முன்பு அடுத்து Page:

மியான்மாவில் 8,500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

 மியான்மாவில் 8,500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

மியான்மா, ஏப். 18- மியான்மா அதிபர், சிறையில் அடைக்கப் பட்டுள்ள 8,500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.ஆங் சான் சூகி-யின் நெருங் கிய உதவியாளராக இருந்து, அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்ற டின் க்யாவ் (71), உடல் நலக்குறைவு காரண மாக தனது பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, கடந்த மாதம் மியான்மாவின் புதிய அதிபராக, அந்த நாட்டு அரசின் தலைவர் ஆங் சான் சூகியின் தீவிர ஆதரவாளர் வின் மியிந்த்....... மேலும்

18 ஏப்ரல் 2018 15:51:03

நியூஜெர்சியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா (ஏப்ரல் 14, 2018) இணைய வழியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கர…

 நியூஜெர்சியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா (ஏப்ரல் 14, 2018) இணைய வழியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

நியூஜெர்சி (அமெரிக்கா) ஏப்.17 அமெரிக்காவில் நியூஜெர்சியில் அண்ணல் அம்பேத்கர் 128ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இணையதளம் வழியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கருத்துரை வழங்கினார். 14.4.2018 அன்று அண்ணல் அம்பேத்கரின் 128ஆம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா, அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை நியூ ஜெர்சியில் மிகச் சிறப்பாக கொண் டாடியது.  மதியம் 1:30....... மேலும்

17 ஏப்ரல் 2018 16:12:04

அதிபராக பதவி வகிக்க தகுதி இல்லாதவர் டிரம்ப் பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குநர் பேட்டி

 அதிபராக பதவி வகிக்க தகுதி இல்லாதவர் டிரம்ப் பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குநர் பேட்டி

வாசிங்டன், ஏப். 17- அமெரிக்கா வின் தேசிய உளவுத்துறை (எப்.பி.அய்.) இயக்குநராக பணியாற்றியவர் ஜேம்ஸ் காமே. அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அலுவலக ரகசியம் தொடர்பான முக்கிய கடிதங்களை அதிகாரப்பூர்வ அலுவலக மின்னஞ்சல் மூலம் கையாளாமல் தனது தனிப் பட்ட இமெயில் முகவரி வாயி லாக பரிமாறி வந்ததாக முன் னர் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், 2016ஆ-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டி யிட்ட....... மேலும்

17 ஏப்ரல் 2018 16:07:04

சமூகநீதிக்கு ஆதரவாக லண்டனில் அறப்போர்! தமிழின உரிமை மீட்புக் குரல்!

  சமூகநீதிக்கு ஆதரவாக லண்டனில் அறப்போர்! தமிழின உரிமை மீட்புக் குரல்!

லண்டன், ஏப்.16 இங்கிலாந்து வாழ் தமிழர்கள், லண்டன் இந்திய தூதரகம் முன் அமைதி வழி அறப்போரை முன்னெடுத்தார்கள். தமிழ் நாட்டு சமூக நீதிக்கு சவால் விடும் ‘நீட்’ சட்டம் கிழித்துக் குப்பை தொட்டியில் போட்டும், எரித்தும் போராட்டம் நடை பெற்றது. மேலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, இந்திய அரசமைப்புச்சட்டத்தைக் கிழித்துக் குப்பை தொட்டியில் போட்டும், எரித்தும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் தமிழர் உரிமைகள் பல....... மேலும்

16 ஏப்ரல் 2018 17:40:05

லா லிகாவில் 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா அணி சாதனை

 லா லிகாவில் 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா அணி சாதனை

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் கால்பந்து லீக் லா லிகா. இதில் பார்சி லோனா, ரியல் மாட்ரிட், அட் லெடிகோ மாட்ரிட் வாலன் சியோ போன்ற முன்னணி அணிகள் பங்கேற்று விளை யாடி வருகின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளை யாடும் இந்த தொடரில் ஒவ் வொரு அணியும் மற்ற அணி களுடன் இரண்டு முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணி யும் 38 போட்டிகளில் விளை யாட....... மேலும்

16 ஏப்ரல் 2018 17:26:05

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் இந்தியப் பெண்ணின் உடல் மீட்பு

 வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் இந்தியப் பெண்ணின் உடல் மீட்பு

வாஷிங்டன், ஏப். 16- அமெரிக்கா வில் கலிபோர்னியா மாகாணம், வேலன்சியா நகரில் வசித்து வந்த இந்தியரான சந்தீப் (வயது 42) என்பவர், தனது மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோ ருடன் காரில் ஒரேகான் மாகா ணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார் கள். ஆனால் அவர்கள் வழி யில் காணாமல் போனார்கள். 6ஆம் தேதி நடந்த இந்த....... மேலும்

16 ஏப்ரல் 2018 17:06:05

தேர்தலில் பிரதமர் வெற்றிக்கு எதிராக ஒரு லட்சம் பேர் திரண்டு போராட்டம்

 தேர்தலில் பிரதமர் வெற்றிக்கு எதிராக ஒரு லட்சம் பேர் திரண்டு போராட்டம்

புடாபெஸ்ட், ஏப். 16- ஹங்கேரியில் கடந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரத மர் விக்டர் ஆர்பன் கட்சி மூன் றில் 2 பங்கு மெஜாரிட்டியுடன் அமோக வெற்றி பெற்றது. எனவே, விக்டர் ஆர்பின் மீண் டும் பிரதமராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற 6 நாட்களுக்கு பிறகு தேர்தலில் அவர் பெற்ற வெற்றியை எதிர்த்து பொதுமக்கள் நேற்று பேரணி நடத்தினார்கள். தலை நகர் புடாபெஸ்டில் பேஸ்புக் குழுவினர்....... மேலும்

16 ஏப்ரல் 2018 17:05:05

அய்.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது

 அய்.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது

நியூயார்க், ஏப். 15- அய்க்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன் படுத்தி அப்பாவி மக்களை கொன் றது தொடர்பாக விவாதிக்க அய்.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. சர்வதேச ரசாயன ஆயுத தடுப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சிரியாவின் டவுமா நகருக்கு நேரில் சென்று இவ் விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்னும் தீர்மானத்தை அய்.நா........ மேலும்

15 ஏப்ரல் 2018 16:10:04

குற்ற விசாரணை வளையத்தில் டிரம்பின் வழக்குரைஞர்

 குற்ற விசாரணை வளையத்தில் டிரம்பின் வழக்குரைஞர்

வாஷிங்டன், ஏப். 15- அமெரிக்க அதிபர் டிரம்பின் வக்கீல் மைக் கேல் கோஹன். சமீபத்தில் இவரது அலுவலகங்களில் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பினர் (எப்.பி.அய்.) அதிரடி சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்களை கைப் பற்றினர். எப்.பி.அய்.யின் இந்த நடவடிக்கைக்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். இது நாட்டின் மீதான தாக்குதல் என அவர் விமர்சித்தார்.மேலும், மைக்கேல் கோஹன் அலுவல கங்களில் இருந்து கைப்பற்றப் பட்ட ஆவணங்களை ஆய்வு செய்வதில் இருந்து....... மேலும்

15 ஏப்ரல் 2018 16:10:04

எகிப்தில் நெருக்கடி நீலை நீட்டிப்பு

 எகிப்தில் நெருக்கடி நீலை நீட்டிப்பு

கெய்ரோ, ஏப். 15- எகிப்தில் நெருக்கடி நிலையை அந்த நாட்டு அதிபர் அப்தெல் ஃபட்டா அல்-சிசி மேலும் 3 மாதங்க ளுக்கு நீட்டித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (14.4.2018) வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: நாடு முழுவ தும் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. மேலும், பயங்கரவாதத்துக்கான நிதிய ளிப்பு அபாயமும் தொடர்கிறது. இத்தகைய அச்சுறுத்தல் களை எதிர்கொள்வதற்காக, நெருக்கடி நிலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படு கிறது என்று அந்த அரசாணை....... மேலும்

15 ஏப்ரல் 2018 16:10:04

வட கொரியாவின் புதிய ஏவுகணை மிகவும் சக்திவாய்ந்தது அரசு செய்தி நிறுவனம் தகவல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சியோல், மே 16 வட கொரியா ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தி சோதனை செய்த ஏவுகணைதான், அந்நாடு இது வரை உருவாக்கிய ஏவுகணைகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் அது அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் திறன் உள்ளது என்றும் அறிவித்தது.

அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“ஹுவாஸேங்-12’ என்கிற புதிய ரக ஏவுகணையை வட கொரியா ஞாயிற்றுக்கிழமை அதி காலையில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி) விண்ணில் செலுத்திப் பரிசோதனை செய்தது. அதிபர் கிம் ஜோங்-உன் ஏவு கணைப் பரிசோதனையை நேரில் பார்வையிட்டார். ஏவுகணை பரிசோதனை மிகவும் வெற்றி கரமாக அமைந்தது.

விண்ணில் செலுத்தப்பட்ட தும் அது 2,111.5 கி.மீ. உயரத்தை எட்டியது; அடுத்து, 787 கிமீ. தொலைவு பயணம் செய்து ஜப்பான் கடலில் விழுந்தது.

ஏவுகணையின் விசைத் திறன், இலக்கை நோக்கிப் பாதை மாறாமல் பறக்கும் திறன், இலக்கை நோக்கி ஆயுதம் செலுத்தும் திறன், ஆயுதத்தைத் துல்லியமாக வெடிக்கச் செய்யும் திறன், மோசமான சூழலிலும் குறி தப்பாத திறன் உள்ளிட்ட பல வகையான திறன்கள் சோதனையின்போது வெற்றிகர மாகச் செயல்பட்டன.

அணு ஆயுதம் போன்ற சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இல்லாத சிறிய நாடுகளை மிரட்டி அடி பணிய வைக்கும் அமெரிக்காவின் கேலிக்குரிய அரசியல் -ராணுவக் கொள்கை வட கொரியாவிடம் எடுபடாது என்று வட கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளி யிட்டிருக்கும் செய்தி அறிக்கை யில் தெரிவித்தது.

சமீபத்திய ஏவுகணை தொடர் பாகத் தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், வட கொரியாவின் புதிய ஏவு கணை அதிகபட்சமாக 4,500 கி.மீ. தொலைவு பறக்கும் என்று தெரி கிறது என அமெரிக்க ராணுவத் துறை ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர்.

வட கொரியா இதுவரை பரி சோதனை செய்த ஏவுகணை களிலேயே ஞாயிற்றுக்கிழமை செலுத்திய “ஹுவாஸாங்-12’ ஏவுகணைதான் மிகவும் சக்தி வாய்ந்தது என்று அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர் ஜெஃப்ரி லூயிஸ் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner