முன்பு அடுத்து Page:

பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வர்த்தக உறவு: டிரம்ப் - தெரசா மே தீவிர ஆலோசனை

   பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வர்த்தக உறவு: டிரம்ப் - தெரசா மே தீவிர ஆலோசனை

லண்டன், ஜூலை 15- அய்ரோப் பிய யூனியனிலிருந்து பிரிட் டன் வெளியேறும் 'பிரெக்ஸிட்' நடவடிக்கைக்குப் பிறகு, பிரிட் டன் மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பிரிட் டனில் வெள்ளிக்கிழமை சந் தித்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை முதல் பிரிட்டனில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபராகப் பொறுப்பேற்ற தற்குப் பிறகு டிரம்ப் பிரிட்டன் வருவது இதுவே....... மேலும்

15 ஜூலை 2018 15:16:03

தேர்தல் பேரணிகளில் குண்டுவெடிப்பு: 133 பேர் பலி; 125 பேர் படுகாயம்

   தேர்தல் பேரணிகளில் குண்டுவெடிப்பு: 133 பேர் பலி; 125 பேர் படுகாயம்

இசுலாமாபாத், ஜூலை 15 பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பேரணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 133 பேர் பலியாகினர். 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரி முகமது அயூப் அச்சாக்ஸய் கூறியதாவது: பாகிஸ்தானில் இருவேறு இடங்க ளில் நடைபெற்ற தேர்தல் பேரணிகளின் போது பயங்கரவாதிகள் இந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பை நடத்தியுள் ளனர். பலூசிஸ்தான் மாகாணம் மஸ்துங் பகுதியைச் சேர்ந்த பலூசிஸ்தான் அவாமி கட்சி தலைவர் சிராஜ் ரைசானியை முக்கியமாக....... மேலும்

15 ஜூலை 2018 15:12:03

சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

சிச்சுவான், ஜூலை 14  சீனாவில் இரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் பகுதியில் உணவு மற்றும் மருந்துவ தொழிற்துறைகளுக்கான இரசாயனங்களை தயாரிக்கும் தனியார் இரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மள மளவென ஆலையின் மற்ற பகுதிகளிலும் பரவியதால் எங்கும் புகைமூட்டம்....... மேலும்

14 ஜூலை 2018 16:07:04

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மரண தண்டனை: இலங்கையில் அமல்படுத்த திட்டம்

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த  மரண தண்டனை: இலங்கையில் அமல்படுத்த திட்டம்

கொழும்பு, ஜூலை 14 இலங் கையில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் மரண தண்ட னையை அமல்படுத்த அதிபர் சிறிசேனா ஒப்புதல் அளித் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் கடந்த 1976-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. அதன்பிறகு, மரண தண் டனை அளித்தாலும் நிறை வேற்றப்படவில்லை. தற்போது, ஆயிரம் தூக்குத் தண்டனை கைதிகள் உள்ளனர். அவர்களில்....... மேலும்

14 ஜூலை 2018 16:04:04

பெண் கல்வி மறுக்கப்படுவதால் ரூ.2,000 லட்சம் கோடி இழப்பு! உலக வங்கி அறிக்கை

நியூயார்க், ஜூலை 14 பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதால் உலகம் முழுவதும் 15 லட்சம் கோடி டாலர் முதல் (ரூ.1,000 லட்சம் கோடி) 30 லட்சம் கோடி டாலர் (ரூ.2,000 லட்சம் கோடி) வரை இழப்பு ஏற்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.பாகிஸ்தானில், பெண்கள் கல்விக்காகப் போராடி, சிறுமியாக இருக்கும்போது தலிபான் பயங்கரவாதிகளால் தலையில் சுடப்பட்டு, பிறகு உயிர் பிழைத்தவர் மலாலா.அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அவரை கவுரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான....... மேலும்

14 ஜூலை 2018 16:01:04

அமெரிக்க சாதனையாளர்கள் பட்டியலில் 2 இந்திய வம்சாவளி பெண்கள்

அமெரிக்க சாதனையாளர்கள் பட்டியலில் 2 இந்திய வம்சாவளி பெண்கள்

வாசிங்டன், ஜூலை 14 அமெரிக்காவில் சுயதொழில் மூலம் அதிக வருவாய் ஈட்டிய சாதனைப் பெண்களின் பட்டி யலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் இடம்பெற் றுள்ளனர்.இந்தப் பட்டியலை அமெ ரிக்காவின் பிரபலமான ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவின் 60 சாதனைப் பெண்களின் பெயர் கள் இடம்பெற்றுள்ளன. அவர் களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெயசிறீ உல்லல் 18-ஆவது இடத்தைப் பிடித்துள் ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.8,917 கோடியாகும்.லண்டனில்....... மேலும்

14 ஜூலை 2018 15:51:03

மிகவும் ஆபத்தான நிலையில் 120 கோடி குழந்தைகள்

உலகம் முழுவதும் 120 கோடி குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக லண்டனைச் சேர்ந்த 'சேவ் தி சில்ரன்' (Save the Children) அமைப்பு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வின்படி, உலகில் உள்ள குழந்தைகளில் 120 கோடி குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் வறுமை, போர் அல்லது பெண் குழந்தை வன்புணர்வு ஆகிய ஆபத்துகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர் என்று கூறியுள்ளது. 120 கோடி....... மேலும்

14 ஜூலை 2018 12:55:12

ஒரு லிட்டர் குடிநீரின் விலை ரூ.3 ஆயிரமா?

ஒரு லிட்டர் குடிநீரின் விலை ரூ.3 ஆயிரமா?

தலைப்பைப் பார்த்துவிட்டு, எதிர் காலத்தில் குடிநீர் விலை இவ்வளவு ஆகப் போகிறது என்று சொல்கிறீர்களாக்கும் என்று நீங்கள் நினைத்தால் தவறு. தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கும், பெரும் பணக்காரர்கள் பலரும் பருகிக் கொண்டி ருக்கும் குடிநீரின் விலைதான் இது. எல்லாப் பொருட்களிலும் சாதாரண வகை, ஆடம்பர வகை என்று உண்டு. அனேகமாக தண்ணீரில்தான் அது இல் லாமல் இருந்தது.தற்போது, மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான தண்ணீரிலும் ஆடம்பர வகை வந்திருக் கிறது. ஆனால் இவ்வளவு....... மேலும்

14 ஜூலை 2018 12:55:12

தாய்லாந்தில் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க உதவிய இந்திய நிறுவனம்

தாய்லாந்தில் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க உதவிய இந்திய நிறுவனம்

      பாங்காக், ஜூலை 13- தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் மியான்மா எல்லையில் மலை உச்சியில் 800 மீட்டர் ஆழத்தில் 10 கி.மீ. தூரம் உள்ள குகை உள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதி காட்டுப் பன்றிகள் என்ற கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், பயிற்சியா ளரும் சாகசப் பயணம் மேற் கொண்டனர். குகைக்குள் ஒரு கி.மீ. தூரம் சென்றபோது திடீர் என்று மழை பெய்து வெள்ளம் புகுந்தது. அவர்களால்....... மேலும்

13 ஜூலை 2018 16:57:04

பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் திடீர் மாற்றம்

   பாகிஸ்தானுக்கான  அமெரிக்க தூதர் திடீர் மாற்றம்

வாசிங்டன், ஜூலை 13- டேவிட் ஹேலேகு அமெரிக்க வெளியுற வுத்துறையில் கீழ்நிலை செய லாளர் பதவியில் பொற்பேற்க உள்ளார். அமெரிக்காவில் வெளி யுறவுத்துறையில், துறைக்கான அமைச்சர், செயலாளர் பதவிக்கு அடுத்த மூன்றாவது உயர் பதவி இந்தப் பதவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவியில் இருந்து வந்த தாமஸ் ஷானோன் கடந்த மாதம் 4-ஆம் தேதி ஓய்வு பெற்று விட்டதை அடுத்து உருவாகி உள்ள காலி இடத்தை நிரப்புவதற்கு டேவிட் ஹேலே வருகிறார். டேவிட் ஹேலே,....... மேலும்

13 ஜூலை 2018 16:56:04

மாணவர் சேர்க்கை மாநில அரசின் உரிமையே! மத்திய அரசு தலையிடுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன்

வாசிங்டன், செப். 12 -பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை குறித்து முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுக்கு மட்டுமே உண்டு; மத்திய அரசு இதில் தலையிடுவதற்கு அர சியல் சாசனத்தில் இடம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முனைவர் ஏ.கே.ராஜன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகத் தமிழ் அமைப்பு, தொலைபேசி வழி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தி ருந்தது. இதில் நீதிபதி ஏ.கே.ராஜன் கலந்து கொண்டு நீட் தேர்வும் மாநில உரிமைகள் பறிப்பும் என்ற தலைப்பில் உரையாற்றி யுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது:

மாநில பல்கலைக் கழகங்களுக்கு மாணவர் சேர்க்கை குறித்தான முடிவுகளை மாநில அரசே எடுக்க முடியும். இதில் தலையிட மத்திய அரசுக்கு உரிமையில்லை.

மத்திய அரசு அப்படி தலையிடுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்திய மருத்துவக் கழகத்திற்கு, மருத்துவர்களின் செயல்பாடுகளை, நடவடிக்கைகளை கண் காணிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப் பட்டு இருந்தது. மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்தான அதிகாரத்தை மத்திய அரசு 1993-ஆம் ஆண்டு வழங்கியது. இதுவும் அரசியல் சாசனத்திற்கு எதிரான தாகும். இந்த அதிகாரம் வழங்கப் பட்ட சட்டத்தை எதிர்த்து யாரும்குரல் கொடுக்க வும் இல்லை. வழக்குப் போடவும் இல்லை. ஆக, மருத்துவக் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள, மாணவர் சேர்க்கைக் கான அதிகாரத்தையே, அரசியல் சாசன சட்டப்படி திரும்பப் பெற முடியும். அப்படி பெறும் பட்சத்தில் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை அகில இந்திய மருத்துவக் கழகமானது, இந்தியாவின் எந்த பல்கலைக் கழகத்தின் மீதும் திணிக்க முடியாது.

நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும்; இது சட்டத்திற்கு உட்பட்டதுதான் என் றும், உச்சநீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. வழக்கு அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கூடுதல் மனுதாரர்கள் இணைந்து, அரசியல்சாசன சட்டப்படி, மருத்துவக் கல்லூரி சேர்க்கை பற்றிய உரிமைமாநில அரசுக்குரியது என்று வாதிட்டு வெற்றி பெறமுடியும்.

2016-ஆம் ஆண்டு சங்கல்ப் அறக்கட் டளை, நீட் தேர்வை கட்டாயமாக்க வேண் டும் என்று நேரடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மனுதாரராக வழக்கு தொடர்வதற்கு, சங்கல்ப்அமைப்பிற்குநேரடியான பாதிப்பு ஏற்பட்டிருக்கவேண்டும்.ஆனால், எதிர்த்து வாதாடியவர்கள் அந்தக் கோணத்தை கவனத்தில் கொண்டு வாதாடவில்லை. வழக்கு தொடர்வதற்கே சங்கல்ப் அமைப் பிற்கு முகாந்திரம் இல்லாத போது, அது தள்ளுபடியும் செய்யப்பட்டிருக்கும். தற் போது நிலுவையில் இருக்கும் வழக்கி லும்கூட, பலரும் மனுதாரராக இணைந்து அரசியல் சாசன சட்ட வல்லுநர் களாக உள்ள வழக்குரைஞர்களைக் கொண்டு வாதாடினால், மாநில உரிமையை மீட்க முடியும். நீட்டிற்கான சட்டத்தை, மத்திய அரசையே திரும்பப் பெறச்செய்வதன் மூலமும் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். அதற்கு மாநில அரசு, தமிழக எம்பிக்கள், அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்து அரசியல் ரீதியான தீர்வும் பெற லாம்.

இவ்வாறு நீதிபதி ஏ.கே.ராஜன் கூறி யுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner