முன்பு அடுத்து Page:

வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டிய நிலையில் சீனா உள்ளது: அதிபர் டிரம்ப் பேட்டி

வாசிங்டன், பிப். 16- அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தே ஆக வேண்டிய நிலையில் சீனா உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டே ஆக வேண்டிய நிலையில் தற்போது சீனா உள்ளது. எனவே, விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படும். ஆனால், அந்த ஒப்பந்தம் உண்மையிலேயே அமெரிக்காவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்........ மேலும்

16 பிப்ரவரி 2019 15:36:03

பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு பேட்டரி பாகங்கள் தயாரிக்கும் முறை: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

நியூயார்க், பிப். 16- தூக்கி எறி யப்படும் பிளாஸ்டிக் பொருள் களைக் கொண்டு, ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய பேட்டரி களின் பாகங்களைத் தயாரிப்ப தற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பிளாஸ்டிக் பைகளில் உள்ள பாலித்தீனை மிகக் குறைந்த செலவில் மின்சாரத் தைத் தேக்கி வைக்கக்கூடிய கார்பனாக மாற்றும் வழி முறையை அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறிய தாவது: பிளாஸ்டிக் கழிவிலி....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:34:03

விலைவாசி உயர்வு: அர்ஜென்டீனாவில் பொதுமக்கள் போராட்டம்

விலைவாசி உயர்வு: அர்ஜென்டீனாவில் பொதுமக்கள் போராட்டம்

பியூனர்ஸ் அயர்ஸ், பிப். 16-- அர்ஜென்டீனாவில் விலை வாசி மிகக் கடுமையாக உயர்ந் துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசியைக் கட்டுப் படுத்தும் வகையில் உணவுப் பொருள் அவசர நிலையை அரசு அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ஆர்ஜென்டீனா அதிபராக மவுரிசியோ மேக்ரி கடந்த 2015-ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து விலைவாசி அதிக அள வில் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரது ஆட்சியில் மின் கட்டணங்கள் 2.1 சதவீதமும், எரிபொருள்களின் விலை....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:30:03

அர்ஜென்டீனா அதிபர் பிப்.17இல் இந்தியா வருகை

அர்ஜென்டீனா அதிபர்  பிப்.17இல் இந்தியா வருகை

அர்ஜென்டீனா, பிப். 16- அர்ஜென்டீனா அதிபர் மவுரிசியோ மேக்ரி, 3 நாள் பயணமாக வரும் 17ஆம் தேதி இந்தியா வருகிறார். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆர்ஜென்டீனா அதிபருடன் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் பவுரி, வேளாண் துறை செயலர் லூயிஸ் எசெவ்கெரே, மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தியா வருகின்றனர்.அதிபரின் மனைவி  ஜூலியானா அவாடாவும் வருகிறார். ஈரடுக்கு விமானத்தின் தயாரிப்பை நிறுத்த ஏர்பஸ் முடிவு லண்டன், பிப். 16-....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:25:03

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தாய்லாந்து இளவரசி

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தாய்லாந்து இளவரசி

பாங்காக், பிப். 15- தாய்லாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முயன்றதற்காக, அந்நாட்டு இளவரசி உபோல் ரத்தனா மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  தாய்லாந்து மக்களுக்காக பணியாற்ற வேண் டும், உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட் டியிட முயன்றேன். ஆனால் அது பிரச்சினையை உருவாக் கும் என்று நான் எண்ணவில்லை. அதற்காக அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கி றேன் என்று....... மேலும்

15 பிப்ரவரி 2019 15:27:03

பிளாஸ்டிக் குப்பைகள் எரிப்பு: களமிறங்கிய கிராம மக்கள்

பிளாஸ்டிக் குப்பைகள் எரிப்பு: களமிறங்கிய கிராம மக்கள்

கோலாலம்பூர், பிப். 15- மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிக்கப்பட்டு எரிக்கப்படு கின்றன. இவை அனைத்தும் தொழிற் சாலைகளின் கழிவுகள் ஆகும். மேலும் பல நாடுகளில் இருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவிற்கு வந்து குவிந்துள்ளன. இவற்றை அகற்றும் முயற்சியில் ஜெஞ்ரோம் பகுதியைச் சேர்ந்த டேனி யல் டாய், டன் சிங் ஹின் ஈடுபட்டு உள்ளனர். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த பலரும் இவர்களுடன் இயற்கை சமூக ஆர்வலர்களாக இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும்....... மேலும்

15 பிப்ரவரி 2019 15:24:03

12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்

பாரிஸ், பிப். 15- ராணுவ வலி மையை மேலும் பலப்படுத்தும் நோக்கில், பிரான்சு நாட்டு நிறுவனத்திடம் இருந்து 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங் குவதற்கான ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திட் டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடியாகும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போட்டிபோட்டு வரு கின்றன. இந்நிலையில், தனது ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் நோக்கில், பிரான்சு நாட்டின் நிறுவனத்திடம் ஆஸ் திரேலியா....... மேலும்

15 பிப்ரவரி 2019 15:08:03

நைஜீரியா அதிபரின் பிரச்சார பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலி

நைஜீரியா அதிபரின் பிரச்சார பேரணியில்  கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலி

அபுஜா, பிப். 15- நைஜீரியா அதிபராக பதவி வகித்து வரும் முகமது புகாரியின் 4 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதை யொட்டி, நைஜீரியாவுக்கு வருகிற சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் புகாரி மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடு கிறார். அவருக்கு எதிராக முக்கிய போட்டியாளராக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், நைஜீரியா முன்னாள் துணை அதி பர் அட்டிக்கு அபுபக்கர் களமிறங்குகிறார். இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு அதிபர் முகமது புகாரி தலைமையில்....... மேலும்

15 பிப்ரவரி 2019 15:08:03

சர்வதேச உதவிகளை வெனிசுலா ராணுவம் தடுப்பது மனிதகுலத்துக்கு எதிரானது: குவாய்டோ

சர்வதேச உதவிகளை  வெனிசுலா ராணுவம் தடுப்பது  மனிதகுலத்துக்கு எதிரானது: குவாய்டோ

கராகஸ், பிப். 13- அண்டை நாடு களின் மனிதாபிமான உதவிகள் மக்களை சென்றடையாமல் வெனிசுலா ராணுவம் தடுப்பது மனிதகுலத்துக்கு எதிரான செயல் என அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அறி வித்துக் கொண்ட சுவான் குவாய்டோ தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான இவரை அந்த நாட்டின் இடைக்கால அதிப ராக அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இவருக்கும் அங்கு அதிபராக இருக்கும் நிகோலஸ் மடூரோவுக்கும் இடையேயான மோதல் வலுத்து....... மேலும்

14 பிப்ரவரி 2019 15:36:03

ஆப்கன் முன்னாள் அதிபர் முஜாதிதி காலமானார்

ஆப்கன் முன்னாள் அதிபர்  முஜாதிதி காலமானார்

ஆப்கன், பிப். 14- ஆப்கானிஸ் தானில் இருந்து சோவியத் ரசியா ராணுவம் திரும்பிச் சென்ற பிறகு 1992-ஆம் ஆண்டு முதலாவதாக அந்நாட்டின் அதிபராகப் பதவி யேற்ற சிப்ஹத்துல்லா முஜாதிதி (93) திங்கள்கிழமை காலமானார். கம்யூனிச எதிர்ப்பு கொரில்லா தலைவரான அவர், அமெரிக்கா வின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தா னில் ரசியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரப் போராடி அதில் வெற்றி பெற்றார். ஆப்கானிஸ்தான் தேசிய விடுதலை முன்னணி என்ற படையை அவர் உருவாக்கினார். அந்த காலகட்டத்தில்....... மேலும்

14 பிப்ரவரி 2019 15:29:03

வர்த்தகப் போர்: அமெரிக்காவுக்கு ஏஞ்சலா மெர்கல் எச்சரிக்கை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெர்லின், ஜூலை 6- அய்ரோப்பிய யூனிய னில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மிரட்டுவது வர்த்தகப் போர் பிரச் சினையை மேலும் அதிகரிக்குமே தவிர குறைக்காது என்று அமெரிக்காவுக்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க வர்த்தக நலன்களை பாது காப்பதாகக் கூறி, பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரியை அதிபர் டிரம்ப் உயர்த்தி வரு கிறார். முக்கியமாக, இந்த விவகாரத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவும் இடையே நேரடியான வர்த்தகப் போர் ஏற்பட்டது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அதன் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளான அய்ரோப்பிய யூனியன், தென் கொரி யாவுக்கும் தலைவலியை ஏற்படுத்தி யுள்ளது. இதனால் சர்வதேச அளவில் பெரும் பொருளாதாரப் பதற்றம் ஏற் பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வர்த்தக நலன்களுக்கு சீனா எந்த அளவுக்கு பாதகமாக இருந்ததோ, அதே அளவுக்கு அய்ரோப்பிய யூனியன் நாடுகளும் பாத கமாக உள்ளன; எனவே, அய்ரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு கூடுதல் வரி விதிப்பது குறித்து தீவிர மாக பரிசீலித்து வருவதாக தெரிவித் தார். அய்ரோப்பிய யூனியன் நாடுகளில் ஜெர்மனியில் இருந்துதான் அமெரிக்கா வுக்கு அதிக அளவிலான கார்கள் ஏற்று மதி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், அமெரிக்காவுக்கு பொருள் கள் இறக்குமதி செய்து அதிக நிதி திரட் டும் நாடுகளிலும் ஜெர்மனி முன்னிலை யில் உள்ளது. எனவே, டிரம்ப்பின் இந்த அறிவிப்பு ஜெர்மனியின் வர்த்தக நலன்களை வெகுவாக பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஜெர்மனி பிர தமர் ஏஞ்சலா மெர்கல் அந்நாட்டு நாடா ளுமன்றத்தில் பேசியதாவது:

ஏற்கெனவே, அய்ரோப்பிய யூனிய னில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியப் பொருள்களுக் கான வரியை அமெரிக்கா அதிகரித்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலி ருந்து இறக்குமதி செய்யப்படும் ஜீன்ஸ், ஹார்லி - டேவிட்சன் மோட்டார் சைக் கிள்களுக்கான வரியை அய்ரோப்பிய யூனியன் அதிகரித்துள்ளது. இதனால், இருதரப்பின் வர்த்தக நலன்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கார்களுக்கு வரியை அதிகரிப்பதாகக் கூறுவது, வர்த்தகப் போரை மேலும் அதிகரிக்குமே தவிர குறைக்காது. மேலும், அமெரிக்கா பொருள் கள் அடிப்படையிலான வர்த்தகத்தை மட்டுமே கணக்கில் கொள்கிறது. அமெ ரிக்காவிடம் இருந்து அய்ரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு சேவை களைப் பெற்று வருகின்றன. அவற்றை யும் சேர்த்து கணக்கிட்டுப் பார்த்தால் அமெரிக்காதான் அய்ரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து அதிக அளவில் பணப் பயன்களைப் பெற்று வருகிறது என்பது தெரியவரும்.

அமெரிக்க அதிபர் மிகவும் பழை மையான முறையில் வர்த்தக விஷ யத்தை அணுகுகிறார் என்று மெர்கல் தெரிவித்தார். முன்னதாக, அமெரிக்கா வைச் சேர்ந்த அமேசான், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள், அய் ரோப்பிய யூனியன் நாடுகளில் மிகக் குறைந்த வரி செலுத்தி மிகுந்த வருவாய் ஈட்டி வருகின்றன; அவற்றுக்கு டிஜிட் டல் வரி விதிக்க பரிசீலிக்கலாம் என்று மெர்கல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner