முன்பு அடுத்து Page:

பின்லேடன் பாதுகாவலருக்கு ஜெர்மனியில் அனுமதி மறுப்பு

பெர்லின், ஆக. 16- அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கி இருந்தபோது அமெ ரிக்க கடற்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது பாதுகாவலராக சமி ஏ என்பவர் இருந்தார். துனிசியா நாட்டை சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மனியில் தஞ்சம் அடைந் துள்ளார். தனக்கு குடியுரிமை வழங்கும்படி அந்நாட்டு அரசி டம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பலமுறை வலி யுறுத்தியும் இவர் ஒரு பயங்க ரவாதி....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 17:35:05

பெய்ஜிங்கில் உலக தத்துவ காங்கிரசு மாநாடு!

பெய்ஜிங், ஆக. 16- உலக தத்துவ காங்கிரசு மாநாடு திங்கள்கிழமை சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது. உலக தத்துவ காங்கிரசு மாநாடு முதன்முதலில் 1900-ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடை பெற்றது. உலகம் முழுவதிலும் மிகப்பெரிய தத்துவ நிகழ்வு களில் ஒன்றாக இது திகழ்கிறது. அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்நிகழ்வு பெய்ஜிங்கில் நடப்பது இதுவே முதல் முறை. இம்மாநாட்டில் மனிதனாக கற்றுக் கொள்ளுதல் என்ற பொருளிலில் சொற்பொழிவுகள், விரிவுரைகள்....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 17:34:05

சூரியனுக்கு 11 லட்சம் பெயர்களை சுமந்து சென்ற ராக்கெட்

சூரியனுக்கு 11 லட்சம் பெயர்களை சுமந்து சென்ற ராக்கெட்

நியூயார்க், ஆக. 16- சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மய்யம் பார்கர் சோலார் புரோப் எனப்படும் விண்கலத்தை நேற்று முன்தினம் அனுப்பியது. இந்த விண்கலம் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. இதை உலகமே கொண்டாடி வருகிறது. இதுவரை சூரியனை மிக அருகில் செல்லும் வகை யில் யாரும் ராக்கெட்டை அனுப்பியதில்லை. ஒரு மணி நேரத்தில் 4 லட்சத்து 30 ஆயி ரம் மைல் கல் தூரம் செல்லும்....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 17:34:05

நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்த விபத்து: பல வாகனங்கள் சேதம்

நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்த விபத்து: பல வாகனங்கள் சேதம்

ரோம், ஆக. 16- இத்தாலி நாட்டின் வடமேற்கில் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஜெனோவா நகரம் அமைந்துள்ளது. மலை களுக்கு இடையில் கான்கிரீட் தூண்களை அமைத்து அவற் றின் மீது உருவாக்கப்பட்டுள்ள சாலைகள் வழியாகதான் இங்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இடை யில் சில வாய்க்கால் மற்றும் கால்வாய் பாலங்களும் உள்ளன. இந்நிலையில், ஜெனோவா நகரின் மேற்கில் பிரபல தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள கி10 நெடுஞ்சாலையில் இருக்கும் மோரான்டி என்னும் மேம்பாலத்தின்....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 16:50:04

அமெரிக்க மின்னணுப் பொருள்களை புறக்கணிக்கிறது துருக்கி

அமெரிக்க மின்னணுப் பொருள்களை புறக்கணிக்கிறது துருக்கி

அங்காரா, ஆக. 16- அமெரிக்க மின்னணுப் பொருள்களை புறக்கணிக்கப் போவதாக துருக்கி அறிவித்துள்ளது. தங்கள் நாட்டின் மீது அமெ ரிக்கா விதித்துள்ள பொருளா தாரத் தடைகளுக்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதி கரித்துள்ளதாகக் கூறப்படு கிறது. இதுகுறித்து துருக்கி தொலைக் காட்சிகளில் செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பான உரையில் எர் டோகன் கூறியதாவது: துருக்கியின் பொருளாதா ரத்தை நிலைகுலையச் செய்யும் வகையில் அமெரிக்கா விதித் துள்ள....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 16:50:04

இலண்டனில் கலைஞருக்கு நினைவேந்தல்

இலண்டனில் கலைஞருக்கு நினைவேந்தல்

லண்டன், ஆக. 15- கலைஞர் அவர் களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியை லண்டன் 'தமிழர் முன்னேற்றக் கழகம்' ஒருங் கிணைத்தது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழீழத் தமிழர்களும் ஒருங்கே கலந்துகொண்டு கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்தினர். த.மு.க தலைவர் நாகதேவன், செயலாளர் அன்பழகன், பாதுகாப்பு மன்றத் தலைவர் தேவதாஸ், த.மு.க திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தவமணி மனோகரன் ஆகியோர் கலைஞரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் பால் சத்தியநேசன்,....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 16:11:04

அமெரிக்காவில் கலைஞர் அவர்கட்கு நினைவேந்தல்

அமெரிக்காவில் கலைஞர் அவர்கட்கு நினைவேந்தல்

அமெரிக்கா, ஆக. 15- கலைஞரின் மறைவையொட்டி அமெரிக்காவின் பல நகரங்களில் தமிழ்ச் சங்கங்கள் மற்ற அமைப்புகள் மரியாதை செய்து வருகின்றனர். அரசியல் மற்ற வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக இணைந்து மரி யாதை செய்வது அவரது தமிழ்,தமிழினத் தொண்டின் சிறப்பாக அமைந்தது. நியூசெர்சி, சிகாகோ, கன்னெக்டிகட், டெக்சாசு,கலிபோர்னியா, வாசிங்டன் என்று பல ஊர்களிலும் நேரடியாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி யும், செலுத்த ஏற்பாடுகள் செய்தும் தங்கள் நெஞ்சத்தில் நிறைந்துள்ள கலை ஞர் பற்றிய....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 15:23:03

நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 6 பேர் பலி

நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 6 பேர் பலி

இசுலாமாபாத், ஆக. 15- பாகிஸ் தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தலைநகர் குவெட்டாவில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சஞ்சாடி பகுதியில்  இயங்கி வரும் நிலக்கரி சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர் கள் வேலை செய்து கொண்டி ருந்தனர். சுமார் 4 ஆயிரம் அடி ஆழத் தில் அவர்கள் பணியில் இருந்த போது திடீரென்று பூமியின் அடியில் இருந்து பெருமளவில் கசிந்த மீத்தேன் வாயுவினால் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கத்தின்....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 14:39:02

பாகிஸ்தான்: இம்ரான் உள்பட 329 எம்.பி.க்கள் பதவியேற்பு

  பாகிஸ்தான்: இம்ரான் உள்பட 329 எம்.பி.க்கள் பதவியேற்பு

    இசுலாமாபாத், ஆக. 15- பாகிஸ்தானின் 15-ஆவது நாடாளுமன்றம் திங்கள் கிழமை முதல் முறையாகக் கூடியது. கடந்த மாதம் 25-ஆம் தேதி நடை பெற்ற பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட 329 உறுப்பினர்கள், அந்தக் கூட்டத்தில் பதவியேற்றனர். நாட்டின் அடுத்த பிரதமராகத் தேர்ந் தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப் படும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலை வருமான இம்ரான் கானும் பதவியேற்ற உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் வரலாற்றில், ஜனநாயக முறையில் ஆட்சி....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 14:39:02

36 ஆண்டுகள் கைதியாக வாடிய இந்தியர் விடுதலையாகி தாயகம் திரும்பினார்

      36 ஆண்டுகள் கைதியாக வாடிய இந்தியர் விடுதலையாகி தாயகம் திரும்பினார்

இசுலாமாபாத், ஆக. 15- பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத் தையொட்டி அந்நாட்டின் சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டுள்ள 26 மீனவர்கள் உள்பட 29 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்தது. அவர்கள் நேற்று இந்திய எல்லைப்பகுதியான அட்டாரி-வாகா எல்லைப்பகுதிக்கு இன்று பேருந்து மூலம் அழைத்து வரப்பட்டனர். விடுதலை ஆனவர்களில் ஒருவரான கஜானந்த் சர்மா கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து திடீரென்று....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 14:39:02

வங்காளதேசத்தில் பிரபல எழுத்தாளர் சுட்டுக்கொலை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டாக்கா, ஜூன் 13- வங்காள தேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு (வயது 60). இவர் பிஷாகா புராக்காசோனி என்ற பதிப்பகத் தையும் நடத்தி வருகிறார். மதச்சார்பற்ற கொள்கைகள் பற்றி துணிச்சலுடன் தனது கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

இவர் நேற்று முன்தினம் தனது பூர்வீக கிராமமான ககால்டியில் இருந்தார். அங்கு அவர் நோன்பு திறப்புக்கு முன் பாக ஒரு மருந்துக்கடைக்கு, தனது நண்பர்களை சந்திப்பதற் காக சென்று இருந்தார்.

அப்போது அங்கே 2 மோட் டார் சைக்கிள்களில் 5 நபர்கள் வந்தனர். அவர்கள் ஷாஜகான் பாச்சு இருந்து கொண்டிருந்த மருந்துக்கடையின் மீது கச்சா வெடிகுண்டுகளை வீசினார் கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் கள் மருந்துக்கடையில் இருந்த ஷாஜகான் பாச்சுவை தரதர வென்று வெளியே இழுத்து வந்தனர். அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி விட்டு அங்கு இருந்து தப்பினர்.

இதில் அவர் சம்பவ இடத் திலேயே ரத்த வெள்ளத்தில் பிணம் ஆனார்.

இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. மதச் சார்பற்ற கொள்கைக்கு அவர் ஆதரவாக பேசி வந்ததால் பல முறை அவருக்கு மத அடிப் படைவாத அமைப்புகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்து உள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பயங்கரவாத தடுப்பு காவல் படையினர் அங்கு விரைந்து, ஷாஜகான் பாச்சு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட ஷாஜகான் பாச்சு, வங்காளதேச கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆவார்.

வங்காளதேசத்தில் மதச்சார் பின்மைக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள், எழுதுகிறவர் கள், வலைத்தள பதிவாளர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner