கைத…

கொழும்பு, ஏப்.23 தொடர் குண்டு வெடிப்புகள் எதிரொலியாக, இலங்கையில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. பயங்கரவாதத்தை வலுவுடன் எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்புப் படையினருக்கு பெருமள விலான அதிகாரங்களை அளிக்க இந்த அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார். இலங்கையில் கிறித்துவ சர்ச்சுகள், நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத் தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட் டன. இவற்றில் பலியானோர் எண்ணிக்கை திங்கள்கிழமை....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:36:03

பல கோடி ஆண்டுகளுக்கு முன் நிலப்பகுதிகளில் வாழ்ந்த நான்கு கால் திமிங்கலம்

துபாய், ஏப்.23  பல கோடி ஆண்டுகளுக்கு முன், நீரில் மட்டு மின்றி 4 கால்களோடு நிலத்திலும் திமிங்கலம் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அய்ந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தைய திமிங்கிலத்தின் படிவங்கள் வட இந்தியாவில் இமய மலையில் பகுதிகளிலும், இன்றைய பாகிஸ்தானிலும் காணப்படுகின்றன. இந்த படிமங்கள் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதில், அந்த காலக்கட்டத்தில் தற்போது ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்கள் நான்கு கால்களுடன் நிலத்திலும் வாழ்த்து இருக்கலாம் என்று....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:21:03

பூமியின் அளவில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

துபாய்,  ஏப்.23   அமெரிக்கா வின் விண்வெளி ஆய்வு மய்யமான நாசா, புதிய கிரகங்களை கண்டறிந்து ஆய்வு மேற்கொள் வதற்காக கடந்தாண்டு டெஸ் என்ற செயற்கைக்கோளை விண் ணுக்கு அனுப்பியது. இந்த செயற் கைக் கோள் மற்றொரு கிரகத்தை கண்டு பிடித்து ஆராய்ச்சியாளர் களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி யுள்ளது. எச்டி 21749 சி என்று அழைக்கப்படும் இந்த கிரகம் பூமியை போல், அதே அளவில் இருப்பது பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. ....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:19:03

ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆதாரங்களை காட்சிக்கு வைத்தது பாகிஸ்தான்

ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆதாரங்களை  காட்சிக்கு வைத்தது பாகிஸ்தான்

லாகூர், ஏப்.23 ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆவணங்களை பாகிஸ்தான் முதல் முறையாக, காட்சிக்கு வைத்துள்ளது. இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில், ஜாலியன் வாலாபாக் படுகொலையை யாராலும் மறக்க முடியாது. 1919ஆம் ஆண்டு ரவுலட் சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. இதன்படி, யாரையும் விசாரணையின்றி கைது செய்யலாம். இந்த சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் கூட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:17:03

அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிக்க எகிப்தில் பொதுவாக்கெடுப்பு

கெய்ரோ, ஏப்.23  எகிப்தில் அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்த பொதுவாக்கெடுப்பு 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பொதுவாக்கெடுப்பு வெற்றி பெற் றால், தற்போதைய அதிபர் அப்தெல் அல்-சிசி, அந்தப் பதவியில் வரும் 2030-ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: எகிப்தின் தற்போதைய அரசியல் சாசனத் தின்படி, ஒருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட அதிபரின் பதவிக் காலம் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கும். மேலும், ஒருவர் இரண்டு....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:08:03

ஆப்கன்: அதிபர் பதவிக் காலம் செப்டம்பர் வரை நீட்டிப்பு

ஆப்கன்: அதிபர் பதவிக் காலம்  செப்டம்பர் வரை நீட்டிப்பு

ஆப்கன், ஏப்.23 ஆப்கானிஸ்தான் தேர்தல் வரும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அதிபர் அஷ்ரஃப் கனியின் பதவிக் காலத்தை நீட்டித்து அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தல் நடைபெற்று, அடுத்த அதிபர் பொறுப்பேற்கும் வரை நாட்டின் அதிபராக அஷ்ரஃப் கனி நீடிக்கும் வகையில்....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:04:03

காவல்துறை எச்சரிக்கை புறக்கணிப்பு

காவல்துறை எச்சரிக்கை புறக்கணிப்பு

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு: இந்தியர்கள் 4 பேர் பலி - ஊரடங்கு உத்தரவு அமல் இலங்கை, ஏப்.22 இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் ஞாயிற்றுக் கிழமை அடுத்தடுத்து நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்புகளில் 290 பேர் பலியாகி னர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, நாடெங்கிலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தாக்கு தல் தொடர்பாக இதுவரை....... மேலும்

22 ஏப்ரல் 2019 17:03:05

ஏப்.22 உலக பூமி நாள்

பிரபஞ்சத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரே வீடு பூமி. நம்மை சுமக்கும் பூமியை, பாதுகாப்பது நமது கடமை. இதனை சேதப்படுத் தினால், வருங்கால சந்ததி வாழ வழியிருக்காது.  பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏப்., 22ஆம் தேதி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. நமது உயிரினங்களை பாதுகாப்போம் என்பது இந்தாண்டு மய்யக்கருத்து. கடந்த 1970, ஏப்., 22ஆம் தேதி, 150 ஆண்டுகால தொழிற்சாலையின் கழிவுகளால், பாதிக்கப்பட்ட பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி,....... மேலும்

22 ஏப்ரல் 2019 16:05:04

நவ. 14இல் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, நவ.6 இலங்கை அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடுவதாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். இதுதொடர்பாக அவரது செயலர் உதயா ஆர். சேனேவிரத்னே மூலமாக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. முன்னதாக, இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 16-ஆம் தேதி வரையில் முடக்கி சிறீசேனா உத்தரவிட்டிருந்தார். இச்சூழலில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அவருக்கு நெருக்கடி அதி கரித்து வந்த நிலையில், வரும் 7-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடு மென கடந்த வெள்ளிக் கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வரும் 14-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று தற்போது அறிவிக்கப்பட் டுள்ளது.

இதனிடையே, இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் களை விடுவிக்க இலங்கை அரசு தயாராகி வருகிறது.

புதிய பிரதமர் ராஜபக்சேவுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெறும் நோக்கில் இந்த நட வடிக்கை மேற்கொள்ளப்பட வுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, ராஜபக்சே பிரதமராகப் பதவியேற்றது அர சியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என்றும் தமிழ் தேசிய கூட்ட மைப்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ராஜபக்சேவின் மகன், நமல் ராஜபக்சே, சுட்டு ரையில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்ப்பது தொடர்பாக கலந்துரையாடல் களை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நீண்ட நாள்களாக சிறையில் அடைக்கப் பட்டுள்ள போராளிகள் குறித்து அதிபர் மைத்ரிபால சிறீசேனா வும், பிரதமர் ராஜபக்சேவும் இணைந்து ஆலோசித்து நல்ல தொரு முடிவை விரைவில் அறிவிப்பர்.

தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்பட வேண்டும். கூட்டமைப்பில் இருக்கும் சிலருடைய சுயநலத் திற்காக, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அடையாளமாக இருக் கும் அந்தக் கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது என்பது தமிழ் மக்களை ஏமாளி களாக மாற்றும் செயல் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் 225 எம்.பி.க்களை கொண்ட இலங்கை நாடாளு மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில் ராஜபக் சேவின் அணியில் 100 பேர் மட்டுமே இருக்கின்றனர். பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங் கவை 103 எம்.பி.க்கள் ஆதரிக் கின்றனர். இச்சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 16 பேர், இடதுசாரிகளின் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த (ஜேவிபி) 6 பேர் இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க் களாக உள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்பட்சத்தில், வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக இரு கட்சி களும் விளங்கும் எனத் தெரி கிறது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அணியை ஆதரிக்கிறதோ, அவர்களுக்கு வெற்றி உறுதி என்ற நிலை காணப்படுகிறது.  இந்தச் சூழலில்தான், சிறை யில் உள்ள தமிழர்கள் விடுவிக் கப்படவுள்ள தாக நமல் ராஜபக்சே சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner