முன்பு அடுத்து Page:

அய்.நா.வின் மனித உரிமை கவுன்சிலிலிருந்து அமெரிக்கா விலகல்

அய்.நா.வின் மனித உரிமை கவுன்சிலிலிருந்து அமெரிக்கா விலகல்

  வாசிங்டன், ஜூன் 21- அய்க்கிய நாடுகள் மனித உரிமை கவுன் சில் கடந்த 2006-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 47 நாடுகள் உறுப் பினர்களாக உள்ளன. அய்க்கிய நாடுகள் சபைக் கான அமெரிக்க தூதராக இருந்து வருபவர் நிக்கி ஹாலே. இவர் இன்று செய்தியாளர்களை சந் தித்தார். அப்போது அவர் கூறு கையில், அய்க்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகு கிறது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்....... மேலும்

21 ஜூன் 2018 16:51:04

காற்று மாசு குறித்து ஆய்வு சென்னை விஞ்ஞானிக்கு தைவான் விருது

காற்று மாசு குறித்து ஆய்வு  சென்னை விஞ்ஞானிக்கு தைவான் விருது

  தைபே, ஜூன் 21- பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய் வில் சிறந்த பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானிகளுக்கு தைவானின் டாங் விருது அறிவிக்கப்பட்டது. அதில் சென்னையை சேர்ந்த தமிழரான வீரபத்ரன் ராமநாதன் என்ற விஞ்ஞானி யும் ஒருவர். இவர் காற்றுமாசு குறித்து நடத்திய ஆய்வுக்காக இவருக்கு இவ்விருது வழங் கப்படுகிறது. அதற்காக அவருக்கு ஒரு மில்லியன் டாலர் அதாவது ரூ.6 கோடியே பரிசு தொகை யும் வழங்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் வீரபத்ரன் ராமநாதன்....... மேலும்

21 ஜூன் 2018 16:51:04

மேசிடோனியா பெயர் விவகாரம்: நாஜி ஆதரவு கிரீஸ் எம்.பி. கைது

மேசிடோனியா பெயர் விவகாரம்:  நாஜி ஆதரவு கிரீஸ் எம்.பி. கைது

மேசிடோனியா, ஜூன் 20- மேசி டோனியா நாட்டின் பெயர் மாற்றும் ஒப்பந்தம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நாஜி ஆதரவு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கன்ஸ்டான்டினோஸ் பர்ப ரோஸிஸ் என்ற அந்த எம்.பி., வடக்கு மேசிடோனியா என்ற பெயரை மேசிடோனியா நாடு பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி அளித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, கிரீஸ் அதிபர் பிரகோபிஸ் பாவ்லோபோலஸ், பிரதமர் அலெக்ஸிஸ் சைப்ரஸ், பாதுகாப்புத்....... மேலும்

20 ஜூன் 2018 15:26:03

41 வயதே ஆன இவான் டியூக் கொலம்பியாவின் அதிபராகிறார்

41 வயதே ஆன இவான் டியூக்  கொலம்பியாவின் அதிபராகிறார்

போகோடா, ஜூன் 20- மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. வலதுசாரி ஜனநாயக கட்சியின் சார் பில் முன்னாள் செனட் உறுப்பினர் இவான் டியூக் மற்றும் முற்போக் காளர் கட்சி சார்பில் முன்னாள் மேயர் மற்றும் கொரில்லா போரா ளியாக இருந்த கஸ்டாவோ பெட்ரோ போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் இவான் டியூக் 54 சதவிகித வாக்குகளும், கஸ்டாவோ பெட்ரோ 42 சதவிகித வாக்குகள் பெற்றனர். இதன் மூலம்,....... மேலும்

20 ஜூன் 2018 15:26:03

விசா கட்டுப்பாடுகளை தகர்த்து புதிய சலுகைகளை வழங்க அய்க்கிய அரபு அமீரக பிரதமர் ஒப்புதல்

   விசா கட்டுப்பாடுகளை தகர்த்து புதிய சலுகைகளை  வழங்க அய்க்கிய அரபு அமீரக பிரதமர் ஒப்புதல்

துபாய், ஜூன் 20- அய்க்கிய அரபு அமீரகத்துக்கு சென்று கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர், வேலை தேடு பவர்கள் உள்ளிட்ட பலருக்கு மான விசா கட்டுப்பாடுகளை தகர்த்து புதிய சலுகைகளை வழங்குவதற்கு, அய்க்கிய அரபு அமீரகத்தின் துணை அதி பரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரசித் அல் மக்தூம் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, அய்க்கிய அரபு அமீரகத்தில் சென்று கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மாணவர்களின்....... மேலும்

20 ஜூன் 2018 15:26:03

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு

காபூல், ஜூன் 19- ஆப்கானிஸ்தா னில் ரம்ஜான் நோன்பு காலத் தையொட்டி, அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித் தார். இதுதொடர்பான அறி விப்பை அவர் வெளியிட்ட போது, தலீபான்கள் வன் முறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, வன்முறையா னது, மக்களின் இதயங்களை யும், மனங் களையும் கவர்ந்து இழுக்காது. அதற்கு பதிலாக தலீபான் களை தீவு போன்று தனிமைப்படுத்தும். இதை தலீ பான்கள் சுய பரிசோதனை....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் பிரதமராவார் முன்னாள் அதிபர் முஷரப் நம்பிக்கை

பாகிஸ்தான் தேர்தலில்  இம்ரான்கான் பிரதமராவார்  முன்னாள் அதிபர் முஷரப் நம்பிக்கை

  இசுலாமாபாத், ஜூன் 19- பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25ஆம் தேதி நாடாளு மன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக், இ- இன்சாப் கட்சி தலைவரான இம்ரான்கான் வெற்றி பெறு வார். எனவே இவரது கட்சியில் நிறைய பேர் சேர்ந்துள்ளனர். தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்ற பின் மேலும் பலர் இணைவார்கள். ஒருவேளை தொங்கு....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

ஹோடைடா விமான நிலையத்தைக் கைப்பற்றியது யேமன் அரசுப் படை

   ஹோடைடா விமான நிலையத்தைக்  கைப்பற்றியது யேமன் அரசுப் படை

ஹோடைடா, ஜூன் 18- யேமனின் முக்கிய துறைமுக நகரமான ஹோடைடாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து சவூதி அரேபியா தலைமையி லான கூட்டுப் படை சனிக் கிழமை கைப்பற்றியது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஹோடைடா நகரத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தை சவூதி கூட்டுப் படையினரின் உதவியுடன் அரசு ஆதரவுப் படைகள் சனிக் கிழமை கைப்பற்றின. அந்த விமான நிலையத்தைச் சுற்றிலும் ஹூதி கிளர்ச்சியா ளர்கள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில்....... மேலும்

18 ஜூன் 2018 13:52:01

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு பதிலடி அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்த சீனா

டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு பதிலடி  அமெரிக்க பொருள்களுக்கு  கூடுதல் வரி விதித்த சீனா

பீஜிங், ஜூன் 18- உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமை யிலான அமெரிக்க அரசு பன் மடங்காக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக உலக வர்த்தகம் சீர்குலையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், வட அமெரிக்காவின் தாராளமய வர்த்தக கொள்கை உடன்பாட்டில் இருந்து வெளி யேறப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், சமீபத்தில் கனடா வில்....... மேலும்

18 ஜூன் 2018 13:52:01

வெனிசுலா துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு

   வெனிசுலா துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு

கராகஸ், ஜூன் 17- வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக கடந்த 2013-ஆம் ஆண் டில் இருந்து பதவி வகித்தார். சமீபத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடு நடப்ப தாக கூறி முக்கிய எதிர்க்கட்சி கள் தேர்தலை புறக்கணித்தன. இதையடுத்து அதிக சிரமம் இன்றி நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றினார். இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. மதுரோவின் வெற்றி....... மேலும்

17 ஜூன் 2018 13:40:01

பிரான்சின் அதிபராக இமானுவல் மக்ரான் பதவியேற்றார்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பாரிஸ், மே 15- பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே வின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23ஆ-ம் தேதி தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான் கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடு வதை தவிர்த்து விட்டார்.

இந்த தேர்தலில் கன்சர் வேட்டிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவு கள் கடந்த வாரம் வெளியானது.

இதில் மக்ரான் 65 சதவிகித வாக்குகளுடன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மெரீனை வீழ்த் தினார். மக்ரானுக்கு கடும் போட்டியாக இருந்த மெரீன் தனது தோல்வியை ஏற்று கொண்டார். மக்ரானை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய மெரீன், வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என தெரிவித்திருந்தார்.

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்ரானுக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், மக்ரான் அதிபராக பதவி யேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழா அரங்கிற்கு வந்த மக்ரான் மற்றும் அவரது மனைவிக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக அதிபராக பத வியேற்கும் முன்னதாக முன்னாள் அதிபர் ஹோலண்டேவை சந்தித்த மக்ரான், அனு ஆயுதங்கள் சம்பந்தமான குறியீடுகளை பெற்றுக் கொண்டார். மேலும், பதவியேற்றவுடன் முதல் அயல்நாட்டு பயணமாக இந்த வாரம் மக்ரான் ஜெர்மனி சென்று அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மார்கெல்லை சந்தித்து பேச இருக்கிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner