முன்பு அடுத்து Page:

வடகொரிய தலைவருடன் இரண்டாம் கட்ட சந்திப்பு

வடகொரிய தலைவருடன் இரண்டாம் கட்ட சந்திப்பு

வாசிங்டன், செப். 26- உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண் டம் விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரி சோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொரு ளாதார தடைகளை சந்தித்தது. இதைத்தொடர்ந்து, தென் கொரியா எடுத்த முயற்சியின் பலனாகத்தான் வட, தென் துருவங்கள் போன்று விளங்கி வந்த அமெரிக்க அதிபர் டிரம் பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ஜூன் மாதம்....... மேலும்

26 செப்டம்பர் 2018 16:23:04

ரோகிங்கயா விவகாரத்தில் தலையிட அய்.நா.வுக்கு உரிமை இல்லை: மியான்மா ராணுவ தளபதி

மியான்மா, செப். 26- மியான்மா வின் ரோகிங்கயா சிறுபான்மையினத்தவர் விவகாரத்தில் தலையிட அய்.நா.வுக்கு உரிமை இல்லை என்று அந்த நாட்டு ராணுவ தலைமைத் தளபதி மின் ஆங் லாய்ங் தெரிவித்து உள்ளார். ரோகிங்கயாக்கள் படு கொலை செய்யப்பட்டது தொடர் பாக மியான்மா ராணுவ அதி காரிகள் மீது சர்வதேச நீதிமன் றத்தில் போர்க் குற்ற விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்று அய்.நா. கூறியிருந்த நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்....... மேலும்

26 செப்டம்பர் 2018 16:23:04

இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனு: பாக். உச்சநீதிமன்றம் தள்ளுபடி

இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனு: பாக். உச்சநீதிமன்றம் தள்ளுபடி

இசுலாமாபாத், செப். 26- பாகிஸ்தானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யுமாறு கடந்த ஆண்டு மே மாதம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவர் எம்.பி.யாக இருந்தார். அந்த மனுவில் எம்.பி. மனுத்தாக்கலின் போது அவர் தனது பிள்ளையின் பெயரை குறிப்பிடவில்லை இதனால் அவர் அரசின் விதிமுறைகளுக்கு உண்மையாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி....... மேலும்

26 செப்டம்பர் 2018 16:23:04

பாகிஸ்தானில் ஆணவக் கொலை: 2 பேர் கைது

லாகூர், செப். 26- பாகிஸ்தானில், பெற்றோர் சம்மதம் இன்றி காதலித்த, 18 வயது மகள் மற்றும் அவரது, 21 வயது காதலனை, பெண்ணின் தந்தை மற்றும் அவரின் உறவினர், மின் கம்பத்தில் கட்டி வைத்தனர். பின், மகள் மற்றும் அவரது காதலனை, கூரான ஆயுதத்தால் தாக்கி, கொலை செய்தனர். ஆணவக் கொலையில் ஈடுபட்ட, பெண்ணின் தந்தை மற்றும் உறவினர் ஒருவரை, காவல்துறையினர் கைது செய்தனர். மேலும்

26 செப்டம்பர் 2018 16:23:04

நேபாளத்தில் புதி கண்டகி நீர்மின் திட்டம் மீண்டும் அமுல்படுத்த புதிய அரசு முடிவு

நேபாளத்தில் புதி கண்டகி நீர்மின் திட்டம் மீண்டும் அமுல்படுத்த புதிய அரசு முடிவு

காத்மாண்டு, செப். 26-  நேபா ளத்தில் கடும் மின் தட்டுப் பாடு நிலவுகிறது. அதை சரி கட்ட அண்டை நாடான இந் தியாவிடம் இருந்து மின்சாரம் விலைக்கு வாங்கப்படுகிறது. எனவே முன்னாள் பிரதமர் சேர் பகதுர் துமே தலைமையிலான அரசு புதி கண்டகி நீர்மின் திட்டத்தை தொடங்க திட்டமிட்டது. அதன் மூலம் 1200 மெகா வாட் மின்சாரம் தயாரித்து உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. பின்னர் நடத்திய ஆய்வில்,....... மேலும்

26 செப்டம்பர் 2018 16:23:04

தான்சானியா படகு விபத்து: பலி எண்ணிக்கை 209-ஆக உயர்வு

தான்சானியா படகு விபத்து:  பலி எண்ணிக்கை 209-ஆக உயர்வு

தான்சானியா, செப். 25- தான் சானியாவில் வியாழக்கிழமை ஏற்பட்ட படகு விபத்தில் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 209-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் அய்சக் காம் வெல்வே கூறியுள்ளதாவது: விக்டோரியா ஏரியில் வியா ழக்கிழமை பயணிகளை ஏற் றிச் சென்ற படகு தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 209-ஆக அதிகரித்துள்ளது. இதில், 172 பேரின் சடலங் கள் உறவினர்களால் அடையா ளம் காணப்பட்டுள்ளன. மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள் ளனர்........ மேலும்

25 செப்டம்பர் 2018 15:39:03

விண்கல் மீது ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி ஜப்பான் சாதனை

விண்கல் மீது ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி ஜப்பான் சாதனை

டோக்கியோ, செப். 25-  ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறு வனமான ஜாக்சா கடந்த 2014 ஆண்டு,  பூமிக்கு அருகே உள்ள ர்யுகு என்னும் விண்கல்லின் மாதிரிகளை சேகரிப்பதற்காக,  ஹயபுசா 2 என்னும் ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி ர்யுகுவைச் சென்றடைந்தது. இந்நிலையில்,  ஹயபுசா வில் பொருத்தபட்டிருந்த விமிழிணிஸிக்ஷிகி-மிமி 1 என்று  அழைக்கப்படும் 2 ஆளில்லா ரோவர் வின்கல் மீது கடந்த சனிக்கிழமை....... மேலும்

25 செப்டம்பர் 2018 15:33:03

48 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த இளைஞர் மீட்பு

48 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த இளைஞர் மீட்பு

ஜகார்தா, செப். 25- இந்தோனே சியாவில் 48 நாட்கள் நடுக் கடலில் தத்தளித்த இளைஞர் ஒருவர் இறுதியில் சரக்கு கப் பல் ஒன்றின் மூலம் மீட்கப் பட்ட கதை நிகழ்ந்துள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசி கடற்கரை பகுதியில் உள்ள ஒரி என்ற ஊரைச் சேர்ந்தவர் அல்டி நாவல் அடிலங் (19). மீனவ ரான இவர் மீன்பிடி கப்பல்க ளுக்கான மரத்தாலான நடுக் கடல் ‘மிதவை மீன்பிடிக் கூண்டு’ பராமரிப்பு பணியில் ஈடுபட்டு....... மேலும்

25 செப்டம்பர் 2018 15:18:03

ஈரானில் நடந்த தாக்குதலில் தொடர்பில்லை: அமெரிக்கா

ஈரானில் நடந்த தாக்குதலில் தொடர்பில்லை: அமெரிக்கா

வாசிங்டன், செப். 25- ஈரானில் நடந்த பயங்கரவாத தாக்குத லுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என தூதர் தெரிவித்துள்ளார். ஈரானின் குசேஸ்தான் மாகாணத்தில் உள்ள ஆவாஸ் நகரில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த ராணுவ அணிவகுப்பில் பயங்கரவாதிகள் கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 25 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு அய்.எஸ். பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலை அரபு நாடுகளுடன் துணையுடன் அமெரிக்கா நடத்தியதாக ஈரான் அதிபர் ரஹானி....... மேலும்

25 செப்டம்பர் 2018 15:18:03

கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி அஜ்லா டொம்ல்ஜானோவிச்சை வீழ்த்தி கிகி பெர்ட்டென்ஸ் வாகை சூடினார்

கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி  அஜ்லா டொம்ல்ஜானோவிச்சை வீழ்த்தி  கிகி பெர்ட்டென்ஸ் வாகை சூடினார்

சியோல், செப். 24- கொரியா ஓபன் டென்னிஸ் தொடர் தென்கொரியாவில் உள்ள சியோலில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. பெண்களுக் கான இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 2-ஆம் நிலை வீராங்கனை யான நெதர்லாந்தின் கிகி பெர்ட் டென்ஸ், தரநிலை பெறாத குரோசியாவின் அஜ்லா டொம்ல் ஜானோவிச்சை எதிர்கொண்டார். 2ஆ-ம் நிலை வீராங்கனை யான கிகி பெர்ட்டேன்ஸ்க்கு குரோசியா வீராங்கனை கடும் நெருக்கடி கொடுத்தார். இத னால்....... மேலும்

24 செப்டம்பர் 2018 16:30:04

அமெரிக்கா விலகினாலும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிப்போம் - ஈரான் உறுதி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டெஹ்ரான், மே 14- மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்சு, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. ஈரான் அணு ஆயுத திட் டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண் டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற் கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும். இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 9ஆ-ம் தேதி அறிவித்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க பாசம் கொண்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஈரான் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், ரஷ்யா, சீனா மற்றும் அய்ரோப்பிய கண்டத் தில் உள்ள சில மேற்கத்திய நாடுகளும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற கூடாது என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை சந்தித்த ரவு கானி, இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியே றியது தர்மநெறிகளுக்கு எதி ரான செயல். அமெரிக்கா வில கினாலும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள அய்ந்து நாடுகளின் துணையுடன் நாங் கள் தொடர்ந்து நீடிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner