முன்பு அடுத்து Page:

தென் கொரிய முன்னாள் அதிபர் மீதான ஊழல் வழக்கு தொடங்கியது

தென் கொரிய முன்னாள் அதிபர்  மீதான ஊழல் வழக்கு தொடங்கியது

சியோல், மே 24 தென் கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹை மீதான ஊழல் வழக்கு (செவ்வாய்க்கிழமை) நேற்று தொடங்கியது.நாடாளுமன்றத்தால் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் கைகளில் விலங்கு பூட்டப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரது நெருங்கிய தோழி சோய் சூன்-இல், அதிபருடனான நட்பைத் தவறாகப் பயன்படுத்தி பெருநிறுவனங்களிடமிருந்து பெரும் தொகை....... மேலும்

24 மே 2017 15:56:03

அய்.நா. அறிக்கையை நிராகரித்தது வடகொரியா

அய்.நா. அறிக்கையை நிராகரித்தது வடகொரியா

  பியாங்யங்,  மே 24 அமெரிக்காவும் அதை பின்பற்றும் நாடுகளும் தான் தங்களை எதிர்க் கின்றன எனவும், அய்.நா விதித் துள்ள பொருளா தார தடை உள் ளிட்ட அறிக்கை யை ஏற்கமுடியாது எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, அய்.நா., அய்ரோப்பிய யூனியன் உள் ளிட்டவை வடகொரியா மீது....... மேலும்

24 மே 2017 15:35:03

பிரேசில்: நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் இரட்டை சகோதரிகள்

பிரேசில்: நூறாவது பிறந்த நாள்  கொண்டாடும் இரட்டை சகோதரிகள்

ரியோ டி ஜெனீரோ, மே 23- பிரேசில் நாட்டில் கரியா சியா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மரியா பிக்னேடன் பான்டின், பவுலினா பிக்னேடன் பான்டின். இவர்களுக்கு நூறு வயது ஆகிறது. அதையொட்டி வரு கிற 24-ஆம் தேதி விழாவை மிக சிறப்பாக கொண்டாட திட்ட மிட்டுள்ளனர். அதற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருப்பது போன்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர். கமீலா லீமா என்ற நிழற்படக் கலைஞர் (போட்டோ கிராபர்) இருவரையும் பலவித....... மேலும்

23 மே 2017 16:55:04

அயர்லாந்து பிரதமர் தேர்தல் இந்திய வம்சாவளி அமைச்சர் போட்டி

அயர்லாந்து பிரதமர் தேர்தல்  இந்திய வம்சாவளி அமைச்சர் போட்டி

லண்டன், மே 23- அயர்லாந்து பிரதமர் என்டா கென்னி தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். எனவே புதிய பிரதமரை தேர்ந்தெடுப்ப தற்கான தேர்தல் வருகிற ஜூன் 2-ஆம் தேதி நடக்கிறது. அதையொட்டி தேர்தலில் அயர்லாந்தின் நலத் துறை அமைச்சர் லியோ வராத்கர் (38). போட்டியிடுகிறார். இவர் இந்திய வம்சா வளியை சேர்ந்த வர். அவரது தந்தை மும்பை யில் பிறந்து வளர்ந்தவர். தாயார் அயர்லாந்தை சேர்ந்தவர். அமைச்சர் ஆவதற்கு முன்பு....... மேலும்

23 மே 2017 16:48:04

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

வட்டெறிதல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதலில் தங்கம் வென்றார் அண்ணாவி.  மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த அண் ணாவி 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மலேசியாவின் சபா தீவில், 7-ஆவது சபா மலேசியன் ஓபன் மாஸ்டர்ஸ் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் மே 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற் றது. இதில் 12 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில்....... மேலும்

22 மே 2017 17:42:05

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

சர்வதேச முதியோர் தடகளம்: திருச்சி வீரருக்கு 3 தங்கம்

வட்டெறிதல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதலில் தங்கம் வென்றார் அண்ணாவி.  மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த அண் ணாவி 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மலேசியாவின் சபா தீவில், 7-ஆவது சபா மலேசியன் ஓபன் மாஸ்டர்ஸ் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் மே 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற் றது. இதில் 12 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில்....... மேலும்

22 மே 2017 17:42:05

சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை வெளியேற்ற ஆஸ்திரேலியா முடிவு

சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை  வெளியேற்ற ஆஸ்திரேலியா முடிவு

கான்பெரா, மே 22- ஆஸ்திரேலியா நாட்டில் சட்டவிரோத மாக தங்கியுள்ள சுமார் 7500 அகதிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந் நாட்டு குடியுரிமை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா நாட்டில் இலங்கை, மியான்மர், ஆப் கானிஸ்தான் ஆகிய நாடு களை சேர்ந்தவர்கள் அகதி களாக தஞ்சமடைந்துள்ளனர். முறையான காரணங்கள் இல் லாமல் சிலர் தங்கியிருப்பதா கவும், இவர்களால் அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுவ தாகவும் பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், அகதி....... மேலும்

22 மே 2017 17:34:05

லண்டன் கவுன்சிலராக இந்தியப் பெண் தொழில் அதிபர் தேர்வு

லண்டன் கவுன்சிலராக  இந்தியப் பெண் தொழில் அதிபர் தேர்வு

லண்டன், மே 22- இங்கிலாந்து நாட்டின் மிகப் பணக்கார மாந கராட்சி, லண்டன் மாநகராட்சி ஆகும். அங்கு உள்ள 25 வார்டு களுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் வின்ட்ரை வார்டின் கவுன்சிலர் பதவிக்கு இந்தியாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ரெஹானா அமீர் (வயது 43) என்பவர் போட்டியிட்டார். இவர் சென் னையில் பிறந்து, வளர்ந்தவர். இந்த உள்ளாட்சித் தேர்த லில் அவர் சுயேச்சை வேட்பா ளராக களம் இறங்கினார்........ மேலும்

22 மே 2017 17:31:05

புதிய உயிரினத்துக்கு அப்துல் கலாம் பெயர்

புதிய உயிரினத்துக்கு அப்துல் கலாம் பெயர்

லாஸ் ஏஞ்சல்ஸ், மே 22- விண்வெளியில் அய்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிற சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து, பன்னாட்டு விஞ்ஞானிகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மிதக்கும் விண்வெளி நிலையம், பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் அமைக் கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த சர்வ தேச விண்வெளி நிலையத்தின் வடிகட்டிகளில் (பில்ட்டர்க ளில்) ஒருவிதமான புதிய உயி ரினத்தை அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின்....... மேலும்

22 மே 2017 17:25:05

வட கொரியா அணு ஆயுதத்தை கைவிடச் செய்வதற்கே முக்கியத்துவம் தென் கொரிய, சீன அதிபர்கள் பேச்சு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சியோல், மே 12 வட கொரியா அணு ஆயுதம் உருவாக்குவதைக் கைவிடச் செய்வதற்கே அதிக முக்கியத்துவம் அளிப்பேன் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் கூறினார்.

அண்மையில் தென் கொரியாவில் நடைபெற்ற அதிபர் தேர் தலில் தென் கொரிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூன் ஜே-இன் மாபெரும் வெற்றி பெற்றார். வட கொரியாவுடன் சுமுக உறவு நிலவுவதற்குக் கூடுதல் முக்கியத் துவம் தரும் கொள்கையை அவ ரும் அவரது கட்சியும் வலியுறுத்தி வருகின்றனர். அவருடைய மகத்தான வெற்றி, அந்த இரு நாடுகளிடையேயான உறவில் பெரும் மாறுதலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு பல்வேறு நாடுகளின் தலைவர்களோடு மூன் ஜே-இன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் வியாழக் கிழமை தொலைபேசி மூலம் அவர் உரையாடினார். அப்போது வட கொரிய உறவு குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

உரையாடலின்போது, வட கொரியா அணு ஆயுதம் உரு வாக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்வதற்கு கூடுதல் முக்கியத் துவம் தரப் போவதாக மூன் ஜே-இன் குறிப்பிட்டார்.

அதை சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரவேற்பதாகத் தெரிவித்தார். சீனாவின் குறிக்கோளும் அதுதான் என்று தெரிவித்த ஜீ ஜின்பிங், கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமில்லா பகுதியாகத் திகழச் செய்வது பொது நோக்கமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல் குறித்த விவரங்களை தென் கொரிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் யூன் யங்-சான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வட கொரியா இதுவரை 5 அணு ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது. ஆறாவது சோதனையை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்து வருகிறது. கடந்த பல மாதங்களில் ஏராளமான ஏவுகணை சோதனை களையும் வெற்றிகரமாக நடத்தியது.

வட கொரியா அணு ஆயுதத் தாக்குதல் நிகழ்த்தும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அமெரிக்காவின் போர்க் கப்பல் கார்ல் வின்ஸன் கொரிய தீபகற்ப பகுதிக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளது. ஜப்பான், தென் கொரிய கடற்படைக் கப்பல் களுடன் இணைந்து அது போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நடவடிக்கை வட கொரியாவை மேலும் எரிச்சலூட் டியுள்ளது. இதைத் தொடர்ந்து கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்ற நிலை நிலவுகிறது.

இந்த நிலையில், வட கொரி யாவுடன் நல்லுறவு மேற்கொள்ள விரும்பும் மிதவாத அரசியல் வாதியான மூன் ஜே-இன் தென் கொரிய அதிபராகத் தேர்ந்தெடுக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner