முன்பு அடுத்து Page:

நிமோனியா: இந்தியாவில் 2030-க்குள் 17 லட்சம் குழந்தைகள் இறக்கும் அபாயம்: ஆய்வுத் தகவல்

நிமோனியா: இந்தியாவில் 2030-க்குள் 17 லட்சம் குழந்தைகள் இறக்கும் அபாயம்: ஆய்வுத் தகவல்

இலண்டன், நவ. 14- நிமோனியா காய்ச்சலால், இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் 17 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன. உலக அளவில் 5 வயதுக் குள்பட்ட குழந்தைகளின் உயி ரிழப்புக்கு காரணமாக உள்ள தொற்று நோய்களில், மலேரியா, தட்டம்மை உள்ளிட்ட நோய்களையெல்லாம் விட நிமோனியாதான் அபாகரமான தாக உள்ளது. இந்நோய் குறித்த....... மேலும்

14 நவம்பர் 2018 17:28:05

எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு

வாசிங்டன், நவ. 14- அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அங்கு வெளிநாட்டினருக்கு குடியு ரிமை அளிக்கும் விவகாரத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அண்டை நாடான மெக்சிகோ நாட்டு எல்லை வழியாக அமெரிக்காவில் அடைக்கலம் தேடிவரும் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்நிலையில், உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக் குள் நுழைந்ததாக  2382 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள 86 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக  தகவல் அறியும் சுதந்திரத்தின்....... மேலும்

14 நவம்பர் 2018 17:28:05

யேமன் போர்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி

யேமன் போர்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி

யேமன், நவ. 14- யேமனில் முக் கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரைக் கைப்பற்றுவதற்காக நடைபெற்று வரும் தீவிர சண்டையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து யேமன் ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட் டில் உள்ள ஹோடைடா நக ரைக் ....... மேலும்

14 நவம்பர் 2018 17:28:05

காசா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டுவீச்சு - ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

ஜெருசலம், நவ. 14- இஸ்ரே லுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாலஸ் தீனத்தின் காஸா எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது நேற்று 300 ராக்கெட்டுகள் வீசப்பட் டன. அதில் பல ராக்கெட்டுகள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந் தன. ஒரு ஏவுகணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது விழுந்து வெடித்தது. அதில் பலர் காயம் அடைந் தனர். குடியிருப்பு பகுதியில்....... மேலும்

14 நவம்பர் 2018 17:28:05

இலங்கையில் அரசியல் சட்ட கடும் நெருக்கடி: ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்…

இலங்கையில் அரசியல் சட்ட கடும் நெருக்கடி: ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்!

கொழும்பு, நவ.14 இலங்கையில் பிரத மர் விக்கிரம சிங்கேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, எதேச் சதிகாரமாக முன்னாள் அதிபர் ராஜ பக்சேவை இலங்கை அதிபர் சிறீசேனா அறிவித்தபோது, பலரும் மிகப்பெரிய ஜனநாயகப்படுகொலை என்று அதி பரின் செயலைக் கடுமையாகக் கண்டித்தார்கள். இந்நிலையில், இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேவை அப்பதவியிலிருந்து நீக்கு வதாகவும், ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமிப்பதாகவும்....... மேலும்

14 நவம்பர் 2018 15:21:03

சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் சேர்ந்தார் ராஜபட்ச

கொழும்பு, நவ. 13- இலங்கை அதிபர் சிறீசேனாவின் சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சியான இலங்கை மக்கள் கட்சியில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச இணைந்துள்ளார். இலங்கை மக்கள் கட்சியின் தொண்டர்கள் சார்பில் அக் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, அந்தக் கட் சியில் ராஜபட்ச உறுப்பினராக சேர்ந்தார். இலங்கை பிரதமராக ராஜ....... மேலும்

13 நவம்பர் 2018 17:24:05

வங்கதேச பொதுத் தேர்தல் டிச.30-க்கு ஒத்திவைப்பு

டாக்கா, நவ. 13- வங்கதேசத்தில் வரும் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி நடை பெறுவதாக இருந்த பொதுத் தேர்தல் ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. தேர்தலை ஒரு மாதத்துக்கு தள்ளிவைக்குமாறு அந்த நாட்டு எதிர்க் கட்சிக் கூட்டணி கோரிக்கை விடுத்த சூழலில், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் நூருல் ஹூடா கூறியதாவது: பொதுத் தேர்தலை வரும் டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி நடத்துவதற்கு....... மேலும்

13 நவம்பர் 2018 17:24:05

கச்சா எண்ணெய் விலை சரிவு: உற்பத்தியை குறைக்குமாறு சவுதி அரேபியா ஆலோசனை

அபுதாபி, நவ. 13- சர்வதேச சந்தையில் பெட்ரோலிய  கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்றன. இந்த முடிவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 18 முக்கிய நாடுகளுக்கு  சவுதி அரேபியா நாட்டின் எரிபொருள்துறை....... மேலும்

13 நவம்பர் 2018 17:24:05

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு சிறீசேனாவின் செயல் அதிர்ச்சியளிக்கிறது

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு சிறீசேனாவின் செயல் அதிர்ச்சியளிக்கிறது

அய்.நா. பொதுச் செயலாளர் அறிக்கை! வாசிங்டன், நவ. 13- -இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக அய்.நா.பொதுச் செயலாளர் அன் டோனியோ குத்தரோஸ் தெரிவித்துள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஜனநாயக முறை கள் மதிக்கப்பட வேண்டும் எனவும்கேட்டுக் கொண்டுள்ளார். அய்.நா. பொதுச் செயலா ளர் அன்டோனியோ குத்த ரோஸ் வெளியிட்டுள்ள அறிக் கையில், இலங்கை நாடாளு....... மேலும்

13 நவம்பர் 2018 17:24:05

சீனா: தென் சீனக் கடலில் ஆக்கிரமிப்பு கூடாது

சீனா: தென் சீனக் கடலில் ஆக்கிரமிப்பு கூடாது

வாசிங்டன், நவ. 11- "தென் சீனக் கடலில் எந்த நாடும் ராணுவ ஆக்கிரமிப்பு செய்வதை ஏற்க முடியாது' என்று சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள சீன அரசின் முதன்மை நிர்வாகக் குழு உறுப் பினர் யாங் ஜியேசி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோவுடன் இணைந்து வாசிங்டனில் செய் தியாளர்களிடம் கூறியதாவது: தென் சீனக் கடல் பகுதியில் பயணம் மேற்கொள்வதற்கான உரிமை குறித்த அமெரிக்காவின்....... மேலும்

13 நவம்பர் 2018 10:39:10

தமிழர் பிரச்சினையை எழுப்புவோரை விடுதலைப்புலி ஆதரவாளர்களாக முத்திரை குத்துகின்றனர்- விஜயகலா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, ஜூலை 10- இலங்கை வடக்கு மாகாணத்தில் இருந்து அய்க்கிய தேசிய கட்சி சார்பில் நாடாளுமன்றத் துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரன் (வயது 45), குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சராக இருந் தார். பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இருந்த ஒரே தமிழ் பெண் அமைச்சரான விஜயகலா கடந்த வாரம் கொழும்புவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றி னார்.

அப்போது அவர், வடக்கு மாகா ணத்தில் தற்போது குற்ற செயல்கள் அதிகரித்து இருப்பதை பார்க்கும் போது, விடுதலைப்புலிகள் மீண்டும் வரவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது என்று கூறிய தாக தகவல் வெளியானது. இது இலங்கை அரசியலில் பெரும் புயலை கிளப்பி யது.

விஜயகலாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிங்கள எம்.பி.க் கள், அவர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத்தில் போர்க்கொடி தூக்கினர். மேலும் அவரது சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது.

எனவே இது குறித்து விசாரணை நடத்துமாறு கட்சித்தலைவரும், பிர தமருமான ரனில் விக்ரமசிங்கே கேட் டுக்கொண்டார். மேலும் விஜயகலா வின் கருத்து அரசியல் சாசனத்துக்கு எதிரானதா? என அட்டார்னி ஜெனர லும் விசாரணை நடத்தி வருகிறார்.

இவ்வாறு தனது கருத்துக்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து விஜயகலா மகேஸ்வரன், கடந்த 5-ஆம் தேதி தனது பதவியிலிருந்து விலகினார்.

பதவி விலகல் நடவடிக்கைக்குப் பின் முதல் முறையாக, வடக்கு மாகா ணத்தில் நேற்று முன்தினம் நடந்த கூட்டம் ஒன்றில் விஜயகலா பேசி னார். அப்போது அவர் கூறுகையில், இலங்கையில் தமிழ் மக்களின் பிரச் சினைகள் குறித்து ஒருவர் பேசினால், அவரை விடுதலைப்புலியாக தெற்கு (சிங்களர்கள்) பார்க்கிறது. விடுதலைப் புலி ஆதரவாளராகவே அவர்களை முத்திரை குத்துகின்றனர்.

நான் வடக்கு மாகாண மக்களின் மனதில் இருப்பதைத்தான் பேசினேன். அவர்களுக்காகத்தான் எனது பதவியை விட்டு விலகினேன் என்றார்.

ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட தற்போது தமிழர்க ளின் நிலை மேம்பட்டு இருப்பதாக கூறிய விஜயகலா, தனது முயற்சிக ளுக்கு எதிர்ப்பு வந்தாலும், மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் தெரிவித்தார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner