முன்பு அடுத்து Page:

வடகொரிய தலைவருடன் இரண்டாம் கட்ட சந்திப்பு

வடகொரிய தலைவருடன் இரண்டாம் கட்ட சந்திப்பு

வாசிங்டன், செப். 26- உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண் டம் விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரி சோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொரு ளாதார தடைகளை சந்தித்தது. இதைத்தொடர்ந்து, தென் கொரியா எடுத்த முயற்சியின் பலனாகத்தான் வட, தென் துருவங்கள் போன்று விளங்கி வந்த அமெரிக்க அதிபர் டிரம் பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ஜூன் மாதம்....... மேலும்

26 செப்டம்பர் 2018 16:23:04

ரோகிங்கயா விவகாரத்தில் தலையிட அய்.நா.வுக்கு உரிமை இல்லை: மியான்மா ராணுவ தளபதி

மியான்மா, செப். 26- மியான்மா வின் ரோகிங்கயா சிறுபான்மையினத்தவர் விவகாரத்தில் தலையிட அய்.நா.வுக்கு உரிமை இல்லை என்று அந்த நாட்டு ராணுவ தலைமைத் தளபதி மின் ஆங் லாய்ங் தெரிவித்து உள்ளார். ரோகிங்கயாக்கள் படு கொலை செய்யப்பட்டது தொடர் பாக மியான்மா ராணுவ அதி காரிகள் மீது சர்வதேச நீதிமன் றத்தில் போர்க் குற்ற விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்று அய்.நா. கூறியிருந்த நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்....... மேலும்

26 செப்டம்பர் 2018 16:23:04

இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனு: பாக். உச்சநீதிமன்றம் தள்ளுபடி

இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனு: பாக். உச்சநீதிமன்றம் தள்ளுபடி

இசுலாமாபாத், செப். 26- பாகிஸ்தானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யுமாறு கடந்த ஆண்டு மே மாதம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவர் எம்.பி.யாக இருந்தார். அந்த மனுவில் எம்.பி. மனுத்தாக்கலின் போது அவர் தனது பிள்ளையின் பெயரை குறிப்பிடவில்லை இதனால் அவர் அரசின் விதிமுறைகளுக்கு உண்மையாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி....... மேலும்

26 செப்டம்பர் 2018 16:23:04

பாகிஸ்தானில் ஆணவக் கொலை: 2 பேர் கைது

லாகூர், செப். 26- பாகிஸ்தானில், பெற்றோர் சம்மதம் இன்றி காதலித்த, 18 வயது மகள் மற்றும் அவரது, 21 வயது காதலனை, பெண்ணின் தந்தை மற்றும் அவரின் உறவினர், மின் கம்பத்தில் கட்டி வைத்தனர். பின், மகள் மற்றும் அவரது காதலனை, கூரான ஆயுதத்தால் தாக்கி, கொலை செய்தனர். ஆணவக் கொலையில் ஈடுபட்ட, பெண்ணின் தந்தை மற்றும் உறவினர் ஒருவரை, காவல்துறையினர் கைது செய்தனர். மேலும்

26 செப்டம்பர் 2018 16:23:04

நேபாளத்தில் புதி கண்டகி நீர்மின் திட்டம் மீண்டும் அமுல்படுத்த புதிய அரசு முடிவு

நேபாளத்தில் புதி கண்டகி நீர்மின் திட்டம் மீண்டும் அமுல்படுத்த புதிய அரசு முடிவு

காத்மாண்டு, செப். 26-  நேபா ளத்தில் கடும் மின் தட்டுப் பாடு நிலவுகிறது. அதை சரி கட்ட அண்டை நாடான இந் தியாவிடம் இருந்து மின்சாரம் விலைக்கு வாங்கப்படுகிறது. எனவே முன்னாள் பிரதமர் சேர் பகதுர் துமே தலைமையிலான அரசு புதி கண்டகி நீர்மின் திட்டத்தை தொடங்க திட்டமிட்டது. அதன் மூலம் 1200 மெகா வாட் மின்சாரம் தயாரித்து உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. பின்னர் நடத்திய ஆய்வில்,....... மேலும்

26 செப்டம்பர் 2018 16:23:04

தான்சானியா படகு விபத்து: பலி எண்ணிக்கை 209-ஆக உயர்வு

தான்சானியா படகு விபத்து:  பலி எண்ணிக்கை 209-ஆக உயர்வு

தான்சானியா, செப். 25- தான் சானியாவில் வியாழக்கிழமை ஏற்பட்ட படகு விபத்தில் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 209-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் அய்சக் காம் வெல்வே கூறியுள்ளதாவது: விக்டோரியா ஏரியில் வியா ழக்கிழமை பயணிகளை ஏற் றிச் சென்ற படகு தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 209-ஆக அதிகரித்துள்ளது. இதில், 172 பேரின் சடலங் கள் உறவினர்களால் அடையா ளம் காணப்பட்டுள்ளன. மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள் ளனர்........ மேலும்

25 செப்டம்பர் 2018 15:39:03

விண்கல் மீது ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி ஜப்பான் சாதனை

விண்கல் மீது ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி ஜப்பான் சாதனை

டோக்கியோ, செப். 25-  ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறு வனமான ஜாக்சா கடந்த 2014 ஆண்டு,  பூமிக்கு அருகே உள்ள ர்யுகு என்னும் விண்கல்லின் மாதிரிகளை சேகரிப்பதற்காக,  ஹயபுசா 2 என்னும் ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி ர்யுகுவைச் சென்றடைந்தது. இந்நிலையில்,  ஹயபுசா வில் பொருத்தபட்டிருந்த விமிழிணிஸிக்ஷிகி-மிமி 1 என்று  அழைக்கப்படும் 2 ஆளில்லா ரோவர் வின்கல் மீது கடந்த சனிக்கிழமை....... மேலும்

25 செப்டம்பர் 2018 15:33:03

48 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த இளைஞர் மீட்பு

48 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த இளைஞர் மீட்பு

ஜகார்தா, செப். 25- இந்தோனே சியாவில் 48 நாட்கள் நடுக் கடலில் தத்தளித்த இளைஞர் ஒருவர் இறுதியில் சரக்கு கப் பல் ஒன்றின் மூலம் மீட்கப் பட்ட கதை நிகழ்ந்துள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசி கடற்கரை பகுதியில் உள்ள ஒரி என்ற ஊரைச் சேர்ந்தவர் அல்டி நாவல் அடிலங் (19). மீனவ ரான இவர் மீன்பிடி கப்பல்க ளுக்கான மரத்தாலான நடுக் கடல் ‘மிதவை மீன்பிடிக் கூண்டு’ பராமரிப்பு பணியில் ஈடுபட்டு....... மேலும்

25 செப்டம்பர் 2018 15:18:03

ஈரானில் நடந்த தாக்குதலில் தொடர்பில்லை: அமெரிக்கா

ஈரானில் நடந்த தாக்குதலில் தொடர்பில்லை: அமெரிக்கா

வாசிங்டன், செப். 25- ஈரானில் நடந்த பயங்கரவாத தாக்குத லுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என தூதர் தெரிவித்துள்ளார். ஈரானின் குசேஸ்தான் மாகாணத்தில் உள்ள ஆவாஸ் நகரில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த ராணுவ அணிவகுப்பில் பயங்கரவாதிகள் கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 25 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு அய்.எஸ். பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலை அரபு நாடுகளுடன் துணையுடன் அமெரிக்கா நடத்தியதாக ஈரான் அதிபர் ரஹானி....... மேலும்

25 செப்டம்பர் 2018 15:18:03

கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி அஜ்லா டொம்ல்ஜானோவிச்சை வீழ்த்தி கிகி பெர்ட்டென்ஸ் வாகை சூடினார்

கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி  அஜ்லா டொம்ல்ஜானோவிச்சை வீழ்த்தி  கிகி பெர்ட்டென்ஸ் வாகை சூடினார்

சியோல், செப். 24- கொரியா ஓபன் டென்னிஸ் தொடர் தென்கொரியாவில் உள்ள சியோலில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. பெண்களுக் கான இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 2-ஆம் நிலை வீராங்கனை யான நெதர்லாந்தின் கிகி பெர்ட் டென்ஸ், தரநிலை பெறாத குரோசியாவின் அஜ்லா டொம்ல் ஜானோவிச்சை எதிர்கொண்டார். 2ஆ-ம் நிலை வீராங்கனை யான கிகி பெர்ட்டேன்ஸ்க்கு குரோசியா வீராங்கனை கடும் நெருக்கடி கொடுத்தார். இத னால்....... மேலும்

24 செப்டம்பர் 2018 16:30:04

இலங்கை பிரதமருடன் இந்திய ராணுவ தளபதி சந்திப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, மே 15- இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றார்.  இந்திய ராணுவ தளபதியாக அவர் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும்.

இலங்கை சென்ற அவருக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் முதல் நாளான நேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு பாதுகாப்பு குறித்து இரு வரும் விவாதித்தனர். அதன்பின் இலங்கை ராணுவ தளபதி மகேஷ் செனநாயகே, கடற்படை தளபதி எஸ்.எஸ்.ரணசிங்கே மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபிலா வைத்யரத்னே ஆகியோரையும் பிபின் ராவத் சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து இன்று கண்டி பகுதியில் இந்திய ராணுவத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு ஆய்வுகூடத்தை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, தியட்டலாவா பகுதியில் அமைந்துள்ள இலங்கை ராணுவ பயிற்சி மய்யத்தை பார்வையிடுகிறார். கண்டி மற்றும் திரிகோணமலை பகுதியில் இலங்கையின் பிராந்திய ராணுவ தளபதிகளை அவர் சந்திக்கிறார்.

ஓமனுக்கான புதிய இந்திய தூதராக நியமனம்

மஸ்கட், மே 15- மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓமன் நாட்டிற்கான இந்திய தூதராக இந்திரமணி பாண்டே இருந்து வருகிறார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்டு 10-ஆம் தேதி முதல் மஸ்கட் இந்திய தூதரகத்தில் பொறுப்பேற்று பதவி வகித்து வருகிறார். இவரது பொறுப்பு காலத்தில் இந்திய தொழிலாளர் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திரமணி பாண்டே டில்லியில் உள்ள வெளியுறவுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ஓமனுக்கான புதிய தூதராக முனு மஹாவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது வெளியுறவுத்துறையில் இணை செயலாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஓமனுக்கான இந்திய தூதராக முனு மஹாவர் விரைவில் பொறுப்பேற்பார். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளி யிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner