முன்பு அடுத்து Page:

தென் கொரிய முன்னாள் அதிபர் மீதான ஊழல் வழக்கு தொடங்கியது

தென் கொரிய முன்னாள் அதிபர்  மீதான ஊழல் வழக்கு தொடங்கியது

சியோல், மே 24 தென் கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹை மீதான ஊழல் வழக்கு (செவ்வாய்க்கிழமை) நேற்று தொடங்கியது.நாடாளுமன்றத்தால் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் கைகளில் விலங்கு பூட்டப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரது நெருங்கிய தோழி சோய் சூன்-இல், அதிபருடனான நட்பைத் தவறாகப் பயன்படுத்தி பெருநிறுவனங்களிடமிருந்து பெரும் தொகை....... மேலும்

24 மே 2017 15:56:03

அய்.நா. அறிக்கையை நிராகரித்தது வடகொரியா

அய்.நா. அறிக்கையை நிராகரித்தது வடகொரியா

  பியாங்யங்,  மே 24 அமெரிக்காவும் அதை பின்பற்றும் நாடுகளும் தான் தங்களை எதிர்க் கின்றன எனவும், அய்.நா விதித் துள்ள பொருளா தார தடை உள் ளிட்ட அறிக்கை யை ஏற்கமுடியாது எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, அய்.நா., அய்ரோப்பிய யூனியன் உள் ளிட்டவை வடகொரியா மீது....... மேலும்

24 மே 2017 15:35:03

பிரேசில்: நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் இரட்டை சகோதரிகள்

பிரேசில்: நூறாவது பிறந்த நாள்  கொண்டாடும் இரட்டை சகோதரிகள்

ரியோ டி ஜெனீரோ, மே 23- பிரேசில் நாட்டில் கரியா சியா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மரியா பிக்னேடன் பான்டின், பவுலினா பிக்னேடன் பான்டின். இவர்களுக்கு நூறு வயது ஆகிறது. அதையொட்டி வரு கிற 24-ஆம் தேதி விழாவை மிக சிறப்பாக கொண்டாட திட்ட மிட்டுள்ளனர். அதற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருப்பது போன்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர். கமீலா லீமா என்ற நிழற்படக் கலைஞர் (போட்டோ கிராபர்) இருவரையும் பலவித....... மேலும்

23 மே 2017 16:55:04

அயர்லாந்து பிரதமர் தேர்தல் இந்திய வம்சாவளி அமைச்சர் போட்டி

அயர்லாந்து பிரதமர் தேர்தல்  இந்திய வம்சாவளி அமைச்சர் போட்டி

லண்டன், மே 23- அயர்லாந்து பிரதமர் என்டா கென்னி தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். எனவே புதிய பிரதமரை தேர்ந்தெடுப்ப தற்கான தேர்தல் வருகிற ஜூன் 2-ஆம் தேதி நடக்கிறது. அதையொட்டி தேர்தலில் அயர்லாந்தின் நலத் துறை அமைச்சர் லியோ வராத்கர் (38). போட்டியிடுகிறார். இவர் இந்திய வம்சா வளியை சேர்ந்த வர். அவரது தந்தை மும்பை யில் பிறந்து வளர்ந்தவர். தாயார் அயர்லாந்தை சேர்ந்தவர். அமைச்சர் ஆவதற்கு முன்பு....... மேலும்

23 மே 2017 16:48:04

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

வட்டெறிதல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதலில் தங்கம் வென்றார் அண்ணாவி.  மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த அண் ணாவி 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மலேசியாவின் சபா தீவில், 7-ஆவது சபா மலேசியன் ஓபன் மாஸ்டர்ஸ் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் மே 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற் றது. இதில் 12 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில்....... மேலும்

22 மே 2017 17:42:05

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

வட்டெறிதல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதலில் தங்கம் வென்றார் அண்ணாவி.  மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த அண் ணாவி 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மலேசியாவின் சபா தீவில், 7-ஆவது சபா மலேசியன் ஓபன் மாஸ்டர்ஸ் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் மே 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற் றது. இதில் 12 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில்....... மேலும்

22 மே 2017 17:42:05

சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை வெளியேற்ற ஆஸ்திரேலியா முடிவு

சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை  வெளியேற்ற ஆஸ்திரேலியா முடிவு

கான்பெரா, மே 22- ஆஸ்திரேலியா நாட்டில் சட்டவிரோத மாக தங்கியுள்ள சுமார் 7500 அகதிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந் நாட்டு குடியுரிமை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா நாட்டில் இலங்கை, மியான்மர், ஆப் கானிஸ்தான் ஆகிய நாடு களை சேர்ந்தவர்கள் அகதி களாக தஞ்சமடைந்துள்ளனர். முறையான காரணங்கள் இல் லாமல் சிலர் தங்கியிருப்பதா கவும், இவர்களால் அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுவ தாகவும் பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், அகதி....... மேலும்

22 மே 2017 17:34:05

லண்டன் கவுன்சிலராக இந்தியப் பெண் தொழில் அதிபர் தேர்வு

லண்டன் கவுன்சிலராக  இந்தியப் பெண் தொழில் அதிபர் தேர்வு

லண்டன், மே 22- இங்கிலாந்து நாட்டின் மிகப் பணக்கார மாந கராட்சி, லண்டன் மாநகராட்சி ஆகும். அங்கு உள்ள 25 வார்டு களுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் வின்ட்ரை வார்டின் கவுன்சிலர் பதவிக்கு இந்தியாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ரெஹானா அமீர் (வயது 43) என்பவர் போட்டியிட்டார். இவர் சென் னையில் பிறந்து, வளர்ந்தவர். இந்த உள்ளாட்சித் தேர்த லில் அவர் சுயேச்சை வேட்பா ளராக களம் இறங்கினார்........ மேலும்

22 மே 2017 17:31:05

புதிய உயிரினத்துக்கு அப்துல் கலாம் பெயர்

புதிய உயிரினத்துக்கு அப்துல் கலாம் பெயர்

லாஸ் ஏஞ்சல்ஸ், மே 22- விண்வெளியில் அய்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிற சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து, பன்னாட்டு விஞ்ஞானிகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மிதக்கும் விண்வெளி நிலையம், பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் அமைக் கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த சர்வ தேச விண்வெளி நிலையத்தின் வடிகட்டிகளில் (பில்ட்டர்க ளில்) ஒருவிதமான புதிய உயி ரினத்தை அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின்....... மேலும்

22 மே 2017 17:25:05

பாகிஸ்தான்: தற்கொலைத் தாக்குதலில் 25 பேர் பலி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பலுசிஸ்தான், மே 13 பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், மஸ்துங் பகுதியில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட இடம். பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவர் உயிர் தப்பினார். அந்தத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.

பலூசிஸ்தான் மாகாணம், மஸ்துங் பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகைக்குப் பிறகு நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவர் மௌலானா அப்துல் கஃபூர் ஹைதரி உரையாற்றினார். உரையாற்றிய பின்னர் வெளியே வந்து அவருடைய வாகனத்தில் ஏறும்போது அவரைக் குறி வைத்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதில் அவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது.

தாக்குதலில் 25 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 35 பேர் குவெட்டாவில் உள்ள இரு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படனர். அதில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்த மவுலானா அப்துல் கஃபூர் ஹைதரிக்கு குவெட்டாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குண்டு வெடிப்பில் அவருடைய வாகனத்தின் முகப்புக் கண் ணாடி சிதறி அவருக்கு காயம் ஏற்பட்டது.

வாகனத்தில் இருந்த அவருடைய ஓட்டுநரும் உதவியாளர் களும் பலத்த காயமடைந்தனர். ஓட்டுநர் பின்னர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அது உறுதி செய்யப்படவில்லை.
உயிரிழந்தவர்கள் அனைவரும் அவருடைய ஜாமியத் உலேமா-ஏ-இஸ்லாம் ஃபஸல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தற்கொலைத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner