முன்பு அடுத்து Page:

வெனிசுலா துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு

   வெனிசுலா துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு

கராகஸ், ஜூன் 17- வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக கடந்த 2013-ஆம் ஆண் டில் இருந்து பதவி வகித்தார். சமீபத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடு நடப்ப தாக கூறி முக்கிய எதிர்க்கட்சி கள் தேர்தலை புறக்கணித்தன. இதையடுத்து அதிக சிரமம் இன்றி நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றினார். இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. மதுரோவின் வெற்றி....... மேலும்

17 ஜூன் 2018 13:40:01

முதல் முறையாக கருப்பினப் பெண் தேர்வு

சான்ஃபிரான்சிஸ்கோ: மேயர் பதவிக்கு   சான் ஃபிரான்சிஸ்கோ, ஜூன் 17- அமெ ரிக்காவின் சான் ஃபிரான் சிஸ்கோ நகர மேயர் பதவிக்கு, கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண் முதல் முறையாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். கலிஃ போர்னியா மாகாணத்தைச் சேர்ந்த சான் ஃபிரான்சிஸ்கோ நகர மேயர் தேர் தல் இந்த மாதம் 5-ஆம் தேதி நடை பெற்றது. இதில், சான் ஃபிரான்சிஸ்கோ நிர்வாக வாரியத்தின் தலை வராக உள்ள லண்டன் பிரீட் (43) போட்டியிட்டார். இந்தத்....... மேலும்

17 ஜூன் 2018 13:33:01

தேர்தலில் போட்டியிட முஷாரஃபுக்கு மீண்டும் தடை

தேர்தலில் போட்டியிட முஷாரஃபுக்கு மீண்டும் தடை

  இசுலாமாபாத், ஜூன் 16 பாகிஸ் தான் முன்னாள் அதிபர் முஷா ரஃப் தேர்தலில் போட்டியிடு வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது. இதையடுத்து, இந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பங்கேற்பதன் மூலம் மீண்டும் அரசியல் வாழ் வைத் தொடங்க முஷாரஃ புக்குக் கிடைத்த வாய்ப்பு கைநழுவிப் போனதாகக் கூறப்படுகிறது. தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக, முஷாரஃப் வாழ்நாள் முழுவதும்....... மேலும்

16 ஜூன் 2018 15:37:03

ஏவுதளங்களை அழிப்பது குறித்து கிம் ஜோங் உன் அறிவிப்பார்: டிரம்ப் தகவல்

ஏவுதளங்களை அழிப்பது குறித்து  கிம் ஜோங் உன் அறிவிப்பார்: டிரம்ப் தகவல்

  வாசிங்டன், ஜூன் 15- வட கொரி யாவில் உள்ள ஏவுதளங்களை அழிப்பது குறித்த அறிவிப்பை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன், அடுத்த சில நாள்களில் வெளியிடுவார் என்று அமெ ரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். கிம் ஜோங் உன்-னும், டிரம் பும் நேரில் சந்தித்துக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தேறி யது. அப்போது, கொரிய தீப கற்பத்தில் இருந்து அணு ஆயு தங்களை....... மேலும்

15 ஜூன் 2018 16:04:04

போர்க்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: அமைச்சரவை ஒப்புதல்

போர்க்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணம்: அமைச்சரவை ஒப்புதல்

கொழும்பு, ஜூன் 15- இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையே கடந்த 30 ஆண்டுகளாக போர் நடை பெற்று வந்தது. 2009-ஆம் ஆண்டு இந்த போர் முடிவடைந்தது. இதற்கிடையே, போர்க்கா லங்களில் காணாமல் போனவர் கள், போரில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள், படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்க ளுக்கு நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனி அலுவலகம் அமைக்க வேண்டும் என அய். நா.சபையின் மனித உரிமை அமைப்பு கோரிக்கை....... மேலும்

15 ஜூன் 2018 15:50:03

கவுதமாலா எரிமலை வெடிப்பு எதிரொலி - விமான சேவை முடக்கம்

கவுதமாலா எரிமலை வெடிப்பு எதிரொலி - விமான சேவை முடக்கம்

  கவுதமாலா சிட்டி, ஜூன் 15- கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள் ளனர். இந்நிலையில் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் காரணமாக அங்குள்ள விமான நிலையம் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கவுதமாலா பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளில் நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஃப்யூகோ எரிமலை மீண்டும்....... மேலும்

15 ஜூன் 2018 15:50:03

மலேசிய பள்ளிகளுக்கு பெரியாரியக்க நூல்கள்

மலேசிய பள்ளிகளுக்கு பெரியாரியக்க நூல்கள்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கி.வீரமணியின்கட்டுரைகள் அடங்கிய திருக்குறள் நூல்கள் கீழ்காணும் மலேசிய ஊர்களில் உள்ள தமிழ்பள்ளி மாணவர்களுக்கு திராவிட இயக்க பணி யாளரும், விவசாய நிர்வாகிகள் இயக்க தலைவருமான மு.கோவிந்தசாமி வழங்கினார். மலேசியா திராவிடர் கழக தோழர்கள், பெரியார் தொண்டர்கள் இரா.பெரியசாமி, கோ.ஆவுடையார், த.பரமசிவம், கு.கிருட் டிணன், கவிஞர் கு.க.இராமன், முன்னாள் மதிக தலைவர் ரேசு.முத்தையா ஆகியோர் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். மேண்டகப் தோட்டம், பகாங், பத்து அரங்,....... மேலும்

14 ஜூன் 2018 16:08:04

அமைச்சரவை விரிவாக்கம் தமிழர் உள்பட 7 பேர் புதிதாக சேர்ப்பு

அமைச்சரவை விரிவாக்கம் தமிழர் உள்பட 7 பேர் புதிதாக சேர்ப்பு

  கொழும்பு, ஜூன் 14- இலங்கை அதிபர் சிறிசேனா தனது அமைச் சரவை விரிவாக்கம் செய்துள் ளார். இதில், அந்நாட்டு பொதுத் தேர்தலில் ஆளும் இலங்கை சுதந்திரா கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ள ஒரே தமிழரான, திரிகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராம நாதன் உள்பட 7 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 7 பேரில், 2 பேர் அமைச்சர்களாகவும் 5 பேர் இணை அமைச்சர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ள னர். இவர்கள் அனைவரும்....... மேலும்

14 ஜூன் 2018 15:57:03

கவுதமாலா எரிமலை வெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்த பெண்

   கவுதமாலா எரிமலை வெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்த பெண்

கவுதமாலா சிட்டி, ஜூன் 14- கவு தமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித் துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற் பட்டோர் காணாமல் போயுள்ள னர். இந்நிலையில் எரிமலை சாம்பலில் சிக்கி யூஃபிமியா கார்சியா என்பவரின் உறவினர் கள் 50 பேர் காணாமல் போயுள் ளதாக தெரியவந்துள்ளது. 50 வயதான கார்சியாவுடன் 9 பேர் பிறந்துள்ளனர். மூன்று தலைமுறை கண்ட கார்சியா வின் 75....... மேலும்

14 ஜூன் 2018 15:57:03

வங்காளதேசத்தில் பிரபல எழுத்தாளர் சுட்டுக்கொலை

வங்காளதேசத்தில் பிரபல எழுத்தாளர் சுட்டுக்கொலை

டாக்கா, ஜூன் 13- வங்காள தேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு (வயது 60). இவர் பிஷாகா புராக்காசோனி என்ற பதிப்பகத் தையும் நடத்தி வருகிறார். மதச்சார்பற்ற கொள்கைகள் பற்றி துணிச்சலுடன் தனது கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது பூர்வீக கிராமமான ககால்டியில் இருந்தார். அங்கு அவர் நோன்பு திறப்புக்கு முன் பாக ஒரு மருந்துக்கடைக்கு, தனது நண்பர்களை சந்திப்பதற் காக சென்று இருந்தார். அப்போது அங்கே....... மேலும்

14 ஜூன் 2018 14:57:02

டிரம்ப்புக்கு பின்னடைவு: மாகாண ஆளுநர் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், நவ. 9- அமெரிக்காவின் வர் ஜீனியா, நியூ ஜெர்ஸி ஆகிய மாகாணங் களுக்கு செவ்வாய்க்கிழமை நடை பெற்ற ஆளுநர் தேர்தலிலும், நியூயார்க் நகர மேயர் தேர்தலிலும் எதிர்க்கட்சி யான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

இது, அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் அதிரடி நடவடிக்கைகளை அமெ ரிக்க மக்கள் நிராகரித்துள்ளதைக் காட்டு வதாக ஜனநாயகக் கட்சி தெரிவித்துள் ளது.

அமெரிக்காவின் அரசியல் முக்கியத் துவம் வாய்ந்த வர்ஜீனியா மாகாணத்தி லும், நியூ ஜெர்ஸி மாகாணத்திலும் புதிய ஆளுநரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற் றது. மேலும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொந்த ஊரான நியூயார்க் நகர மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் அதே நாளில் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட வர்ஜீனியா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ரால்ஃப் நார்தாம், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட் பாளர் எட் கிலஸ்பியை 9 சதவீத புள்ளி கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்றார்.

தலைநகர் வாஷிங்டனையொட்டிய இந்த மாகாணத்தில் நடைபெறும் தேர் தல்கள்தான், தேசிய அளவிலான அர சியல் போக்கைத் தீர்மானிக்கும் என்று கூறப்படும் நிலையில், ரால்ஃப்ர்தாமின் அமோக வெற்றி முக்கியத்துவம் வாய்ந் ததாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே, தற்போது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கிறிஸ் கிரிஸ்டியை ஆளுநராகக் கொண்டுள்ள நியூ ஜெர்ஸி மாகாணத்திலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஃபில் மர்ஃபி புதிய ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடி யரசுக் கட்சி வேட்பாளர் கிம் குவாடக் னோவை 13 சதவீத புள்ளிகள் வித்தியா சத்தில் வீழ்த்தியதன் மூலம், மாகாணத் தில் 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த குடியரசுக் கட்சி ஆட்சியை அவர் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து ரால்ஃப் நார்தாமும், ஃபில் மர்ஃபியும் கூறுகையில், டிரம் பப் அரசின் கொள்கைகளை அமெரிக்க மக்கள் நிராகரித்துள்ளதையே இந்த வெற்றி எடுத்துரைப்பதாகத் தெரிவித் தனர்.

இதற்கிடையே, நியூயார்க் நகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில், தற் போதைய மேயர் பில்டே பிளாஸியோ தனது பதவியைத் தக்கவைத்துக் கொண் டார். டிரம்ப்புக்கு எதிரான அலையைப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முதல் திருநங்கை உறுப்பினர்

வர்ஜீனியா மாகாணத்தில் செவ் வாய்க்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், அந்த மாகாண சட்டப் பேரவை உறுப்பினராக டேனிகா ரோயெம் (33) என்ற திருநங்கை வெற்றி பெற்றுள்ளார். அந்த மாகாணத்தில் மட் டுமன்றி, அமெரிக்காவிலேயே மாகாண சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை அவர் என்று கூறப்படுகிறது. இசைக் கலைஞரும், முன்னாள் செய்தியா ளருமான டேனிகா ரோயெம், ஓரினச் சேர்க்கையாளர்களைக் கடுமையாக எதிர்த்து வரும் குடியரசுக் கட்சி வேட் பாளர் ராபர்ட் மார்ஷலைத் தோற்கடித்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner