முன்பு அடுத்து Page:

பாகிஸ்தான் மருத்துவமனையில் நவாஸ் செரீப் அனுமதி

பாகிஸ்தான் மருத்துவமனையில்  நவாஸ்  செரீப் அனுமதி

இசுலாமாபாத், பிப்.17 ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் (69), சிகிச்சைக்காக லாகூரில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அல்-அஜீசா இரும்பாலை ஊழல் வழக்கில்,  நவாசுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நவாசுக்கு இருதய நோய் பாதிப்பு அதிகமானதையடுத்து அவர், அந்த சிறையிலிருந்து உயர் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில்....... மேலும்

17 பிப்ரவரி 2019 13:41:01

அமெரிக்க அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை: வெனிசுலா அதிபர் ஒப்புதல்

அமெரிக்க அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை: வெனிசுலா அதிபர் ஒப்புதல்

நியூயார்க், பிப்.17 வெனிசுலாவில் நிலவி வரும் அரசியல் பதற்றம் குறித்து அமெரிக்க அரசுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதை அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடூரோ ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது: வெனிசூலாவில் அரசியல் பதற்றம் ஏற்பட்ட பிறகு,  வெனிசுலா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் அரீஸா இரண்டு முறை அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். நியூயார்க்கில் நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தையின்போது, வெனிசுலாவுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் எலியட் அப்ராம்ஸை வெனிசுலா....... மேலும்

17 பிப்ரவரி 2019 13:39:01

போரால் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் பலி பன்னாட்டு அமைப்பு தகவல்

நியூயார்க், பிப்.17 போரால் ஆண்டுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என்று சேவ் தி சில்ரன் என்ற பன்னாட்டு அமைப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 10 நாடுகளில் நடைபெற்ற போரின் காரணமாக 5,50,000 கைக்குழந்தைகள் உயிரிழந்தனர். சண்டையின்போது மட்டுமின்றி, போருக்கு பிறகு ஏற்பட்ட பஞ்சம், மருத்துவம் கிடைக் காதது, சுகாதாரமின்மை உள்ளிட்ட பல காரணங்களால்....... மேலும்

17 பிப்ரவரி 2019 13:35:01

பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

வாசிங்டன், பிப்.17 பயங்கர வாதிகளுக்கு ஆதரவளிப்பதை யும், அவர்களுக்குப் புகலிடம் அளிப்பதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டு மென பாகிஸ்தானை அமெ ரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஜம்மு -காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு, புல்வாமாவில் வியாழக்கிழமை நடத்திய பயங்கரவாதத் தாக்குத லில் 40 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இத் தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் பல வீரர்கள்....... மேலும்

17 பிப்ரவரி 2019 13:29:01

வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டிய நிலையில் சீனா உள்ளது: அதிபர் டிரம்ப் பேட்டி

வாசிங்டன், பிப். 16- அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தே ஆக வேண்டிய நிலையில் சீனா உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டே ஆக வேண்டிய நிலையில் தற்போது சீனா உள்ளது. எனவே, விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படும். ஆனால், அந்த ஒப்பந்தம் உண்மையிலேயே அமெரிக்காவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்........ மேலும்

16 பிப்ரவரி 2019 15:36:03

பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு பேட்டரி பாகங்கள் தயாரிக்கும் முறை: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

நியூயார்க், பிப். 16- தூக்கி எறி யப்படும் பிளாஸ்டிக் பொருள் களைக் கொண்டு, ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய பேட்டரி களின் பாகங்களைத் தயாரிப்ப தற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பிளாஸ்டிக் பைகளில் உள்ள பாலித்தீனை மிகக் குறைந்த செலவில் மின்சாரத் தைத் தேக்கி வைக்கக்கூடிய கார்பனாக மாற்றும் வழி முறையை அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறிய தாவது: பிளாஸ்டிக் கழிவிலி....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:34:03

விலைவாசி உயர்வு: அர்ஜென்டீனாவில் பொதுமக்கள் போராட்டம்

விலைவாசி உயர்வு: அர்ஜென்டீனாவில் பொதுமக்கள் போராட்டம்

பியூனர்ஸ் அயர்ஸ், பிப். 16-- அர்ஜென்டீனாவில் விலை வாசி மிகக் கடுமையாக உயர்ந் துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசியைக் கட்டுப் படுத்தும் வகையில் உணவுப் பொருள் அவசர நிலையை அரசு அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ஆர்ஜென்டீனா அதிபராக மவுரிசியோ மேக்ரி கடந்த 2015-ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து விலைவாசி அதிக அள வில் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரது ஆட்சியில் மின் கட்டணங்கள் 2.1 சதவீதமும், எரிபொருள்களின் விலை....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:30:03

அர்ஜென்டீனா அதிபர் பிப்.17இல் இந்தியா வருகை

அர்ஜென்டீனா அதிபர்  பிப்.17இல் இந்தியா வருகை

அர்ஜென்டீனா, பிப். 16- அர்ஜென்டீனா அதிபர் மவுரிசியோ மேக்ரி, 3 நாள் பயணமாக வரும் 17ஆம் தேதி இந்தியா வருகிறார். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆர்ஜென்டீனா அதிபருடன் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் பவுரி, வேளாண் துறை செயலர் லூயிஸ் எசெவ்கெரே, மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தியா வருகின்றனர்.அதிபரின் மனைவி  ஜூலியானா அவாடாவும் வருகிறார். ஈரடுக்கு விமானத்தின் தயாரிப்பை நிறுத்த ஏர்பஸ் முடிவு லண்டன், பிப். 16-....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:25:03

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தாய்லாந்து இளவரசி

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தாய்லாந்து இளவரசி

பாங்காக், பிப். 15- தாய்லாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முயன்றதற்காக, அந்நாட்டு இளவரசி உபோல் ரத்தனா மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  தாய்லாந்து மக்களுக்காக பணியாற்ற வேண் டும், உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட் டியிட முயன்றேன். ஆனால் அது பிரச்சினையை உருவாக் கும் என்று நான் எண்ணவில்லை. அதற்காக அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கி றேன் என்று....... மேலும்

15 பிப்ரவரி 2019 15:27:03

பிளாஸ்டிக் குப்பைகள் எரிப்பு: களமிறங்கிய கிராம மக்கள்

பிளாஸ்டிக் குப்பைகள் எரிப்பு: களமிறங்கிய கிராம மக்கள்

கோலாலம்பூர், பிப். 15- மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிக்கப்பட்டு எரிக்கப்படு கின்றன. இவை அனைத்தும் தொழிற் சாலைகளின் கழிவுகள் ஆகும். மேலும் பல நாடுகளில் இருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவிற்கு வந்து குவிந்துள்ளன. இவற்றை அகற்றும் முயற்சியில் ஜெஞ்ரோம் பகுதியைச் சேர்ந்த டேனி யல் டாய், டன் சிங் ஹின் ஈடுபட்டு உள்ளனர். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த பலரும் இவர்களுடன் இயற்கை சமூக ஆர்வலர்களாக இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும்....... மேலும்

15 பிப்ரவரி 2019 15:24:03

விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து: இலங்கை அமைச்சர் பதவி விலகல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிறீலங்கா, ஜூலை 8 இலங் கையில் தமிழர்கள் பெரும்பான் மையாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்த சிறார் விவகாரங்கள் துறை அமைச்சர் விஜயகலா மகேஸ் வரன் பதவி விலகினார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்று அவர் பேசியபோது, வடக்கு மாகாணத்தில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. இந்தச் சூழலில் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு எழுச்சி பெற வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். போர் நடைபெற்ற கடந்த 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதிக்கு முன்பு நாம் எப்படி சுதந்திரமாக வாழ்ந்தோம். குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிகளுக்குச் சென்று எப்படி வீடு திரும்பினர் என்பதை நாம் தற்போது நினைவு கூர்கிறோம்' என்று கூறியிருந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அய்க்கிய தேசிய கட்சியின் அமைச்சரான விஜயக லாவின் கருத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத் தினர்.

அரசமைப்புச் சட்டத்தை மீறிவிட்டதாகவும், அவருக்கு எதி ராக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் எதிர்க் கட்சிகள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, அவர் அரச மைப்புச் சட்டத்தை மீறியிருந்தால் சட்ட ரீதியான நட வடிக்கை எடுக்குமாறு அட் டார்னி ஜெனரலுக்கு அவைத் தலைவர் பரிந்துரைத்தார்.

பிரதமர் ரணில் விக்ரம சிங்கவும் விஜயகலாவை நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். அவர் கூறுகை யில், வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் எனது பதவி விலகல் கடிதத்தை அளித்து விட்டேன். அட்டார்னி ஜெனரல் விசாரணைக்காகவே நான் பதவி விலகினேன். யாரும் என்னை நீக்கவில்லை' என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner