முன்பு அடுத்து Page:

கலிதா ஜியாவின் பிணையை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

  கலிதா ஜியாவின் பிணையை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

டாக்கா, ஆக. 14- வங்காளதேசத் தில் கடந்த 2015ஆ-ம் ஆண்டு அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான தேசியவாத கட்சி மற் றும் தேசியவாத ஜமாத் கூட் டணி அழைப்பு விடுத்தது. நாடு தழுவிய அளவில் நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த தொடர் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையின் போது 3-.2.-2015 அன்று கொமில்லா மாவட்டம், சிட்டாகாங் பகுதி யில் அடையாளம் தெரியாத நபர்களால்....... மேலும்

14 ஆகஸ்ட் 2018 14:49:02

சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவியது அமெரிக்கா

  சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவியது அமெரிக்கா

வாசிங்டன், ஆக. 14- வெப்ப கிரகமான சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை திரட்டிவர கடந்த 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் ‘ஹீலியோஸ் 1’ மற்றும் ‘ஹீலியோஸ் 2’ செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட் டாக விண்ணில் செலுத்தின. பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற இந்த செயற்கைக்கோள்கள் சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. இதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய....... மேலும்

14 ஆகஸ்ட் 2018 14:28:02

2050ஆம் ஆண்டில் ஜகார்த்தா நகரம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  2050ஆம் ஆண்டில் ஜகார்த்தா நகரம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    இலண்டன், ஆக. 14- பருவ நிலை மாற்றம் காரணமாக வட துருவத்தில் உள்ள அண் டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகுகின்றன. கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது. இத்த கைய காரணங்களால் கடலோ ரத்தில் உள்ள நகரங்கள் கட லில் மெல்ல மெல்ல மூழ்கி வருகின்றன. அவற்றில் அதிவிரைவாக மூழ்கி வரும் நகரமாக இந் தோனேசியாவின் ஜகார்த்தா திகழ்கிறது. இங்கு 1 கோடி மக்கள் வசிக்கின்றனர். ஜாவா தீவில் இது அமைந்துள்ளது. இதன் மீது....... மேலும்

14 ஆகஸ்ட் 2018 14:28:02

சூரிய ஆய்வு செயற்கைக்கோள் ஏவுவதை நாசா ஒத்திவைத்தது

சூரிய ஆய்வு செயற்கைக்கோள் ஏவுவதை நாசா ஒத்திவைத்தது

  நியூயார்க், ஆக. 13- வெப்ப கிரகமான சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை திரட்டிவர கடந்த 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் ‘ஹீலியோஸ் 1’ மற்றும் ‘ஹீலியோஸ் 2’ செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக விண்ணில் செலுத்தின. பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற இந்த செயற்கைக்கோள்கள் சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்து தான் ஆய்வு செய்ய முடிந்தது. இதனால் உலக அழிவை ஏற்படுத் தக்கூடிய....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 14:44:02

மறைந்த உலக இலக்கியப் படைப்பாளி வி.எஸ்.நைப்பாலுக்கு நமது வீர வணக்கம் - இரங்கல்

மறைந்த உலக இலக்கியப் படைப்பாளி வி.எஸ்.நைப்பாலுக்கு நமது வீர வணக்கம் - இரங்கல்

நோபல் பரிசு பெற்ற பிரபல  ஆங்கில இலக்கிய மேதையும், டிரினிடாட் என்ற தீவில் பிறந்த இந்திய வம்சாவளியினருமான வி.எஸ்.நைப்பால் அவர்கள் இலண்டனில் தமது 85 ஆம்வயதில் காலமானார் என்பதை அறிவிந்து மிகவும் வருந்துகிறோம். அவர் சுமார் 30 புத்தகங்களுக்குமேல் எழுதியுள்ளார். 1989 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து தமிழ்நாட்டில் சென்னைக்கும் வந்து, நமது இயக்கம், தந்தை பெரியார், பெரியார் திடல், பெரியார் - அன்னை மணியம்மையார் மறைவிற்குப் பிறகு நமது கழகம்....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 14:42:02

வட - தென் கொரிய அதிபர்கள் சந்திப்பு அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை

  வட - தென் கொரிய அதிபர்கள் சந்திப்பு அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை

சியோல், ஆக.12 வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான மூன்றாவது சந்திப்பு குறித்து விவாதிப்பதற்காக, இரு நாட்டு அதிகாரிகளும் வரும் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டொ னால்ட் டிரம்ப்புக்கும், கிம் ஜோங்-உனுக்கும் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தனது அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரியா ஒப்புக் கொண்டது. பதிலுக்கு வட கொரியா மீதான பொருளா....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 14:38:02

பொருளாதாரத் தடை விதித்தால் கடுமையான பதிலடி: அமெரிக்காவுக்கு ரசியா எச்சரிக்கை

பொருளாதாரத் தடை விதித்தால் கடுமையான பதிலடி: அமெரிக்காவுக்கு ரசியா எச்சரிக்கை

மாஸ்கோ, ஆக.12 தங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தால், அதற்கு அனைத்து விதங்களிலும் கடுமையான பதிலடி தரப்படும் என்று அமெரிக்காவுக்கு ரசியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரசியப் பிரதமர் டிமித்ரி மெத்வெடேவ் தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பிரிட்டனில், முன்னாள் ரசிய உளவாளி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, எங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்தத் தடைகளின் ஒரு பகுதியாக, ரசிய அரசுக் கட்டுப் பாட்டில் உள்ள....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 14:38:02

பாகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சி மற்றும் நிதிக்கு தடை அமெரிக்கா நடவடிக்கை

பாகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சி மற்றும் நிதிக்கு தடை அமெரிக்கா நடவடிக்கை

  வாசிங்டன், ஆக.12 பாகிஸ் தானுக்கு அளித்து வரும் கூட்டு ராணுவப் பயிற்சி மற்றும் பயங்கரவாதத்தை ஒழிக்க அளித்து வரும் 2 பில்லியன் நிதி ஆகியவற்றுக்கு தடை விதித்து அமெரிக்கா நடவ டிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை ஒழிக்க அமெரிக்க அரசால் ஆண்டு தோறும் அளித்து வரப்பட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி மற்றும் பாகிஸ் தான் ராணுவ வீரர்களுக்கான கூட்டு ராணுவப் பயிற்சி ஆகியவற்றுக்கு அமெரிக்க அரசு தடை....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 14:38:02

பகிரங்கமாக வாக்களித்த விவகாரம் எழுத்து மூலம் மன்னிப்பு கேட்டார் இம்ரான்

  பகிரங்கமாக வாக்களித்த விவகாரம் எழுத்து மூலம் மன்னிப்பு கேட்டார் இம்ரான்

இசுலாமாபாத், ஆக.12 பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பகிரங்கமாக வாக்களித்ததற்காக, அந்த நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் இம்ரான்கான் தேர்தல் ஆணையத்திடம் எழுத்து மூலம் மன்னிப்பு கேட்டார். இந்த மன்னிப்புக் கடிதத்தை ஏற்க பெரும்பான்மை தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில், இம்ரானின் மன்னிப்பை ஏற்க 3 உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டதாகவும், ஒரு உறுப்பினர் மன்னிப்பை ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்தது. இம்ரானின்....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 14:38:02

நச்சுத் தாக்குதல் விவகாரம்: ரசியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

நச்சுத் தாக்குதல் விவகாரம்: ரசியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

வாசிங்டன், ஆக. 11- பிரிட்டனில் முன்னாள் ரசிய உளவு அதிகாரி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப் பட்டது தொடர்பாக, ரசியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்போவதாக அமெ ரிக்கா அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் செய்தித் தொடர்பாளர் ஹீதர் நாவெர்ட் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: பிரிட்டன் குடியுரிமை பெற்ற செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஸ்கிரி பால் மீது கடந்த மார்ச் மாதம் நச்சுத்....... மேலும்

11 ஆகஸ்ட் 2018 15:35:03

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டுபிடிப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நியூயார்க், ஜூன் 11- அமெரிக்காவின் நாசா விண்வெளி மய்யம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தில் நகர்ந்து சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் பூமியில் இருப்பது போன்று 3 பொருட் களை செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளது. அவற்றில் அதிக அளவில் மீத்தேன் உள்ளது.

பெரும்பாலும் ஒரு காலத்தில் உயிர் இருந்த பொருட்களின் மீதிகளில் தான் மீத்தேன் வாயு இருக்கும். எனவே இந்த பொருட்களுக்கு உயிர் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியை கியூரியாசிட்டி தோண்டியிருக்கிறது. பெரிய அளவில் தோண்டாமல் வெறும் 5 செ.மீட்டர் மட்டுமே தோண்டியுள்ளது. இதை வைத்து இன்னும் பல மாதங்களுக்கு ஆய்வு செய்ய நாசா முடிவெத்து உள்ளது.

ஏவுகணை தாக்குதல்

பொதுமக்கள் 2 பேர் பலி

ரியாத், ஜூன் 11- ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரான் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், ஏமனில் இருந்து சவுதி அரேபியா நோக்கி ஹவுத்தி புரட்சி படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner