முன்பு அடுத்து Page:

கசோகி படுகொலை குறித்து ஓரிரு நாள்களில் அறிக்கை: டிரம்ப் பேட்டி

கலிபோர்னியா, நவ. 20- செய்தியாளர் கஷோகி படுகொலை தொடர்பான அமெரிக்கப் புலனாய்வு விவரங்கள் அடங்கிய அறிக்கையை செவ்வாய்க்கிழ மைக்குள் (நவ. 20) வெளியிடவிருப் பதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். துருக்கியிலுள்ள சவூதி துணைத் தூத ரகத்தில் நடைபெற்ற அந்தப் படுகொலை யில், "சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளதாக அமெரிக்காவின் சிஅய்ஏ புலனாய்வு அமைப்பு முடிவுக்கு வந்து உள்ளது" என தகவல்கள் வெளியா....... மேலும்

20 நவம்பர் 2018 14:33:02

அமீரகத்தைச் சேர்ந்த தமிழ்த் தொண்டு அமைப்பிற்கு சிறந்த சேவைக்கான அமீரக விருது

அமீரகத்தைச் சேர்ந்த தமிழ்த் தொண்டு அமைப்பிற்கு சிறந்த சேவைக்கான அமீரக விருது

துபாய், நவ. 20- அமீரகத்தில் அய்க்கிய நாடுகளின் சட்ட திட்டங்களின் விதிப்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் தமிழர்களின் சமூக அமைப்பு ஈமான் தொண்டு நிறுவனம் ஆகும். இந்த நிறு வனத்தின் மூலம் வேலையி ழந்து தவிக்கும் தமி ழர்கள் பல உதவிகளைப் பெற்று உள்ளனர். மேலும் சட்டச்சிக்க லில் ஆளாகி நிற்கும் தமிழர்க ளுக்கு சட்ட உதவிகள் வழங்கி அவர்களை மீட்டு தமிழகத் திற்கு அனுப்பிவைக்கும் பணி யையும்செய்துவருகிறது,....... மேலும்

20 நவம்பர் 2018 14:33:02

இலங்கை: அதிபர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்தது

கொழும்பு, நவ. 20- இலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியல் குழப்பங்களுக்கும், அசாதாரண சூழல்களுக்கும் தீர்வு காண்ப தற்காக அந்நாட்டு அதிபர் சிறீ சேனா ஞாயிற்றுக்கிழமை கூட் டிய அனைத்து கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்தது. அதிபரின் நிலைப்பாட்டை யும், முடிவையும் ஏற்க முக்கி யக் கட்சிகள் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவி வரும் பிரச்சி னைகளுக்கு அதிபர் சிறீசேனாவே காரணம் என்றும், அதற்கு அவர்தான் முடிவு கட்ட வேண் டும்....... மேலும்

20 நவம்பர் 2018 14:33:02

என்னை பதவியிலிருந்து நீக்குவதால் பிரெக்சிட் எளிமையாகிவிடாது

என்னை பதவியிலிருந்து நீக்குவதால் பிரெக்சிட் எளிமையாகிவிடாது

பிரதமர் தெரசா மே அறிவிப்பு லண்டன், நவ. 20- தம்மை பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றுவதால் அய்ரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்சிட்) நடைமுறை எளிமையாகிவிடாது என்று அந்த நாட்டுப் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சியொன்றுக்கு அவர் ஞாயிற் றுக்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: அரசியல் என்பது மிகவும் கடினமான பணியாகும். அந்தப் பணியை நான் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறேன். பிரெக்சிட் விவகாரத்தில் என் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, என்னை....... மேலும்

20 நவம்பர் 2018 14:33:02

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில்  பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

காபூல், நவ.19 ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் சமரச முயற்சி நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அவர்கள் தாக்குதல்களை நிறுத்தவில்லை. தலீபான் பயங்கரவாதிகளை வீழ்த்துவதில் ஆப்கானிஸ்தான் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 69 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதை ஆப்கானிஸ்தான் ராணுவ அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், பக்தியா மாகாணத்தில் 22 பேர்,....... மேலும்

19 நவம்பர் 2018 16:29:04

சிரியா: அமெரிக்க கூட்டுப் படை தாக்குதலில் 43 பேர் பலி

சிரியா, நவ.19 சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 43 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இசுலாமிய தேச பயங்கரவாதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களில், பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் சனிக்கிழமை கூறியதாவது: ஈராக்கையொட்டிய சிரியாவின் டெயிர் எஸார் மாகாணத்தில், அமெரிக்க கூட்டுப்....... மேலும்

19 நவம்பர் 2018 16:29:04

கிலோ கிராமுக்கான வரையறையில் மாற்றம்!: விஞ்ஞானிகள் வரலாற்று சிறப்பு மிக்க முடிவு

வெர்சாய், நவ.19 ஒரு கிலோ கிராம் என்பது எவ்வளவு எடை? என்பதற்காக சுமார் 130 ஆண்டுகளாக இருந்து வந்த வரையறை, நவீன காலத்துக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது. பிரான்சின் வெர்சாய் நகரில் நடைபெற்ற சர்வதேச எடை மற்றும் அலகுகள் மாநாட்டில், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த முடிவுக்கு சுமார் 60 நாடுகளின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் ஆதரவு அளித்தனர். கடந்த 1889-ஆம் ஆண்டிலிருந்து, பிரான்சில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள, லே கிராண் கே என்று....... மேலும்

19 நவம்பர் 2018 16:29:04

செய்தியாளர் கஷோகி படுகொலை சவூதி இளவரசர் மீது சிஅய்ஏ குற்றச்சாட்டு?

செய்தியாளர் கஷோகி படுகொலை  சவூதி இளவரசர் மீது சிஅய்ஏ குற்றச்சாட்டு?

வாசிங்டன், நவ.19 செய்தியாளர் கஷோகி படுகொலையில் சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்புள்ளது என, அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஅய்ஏ-வின் விசா ரணை முடிவுகள் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, சிஅய்ஏ வட் டாரங்களை மேற்கோள் காட்டி, அமெரிக்காவிலிருந்து வெளி யாகும் வாசிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது: துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் கஷோகி கொல் லப்பட்டது தொடர்பாக சிஅய்ஏ நடத்திய விசாரணையில், அந்தச் சம்பவத்துடன் சவூதி பட்டத்து....... மேலும்

19 நவம்பர் 2018 16:29:04

இங்கிலாந்தில் வரைவு ஒப்பந்தத்தை நிறைவேற்ற தெரசா மே உறுதி

இங்கிலாந்தில் வரைவு ஒப்பந்தத்தை  நிறைவேற்ற தெரசா மே உறுதி

லண்டன், நவ.19  அய்ரோப் பிய கூட்டமைப்பில் இருந்து விலக முடிவு எடுத்துள்ள இங்கி லாந்து, அது தொடர்பான நட வடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. ஆளுங்கட்சி அமைச்சர்களி டையே  இது தொடர்பாக தயாரிக் கப்பட்டுள்ள வரைவு அறிக் கைக்கு அங்கு அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தியில், பிரிக்ஸிட் என அழைக்கப்படுகிற அந்த நடவடிக்கையை கவனித்து வந்த அமைச்சர் டொமினிக் ராப், அந்த துறைக்கான ராஜாங்க மந்திரி சூயல்லா உள்பட 4 அமைச்சர்கள்....... மேலும்

19 நவம்பர் 2018 16:29:04

நவ.20-இல் பாக். பிரதமர் இம்ரான் மலேசியப் பயணம்

இசுலாமாபாத், நவ. 18- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த மாதம் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் மலேசிய சுற்றுப் பயணம் மேற் கொள்ள விருப்பதாக அந்த நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். அவருடன் உயர்நிலைக் குழு ஒன்றும் மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அவர்கள் கூறினர். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தா னுக்கு நிதியுதவி கோருவதற் காகவே, இம்ரான் மலேசியா....... மேலும்

18 நவம்பர் 2018 16:28:04

ஜப்பான் சுரங்க ரயில் நச்சுத் தாக்குதல் வழக்கு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

7 பேருக்கு தண்டனை நிறைவேற்றம்

டோக்கியோ, ஜூலை 8 ஜப்பானில் கடந்த 1995இல் நடத்தப்பட்ட சுரங்க ரயில் நச்சுத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஓம் ஷின்ரிக்யோ' மத அமைப்பின் தலைவர் ஷாகோ அஸஹாரா மற்றும் அவரது 6 சீடர்கள் வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்பட்டனர்.

இதுகுறித்து அந்த நாட்டு நீதித் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ஜப்பான் சுரங்க ரயில்கள் மீது கடந்த 1995-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதல் தொடர்பாக, ஓம் ஷின்ரிக்யோ அமைப்பின் 7 உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது' என்று தெரிவித்தனர்.

13 பேரது உயிர்களை பலி கொண்ட அந்தத் தாக்குதல் நடந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது முதல் முறையாக அதில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சுரங்க ரயில் நிலையங்களில், ரயில் பயணிகளைக் குறிவைத்து கடந்த 1995-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் தேதி நச்சுத் தக்குதல் நடத்தப்பட்டது. ஓடும் ரயில் பெட்டிகளுக்குள் அதி பயங்கரமான சாரின்' ரசாயனப் பொருள் திரவ வடிவில் வீசப்பட்டதில், 13 பயணிகள் உயிரிழந்தனர்; சுமார் 50 பேருக்கு நிரந்தர உடல்நல பாதிப்பு ஏற்பட்டது; 900-க்கும் மேற்பட்டவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, குற்றங்கள் அதிகம் நடைபெறாத மிகவும் அமைதியான நாடு என்று பெயர் பெற்றிருந்த ஜப்பானில், பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தகைய கொடூரத் தாக்குதல் உலக அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

அந்தத் தாக்குதலை, ஷாகோ அஸஹாரா தலைமையிலான ஓம் ஷின்ரிக்யோ மத அமைப்பினர் நடத்தியது, விசாரணையில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கு எதிராக போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஓம் ஷின்ரிக்யோ பொறுப்பேற்காவிட்டாலும், டோக்கியோ சுரங்க ரயில் தாக்குதலிலும், அதற்கு முன்னரே நடைபெற்றிருந்த சிறிய அளவிலான தாக்குதல்களிலும் அந்த அமைப்பு ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில், 189 ஓம் ஷின்ரிக்யோ அமைப்பினர் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அவர்களில், அமைப்பின் தலைவர் ஷாகோ அஸஹாரா உள்ளிட்ட 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 7 பேர் தற்போது தூக்கிலிடப்பட்டுள்ளதை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் வரவேற்றுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner