முன்பு அடுத்து Page:

சட்டத்துக்கு புறம்பாக தங்கியுள்ளவர்களை பலவந்தமாக நாடு கடத்த மாட்டோம்: அமைச்சர் ஜான் கெல்லி

 சட்டத்துக்கு புறம்பாக தங்கியுள்ளவர்களை பலவந்தமாக நாடு கடத்த மாட்டோம்: அமைச்சர் ஜான் கெல்லி

நியூயார்க், பிப்.25 அமெரிக்கா வில் சட்டத்துக்குப் புறம்பாக வசித்து வருபவர்களை ராணுவத் தின் உதவியுடன் பலவந்தமாக வெளியேற்ற மாட்டோம் என்று அந்த நாட்டு உள்துறை அமைச்சர் ஜான் கெல்லி கூறினார். மெக்சிகோவில் நடைபெற்று வரும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள அவர் அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். குடியேற்றம் தொடர்பாக அந்த நாட்டின் பல்வேறு அமைச்சர் களுடன் ஆலோசனை நடத் தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜான் கெல்லி கூறியதா வது: அமெரிக்காவில்....... மேலும்

25 பிப்ரவரி 2017 16:05:04

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை: கடற்படைவீரர் கைது

 அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை: கடற்படைவீரர் கைது

கன்சாஸ், பிப். 24 இந்தியாவின் வெளி யுறவுக்கொள்கை அவ்வப்போது இந்துத்து வாவாதிகளால் கேலிக்குரியதாக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் வாழ் இந்தியர் களின் பணத்தை மட்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரத் துடிக்கும் மோடியின் அர சினால், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஒபாமா இந்தியாவுக்கு வந்தபோது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25அய் ஆளுபவர்கள் படிக்கவேண்டும் என்று இடித்துரைத்தார். சிறுபான்மையோருக்கான பாது காப்பை உறுதி செய்ய வேண்டும்....... மேலும்

24 பிப்ரவரி 2017 16:05:04

மொசூல் விமான நிலையம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பு

  மொசூல் விமான நிலையம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பு

மொசூல், பிப்.24 இராக்கில் இஸ்லாமிய தேச (அய்.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப் பாட்டில் இருந்து மொசூல் நகரை மீட்பதற்காகப் போரிட்டு வரும் அரசுப் படையினர், அந்த நகரின் முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையத்தை வியாழக் கிழமை கைப்பற்றினர். நகரின் தெற்குப் பகுதி எல்லையில் அமைந்துள்ள அந்த விமான நிலையத்தை மீட்டது, நகரை நோக்கி முன்னேறுவதில் அரசுப் படையினருக்கு உதவி யாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விமான நிலையத்தைக் கைப் பற்றுவதற்கான தாக்குதலை புதன்கிழமை....... மேலும்

24 பிப்ரவரி 2017 15:43:03

உள் நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது அமெரிக்காவுக்கு கம்போடியா எச்சரிக்கை

 உள் நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது அமெரிக்காவுக்கு கம்போடியா எச்சரிக்கை

நாம்பென், பிப்.23 கம்போடியா வின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்று அந்நாட்டு பிரதமர் ஹுன் சென் தெரிவித்துள்ளார். கம்போடியா அரசாங்கத்தால் 1993ஆம் ஆண்டு ஏற்கப்பட்ட நாட்டின் அரசியல் சாசனத்தின்படி அரசியல் சாசனத்திற்குட்பட்ட மன்னராட்சி முறையில் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பா ளர்களால் ஆட்சி செலுத்தி வரு கிறது. கம்போடிய மக்களாட்சி பல கட்சி முறையை கொண்டது. தலைமை அமைச்சர் அரசாங்கத் தின் தலைவர். கம்போடிய மன்னர் நாட்டின் தலைவர். தலைமை....... மேலும்

23 பிப்ரவரி 2017 16:35:04

இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு இந்தியா உதவி 100 மெட்ரிக் டன் அரிசி, 3 தண்ணீர் டாங்கர்கள் நன்கொடை

 இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு இந்தியா உதவி 100 மெட்ரிக் டன் அரிசி, 3 தண்ணீர் டாங்கர்கள் நன்கொடை

கொழும்பு, பிப்.22 இலங்கை யில் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்க இந்தியா சார்பில் மூன்று தண்ணீர் டாங்கர்கள், 100 மெட்ரிக் டன் அரிசி ஆகியவை நன்கொடையாக வழங்கப்பட வுள்ளன. இலங்கை தலைநகர் கொழும் புக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக கடந்த சனிக்கிழமை (பிப். 18) இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜெய்சங்கர் சென்றார். இந்த சந்திப்பின் போது, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக் கிரமசிங்கே, அந்நாட்டு வெளி....... மேலும்

22 பிப்ரவரி 2017 15:22:03

ஏவுகணைகள் செலுத்தி ஈரான் ராணுவப் பயிற்சி

 ஏவுகணைகள் செலுத்தி ஈரான் ராணுவப் பயிற்சி

ஈரான், பிப்.21 ஏவுகணைகளை செலுத்துவது உள்ளிட்ட ராணுவப் பயிற்சிகளில் ஈரான் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டதாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது. இது தொடர்பாக “தஸ்னீம்‘ செய்தி நிறுவனம் வெளியிட்டிருக் கும் செய்தியில் தெரிவித்திருப் பதாவது: ஈரானின் பாலைவனப் பகுதி யில் பாதுகாப்புப் படையினர் ராணுவப் பயிற்சிகள் மேற் கொண்டனர். திங்கள்கிழமை தொடங்கிய இந்த ராணுவப் பயிற்சி மூன்று நாட்கள் நடை பெறும். அதில் ராணுவத்தின் “புரட்சிப் பாதுகாவலர்கள்’ பிரிவு சார்பில்....... மேலும்

21 பிப்ரவரி 2017 15:22:03

இஸ்ரேல் - பாலஸ்தீனம் என இரு தனி நாடுகள் அமைவதே அமைதிக்கு தீர்வு: சிங்கப்பூர் பிரதமர் பேட்டி

 இஸ்ரேல் - பாலஸ்தீனம் என இரு தனி நாடுகள் அமைவதே அமைதிக்கு  தீர்வு: சிங்கப்பூர் பிரதமர் பேட்டி

சிங்கப்பூர், பிப்.21 இஸ்ரேல், பாலஸ்தீனம் என இரு தனி நாடுகள் அமைவதே அமைதி ஏற்படுவதற்கான சிறந்த வழி என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு சிங்கப்பூ ருக்கு இரு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங்யாமை அதிபர் மாளிகையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசி னார். பின்னர் பிரதமர் லீ சியன் லூங் - நெதன்யாஹு பேச்சு....... மேலும்

21 பிப்ரவரி 2017 15:22:03

தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படை ரோந்துப்பணி: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

 தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படை ரோந்துப்பணி:  கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

பீஜிங், பிப்.20 தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படையின் ரோந்துப்பணியால் கொரிய தீபகற்ப பகுதியில் புதிய பதற்றம் நிலவுகிறது. சீன நாட்டின் தென்பகுதியில் உள்ள தென்சீனக்கடல் வழியே உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து நடைபெறு கிறது. இந்த தென் சீனக்கடல் பகு தியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு செயற்கை தீவு களையும் உருவாக்கி உள்ளது. இந்த தென்சீனக்கடலில் எங்க ளுக்கும் உரிமை உண்டு என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், புருனை, தைவான்,....... மேலும்

20 பிப்ரவரி 2017 16:04:04

ஈராக்: அய்.எஸ். வசம் இருந்த 10 கிராமங்கள் மீட்பு

ஈராக்: அய்.எஸ். வசம் இருந்த 10 கிராமங்கள் மீட்பு

மொசூல், பிப்.20 மேற்கு மொசூல் பகுதியில் ஈராக் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதல் மூலம் அய்.எஸ் தீவிர வாதிகள் வசம் இருந்த சுமார் 10 கிராமங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதல் மூலம் அய். எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 10 கிராமங்கள் மீட்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட் டுள்ளது. மேற்கு மொசூல் பகுதியை மீட்க நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பொது மக்களுக்கு பெரும் ஆபத்தான சூழல்....... மேலும்

20 பிப்ரவரி 2017 16:01:04

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வேறு நபரிடம் முகம் பெற்ற இளைஞர்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வேறு நபரிடம் முகம் பெற்ற இளைஞர்

வாஷிங்டன், பிப்.19 அமெரிக்கா வில் மின்னெ சோட்டா மாகாணத் தில் உள்ள வுயோமிங் நகரை சேர்ந்தவர் ஆன்டி கான்ட்னெஸ் (31). கடந்த 2006-ஆம் ஆண்டு இவர் துப்பாக்கி யால் சுட்டு தற் கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் மரணம் அடையவில்லை. முகம் சிதைந்தது. அதனுடன் மனம் வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தார். பின்னர் டாக்டரிடம் ஆலோசனை பெற்றார். அப்போது மற்ற உறுப்பு போன்று முகத்தையும் தானம் பெற்று மாற்று அறுவை....... மேலும்

19 பிப்ரவரி 2017 14:37:02

ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், ஜன. 9- தலீபான்க ளின் கொட்டத்தை அடக்குவ தற்கு ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்பி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மய்யம், பென்ட கன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின்மீது 2001-ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் தேதி, பின்லேடனின் அல் கொய்தா இயக்க பயங்கரவாதி கள் விமானங்களை மோதி தாக் குதல் நடத்தி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தனர்.

இந்த அல்கொய்தா பயங்கர வாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து அங்கிருந்த தலீபான்களை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் அங்கு தங்கி இருந்து, தலீபான்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதில் உள் நாட்டுப் படைகளுக்கு பக்க பலமாக இருந்து வந்தன.

ஓரளவு இயல்பு நிலை திரும்பிய நிலையில், அங் குள்ள அமெரிக்க படைகளை கொஞ்சம், கொஞ்சமாக விலக் கிக்கொள்ளும் நடவடிக்கை தொடங்கியது. தற்போது ஆப் கானிஸ்தானில் 8 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், காபூல், பாக்ராம் ஆகிய இடங்களில் உள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் அய்.எஸ். இயக்கத் தினரை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் தென் மேற்கு மாகாணமான ஹெல் மாண்ட் மாகாணத்தில் இருந்து அமெரிக்க படைகள் 2014-ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட் டன.

அதைத் தொடர்ந்து அங்கு தலீபான்கள் மீண்டும் காலூன் றத்தொடங்கினர். சமீப கால மாக அந்த மாகாணத்தில் தலீ பான்கள் கடுமையான தாக்கு தல்களை நடத்தி வருகின்றனர். முக்கிய பகுதிகளை வளைத் துக்கொண்ட அவர்கள், மாகாண தலைநகர் லஷ்கர் காரை நெருங்கி முன்னேறி வருகின்றனர். அவர்களின் முன்னேற்றத்தையும், கொட் டத்தையும் அடக்க முடியாமல் உள்நாட்டுப் படைகள் திணறி வருகின்றன.

இந்த நிலையில் ஹெல் மாண்ட் மாகாணத்தில், நேட்டோ படைகள் தங்கள் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் ராணுவம் கேட்டுக்கொண்டது.

இதற்கிணங்க அமெரிக்கா, ஹெல்மாண்ட் மாகாணத்துக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்புவது என முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க கடற்படையின் மத்திய கட் டளை பிரிவு தளபதி லெப்டி னன்ட் ஜெனரல் வில்லியம் பேட்லர் கூறுகையில், ஆப் கானிஸ்தான் இன்னும் பயங் கரவாதத்தின் பிடியில்தான் உள்ளது. எங்களது நோக்கம், ஆப்கானிஸ்தான் படைகளுக்கு பயிற்சியும், ஆலோசனையும் வழங்குவதுதான். ஆப்கானிஸ் தான் அதைக்கொண்டு தங்கள் பலத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். எங்களது பணியில் பல ஆபத்துகள் உள்ளன என குறிப்பிட்டார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner