முன்பு அடுத்து Page:

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு

காபூல், ஜூன் 19- ஆப்கானிஸ்தா னில் ரம்ஜான் நோன்பு காலத் தையொட்டி, அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித் தார். இதுதொடர்பான அறி விப்பை அவர் வெளியிட்ட போது, தலீபான்கள் வன் முறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, வன்முறையா னது, மக்களின் இதயங்களை யும், மனங் களையும் கவர்ந்து இழுக்காது. அதற்கு பதிலாக தலீபான் களை தீவு போன்று தனிமைப்படுத்தும். இதை தலீ பான்கள் சுய பரிசோதனை....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் பிரதமராவார் முன்னாள் அதிபர் முஷரப் நம்பிக்கை

பாகிஸ்தான் தேர்தலில்  இம்ரான்கான் பிரதமராவார்  முன்னாள் அதிபர் முஷரப் நம்பிக்கை

  இசுலாமாபாத், ஜூன் 19- பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25ஆம் தேதி நாடாளு மன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக், இ- இன்சாப் கட்சி தலைவரான இம்ரான்கான் வெற்றி பெறு வார். எனவே இவரது கட்சியில் நிறைய பேர் சேர்ந்துள்ளனர். தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்ற பின் மேலும் பலர் இணைவார்கள். ஒருவேளை தொங்கு....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

ஹோடைடா விமான நிலையத்தைக் கைப்பற்றியது யேமன் அரசுப் படை

   ஹோடைடா விமான நிலையத்தைக்  கைப்பற்றியது யேமன் அரசுப் படை

ஹோடைடா, ஜூன் 18- யேமனின் முக்கிய துறைமுக நகரமான ஹோடைடாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து சவூதி அரேபியா தலைமையி லான கூட்டுப் படை சனிக் கிழமை கைப்பற்றியது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஹோடைடா நகரத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தை சவூதி கூட்டுப் படையினரின் உதவியுடன் அரசு ஆதரவுப் படைகள் சனிக் கிழமை கைப்பற்றின. அந்த விமான நிலையத்தைச் சுற்றிலும் ஹூதி கிளர்ச்சியா ளர்கள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில்....... மேலும்

18 ஜூன் 2018 13:52:01

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு பதிலடி அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்த சீனா

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு பதிலடி  அமெரிக்க பொருள்களுக்கு  கூடுதல் வரி விதித்த சீனா

பீஜிங், ஜூன் 18- உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமை யிலான அமெரிக்க அரசு பன் மடங்காக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளி யேறப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், சமீபத்தில் கனடா வில்....... மேலும்

18 ஜூன் 2018 13:52:01

வெனிசுலா துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு

   வெனிசுலா துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு

கராகஸ், ஜூன் 17- வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக கடந்த 2013-ஆம் ஆண் டில் இருந்து பதவி வகித்தார். சமீபத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடு நடப்ப தாக கூறி முக்கிய எதிர்க்கட்சி கள் தேர்தலை புறக்கணித்தன. இதையடுத்து அதிக சிரமம் இன்றி நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றினார். இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. மதுரோவின் வெற்றி....... மேலும்

17 ஜூன் 2018 13:40:01

முதல் முறையாக கருப்பினப் பெண் தேர்வு

சான்ஃபிரான்சிஸ்கோ: மேயர் பதவிக்கு   சான் ஃபிரான்சிஸ்கோ, ஜூன் 17- அமெ ரிக்காவின் சான் ஃபிரான் சிஸ்கோ நகர மேயர் பதவிக்கு, கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண் முதல் முறையாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். கலிஃ போர்னியா மாகாணத்தைச் சேர்ந்த சான் ஃபிரான்சிஸ்கோ நகர மேயர் தேர் தல் இந்த மாதம் 5-ஆம் தேதி நடை பெற்றது. இதில், சான் ஃபிரான்சிஸ்கோ நிர்வாக வாரியத்தின் தலை வராக உள்ள லண்டன் பிரீட் (43) போட்டியிட்டார். இந்தத்....... மேலும்

17 ஜூன் 2018 13:33:01

தேர்தலில் போட்டியிட முஷாரஃபுக்கு மீண்டும் தடை

தேர்தலில் போட்டியிட முஷாரஃபுக்கு மீண்டும் தடை

  இசுலாமாபாத், ஜூன் 16 பாகிஸ் தான் முன்னாள் அதிபர் முஷா ரஃப் தேர்தலில் போட்டியிடு வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது. இதையடுத்து, இந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பங்கேற்பதன் மூலம் மீண்டும் அரசியல் வாழ் வைத் தொடங்க முஷாரஃ புக்குக் கிடைத்த வாய்ப்பு கைநழுவிப் போனதாகக் கூறப்படுகிறது. தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக, முஷாரஃப் வாழ்நாள் முழுவதும்....... மேலும்

16 ஜூன் 2018 15:37:03

ஏவுதளங்களை அழிப்பது குறித்து கிம் ஜோங் உன் அறிவிப்பார்: டிரம்ப் தகவல்

ஏவுதளங்களை அழிப்பது குறித்து  கிம் ஜோங் உன் அறிவிப்பார்: டிரம்ப் தகவல்

  வாசிங்டன், ஜூன் 15- வட கொரி யாவில் உள்ள ஏவுதளங்களை அழிப்பது குறித்த அறிவிப்பை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன், அடுத்த சில நாள்களில் வெளியிடுவார் என்று அமெ ரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். கிம் ஜோங் உன்-னும், டிரம் பும் நேரில் சந்தித்துக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தேறி யது. அப்போது, கொரிய தீப கற்பத்தில் இருந்து அணு ஆயு தங்களை....... மேலும்

15 ஜூன் 2018 16:04:04

போர்க்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: அமைச்சரவை ஒப்புதல்

போர்க்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணம்: அமைச்சரவை ஒப்புதல்

கொழும்பு, ஜூன் 15- இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையே கடந்த 30 ஆண்டுகளாக போர் நடை பெற்று வந்தது. 2009-ஆம் ஆண்டு இந்த போர் முடிவடைந்தது. இதற்கிடையே, போர்க்கா லங்களில் காணாமல் போனவர் கள், போரில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள், படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்க ளுக்கு நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனி அலுவலகம் அமைக்க வேண்டும் என அய். நா.சபையின் மனித உரிமை அமைப்பு கோரிக்கை....... மேலும்

15 ஜூன் 2018 15:50:03

கவுதமாலா எரிமலை வெடிப்பு எதிரொலி - விமான சேவை முடக்கம்

கவுதமாலா எரிமலை வெடிப்பு எதிரொலி - விமான சேவை முடக்கம்

  கவுதமாலா சிட்டி, ஜூன் 15- கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள் ளனர். இந்நிலையில் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் காரணமாக அங்குள்ள விமான நிலையம் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கவுதமாலா பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளில் நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஃப்யூகோ எரிமலை மீண்டும்....... மேலும்

15 ஜூன் 2018 15:50:03

இர்மா புயல்: 60 லட்சம் பேர் வெளியேற உத்தரவு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், செப்.12 இர்மா புயல் சீற்றத்துக்கு   ஆபத்தான பகுதிகளில் வசித்த சுமார் 60 லட்சம் பேர் வெளியேற உத்தரவிடப்பட்டனர். இதுவரை 5 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த நூறாண்டுகளில் உருவான புயல்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததாக "இர்மா' கருதப்படுகிறது. கடந்த வாரம் உருவான அந்தப் புயல் போர்டோ ரிகோ, செயின்ட் மார்ட்டின், பஹாமா தீவுகள், கியூபா உள்ளிட்ட கரீபியன் நாடுகளைத் துவைத்து எடுத்த பின்னர் வலுவிழக்காமல் அமெரிக்க கரையை நோக்கி நகர்ந்தது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகா ணத்தைச் சேர்ந்த தீவுகளில் ஞாயிற்றுக் கிழமை காலையில் தாக்கியது. அது தொடர்ந்து வடக்கே நகர்ந்து மாகாணம் முழுவதும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

மாகாணம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமை காலை முதல் இடைவிடாத புயல் காற்று வீசி வருகிறது. மிக பலத்த மழையும் பெய்து வருகிறது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு அதன் தீவிரம் குறைந்ததாக வானிலை மய்யம் அறிவித்தது. புயல் ரகம்-1ஆக அதன் தீவிரம் குறைக்கப்பட்டபோதிலும், காற்று சுமார் 110 கி.மீ. வேகத்தில் வீசியது. பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

ஃபுளோரிடா மாகாணத்தின் பெரும் பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன.

மாகாணம் முழுவதும் சனிக்கிழமை முதலே நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, ஆபத்தான பகுதிகளில் வசித்த சுமார் 60 லட்சம் பேர் வெளியேற உத்தரவிடப்பட் டனர். ஃபுளோரிடாவில் உள்ளரங்குகள், பள்ளிகளில் அமைக்கப்பட்டிருக்கும் தற் காலிக முகாம்களில் சுமார் 1.7 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எச்சரிக்கை களைப் புறக்கணித்த சுமார் பத்தாயிரம் பேர் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறாமல் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இவர்களின் நிலை குறித்து தெரியவில்லை.

புயலும் மழையும் ஓய்ந்த பின்னர்தான் உயிர் சேதம், பொருள் சேதம் குறித்த முழு விவரங்களையும் அறிய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

*************

ரோஹிங்கயா அகதிகளின் எண்ணிக்கை  3.1 லட்சமாக அதிகரிப்பு
அய்.நா. தகவல்

மியான்மா, செப்.12 மியான்மாவிலி ருந்து அண்மையில் வெளியேறி வங்க தேசத்தில் புகலிடம் தேடியுள்ள ரோஹிங் கயா அகதிகளின் எண்ணிக்கை 3.13 லட் சமாக அதிகரித்துள்ளது என்று அய்.நா. தெரிவித்திருக்கிறது.

இது குறித்து அய்.நா. அகதிகள் நல ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோசப் திரிபுரா செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தது: கடந்த மாத இறுதியிலிருந்து மியான்மாவிலிருந்து வங்கதேசத்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. ஆனால் கடந்த சில நாட்களில் அகதிகள் வரத்து சற்று குறைந்திருக்கிறது. அகதி முகாம்களில் இடமின்மையால், புதிதாக வரும் அகதிகள் வீதியோரங்களிலும் வெட்டவெளிகளிலும் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உதவ தன்னார்வ அமைப் புகள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள், முயன்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை சுமார் 4,000 ரோஹிங்கயா அகதிகள் வந்த தாகத் தெரிகிறது. மியான்மாவில் அண் மையில் நடைபெற்ற வன்முறை நிகழ்வு களுக்குப் பிறகு வங்கதேசத்தில் புகலிடம் தேடி வந்திருக்கும் ரோஹிங்கயா அகதி களின் எண்ணிக்கை சுமார் 3.13 லட்சமாக இருக்கும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner