முன்பு அடுத்து Page:

ஜெர்மனி அருங்காட்சியகத்தில் தங்க நாணயம் கொள்ளை

 ஜெர்மனி அருங்காட்சியகத்தில் தங்க நாணயம் கொள்ளை

பெர்லின், மார்ச் 29 ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த தங்க நாணயம் நேற்று முன்தினம் இரவு கொள்ளை போனது, அதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (ரூ.3 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.கொள்ளை போன நாணயம் கனடா அரசால்....... மேலும்

29 மார்ச் 2017 15:53:03

டிரோன்களைக் கட்டுப்படுத்தும் துப்பாக்கி- சீனா கண்டுபிடிப்பு!

 டிரோன்களைக் கட்டுப்படுத்தும் துப்பாக்கி- சீனா கண்டுபிடிப்பு!

பெய்ஜிங், மார்ச் 29 ஏவு கணைகளையும், அணுகுண்டு களையும் தாக்கி அழிக்க அதிநவீன தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்த வல்லரசு நாடுகளே, டிரோன்கள் எனப்படும் சிறிய ரக பறக்கும் கருவிகளைக் கட்டுப் படுத்த முடியாமல் திணறி வரு கின்றன. மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் டிரோன்களில் குண்டு களை வைத்து அனுப்பி வெடிக் கச் செய்ய பயங்கரவாதிகள் சதித் திட்டங்களைத் தீட்டுகின்றனர். மிக எளிமையான முறையில் நடத்தப்படும் இந்த வகையான தாக்குதல்களால் ஏராளமான....... மேலும்

29 மார்ச் 2017 15:53:03

மேற்கு மொசூல் ராணுவ நடவடிக்கையில் 300 பொதுமக்கள் உயிரிழப்பு அய்.நா. தகவல்

மேற்கு மொசூல் ராணுவ நடவடிக்கையில் 300 பொதுமக்கள் உயிரிழப்பு   அய்.நா. தகவல்

ஜெனீவா, மார்ச் 29 ஈராக்கின் மேற்கு மொசூல் நகரை கைப்பற்றும் ராணுவ நடவடிக்கையில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்திருப்பதாக அய்.நா. சபை தெரிவித்துள்ளது. ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மேற்கு மொசூல் நகரை அய்.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதனை மீட்பதற் காக கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவர்களுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டுப்படையும் விமான தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலின்போது தீவிரவாதிகள் மட்டுமின்றி,....... மேலும்

29 மார்ச் 2017 15:53:03

உடலில் அணிந்து கொள்ளும் வகையிலான சீன ரோபாட்

 உடலில் அணிந்து கொள்ளும் வகையிலான சீன ரோபாட்

ஷாங்காய், மார்ச் 28 உடல் ஊனமுற்றவர்கள் நடக்க உதவும், உடலிலேயே அணிந்து கொள் ளும் படியான சீனத் தயாரிப்பு ரோபாட்டுக்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளன. சீனாவைச் சேர்ந்த ஆரம்ப நிலை நிறுவனமான ‘போரியர் இன்டலிஜென்ஸ்’ என்னும் நிறுவனம்தான் இத்தகைய உட லிலேயே அணிந்து கொள்ளும் படியான ரோபாட்டுகளை தயா ரிக்க உள்ளது. இந்த ரோபாட்டுக்கு ‘தி போரியர் 1’ என்று பெயரிடப் பட்டுள்ளது. இதன் மாதிரி வடிவமானது இந்த....... மேலும்

28 மார்ச் 2017 15:31:03

பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர் தாக்குதல்

பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர் தாக்குதல்

மொசூல், மார்ச் 28 ஈராக்கின் மொசூல் நகரை பயங்கரவாதி களிட மிருந்து மீட்கும் தாக்குதல் நடவடிக்கைகளை அந்நாட்டு ராணுவம் மீண்டும் தொடங்கி யதாக அறிவித்தது. இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஷகீர் ஜாவ் தத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பயங்கர வாதிகளின் கட்டுப் பாட்டில் உள்ள மொசூலின் பழைய நகரப் பகுதியில் ராணு வத்தினரும் அதிரடிப் படையினரும் மீண்டும் தங்கள் தாக்கு தலை நேற்று (27.3.2017) தொடங்கினர். குறுகலான தெருக்களில் நெருக்கமாக....... மேலும்

28 மார்ச் 2017 15:27:03

ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தோற்றம் ஏன்? செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

  ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தோற்றம் ஏன்? செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சென்னை, மார்ச்  27 சென்னை வேப்பேரி பெரியார் திடலில் செய்தியாளர்களை இன்று  (27.3.2017)தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது: ஒத்தக்கருத்துள்ளவர்கள், அமைப்புகள், கட்சிகள் தேர்தலுக்கு அப்பாற்பட்ட நிலையிலே பாதுகாப்பு அமைப்பாக உருவாக் கப்பட்டிருக்கிறது. ஜனநாயக உரிமை பாது காப்பு கூட்டமைப்பு என்கிற அமைப்பு இன்று உருவாக்கப்படுகிறது. இந்தக்கூட்ட தீர்மானங்களை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் எடுத் துக் கூறினார். தீர்மானம் இந்தக்கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத்....... மேலும்

27 மார்ச் 2017 17:34:05

இந்தியரைக் காப்பாற்ற முயன்ற அமெரிக்க இளைஞருக்கு ரூ. 65 லட்சம்

 இந்தியரைக் காப்பாற்ற முயன்ற அமெரிக்க இளைஞருக்கு ரூ. 65 லட்சம்

வாஷிங்டன், மார்ச் 27 அமெரிக் காவின் கான்சாஸ் நகரில் சிறீநிவாஸ் குச்சிபோட்லா (32) சுடப் பட்டபோது, அவரைக் காப்பாற்ற முயன்று காயமடைந்த இளைஞ ருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 65.38 லட்சம்) பரிசளிக்கப்பட்டது. அய்தராபாதைச் சேர்ந்த மென் பொருள் பொறியாளர் சிறீநிவாஸ் குச்சிபோட்லா அமெரிக் காவில் பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம், கான்சாஸ் நகரி லுள்ள மதுபானக் கூடத்தில் குச்சி போட்லாவும், அவரது நண்பர் அலோக்....... மேலும்

27 மார்ச் 2017 17:17:05

யேமன் அதிபருக்கு மரண தண்டனை! கிளர்ச்சியாளர்கள் “நீதிமன்றம்” தீர்ப்பு

  யேமன் அதிபருக்கு மரண தண்டனை! கிளர்ச்சியாளர்கள் “நீதிமன்றம்” தீர்ப்பு

யேமன், மார்ச் 27 யேமன் அதிபர் அப்துர் ரப்போ மன்சூர் ஹாதிக்கு மரண தண்டனை விதித்து கிளர்ச்சி யாளர்கள் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.யேமனில் சவூதி கூட்டுப் படையின் தாக்குதல் தொடங் கப்பட்டு 2 ஆண்டுகள் நிறை வடைந்ததை யொட்டி இந்தத் “தீர்ப்பு’ வெளியானது குறிப்பிடத் தக்கது. கிளர்ச்சியாளர்களின் செய்தி நிறுவனமான சாபா இது தொடர் பான செய்தியை வெளியிட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது பதவிக் காலம் முடிவுக்கு வந்ததும், அப்துர்....... மேலும்

27 மார்ச் 2017 17:17:05

லண்டன்-நியூயார்க்குக்கு 3 மணி நேரத்தில் பயணம் அதிவேக விமானம் தயாரிப்பு

லண்டன்-நியூயார்க்குக்கு 3 மணி நேரத்தில் பயணம் அதிவேக விமானம் தயாரிப்பு

லண்டன், மார்ச் 27 லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு 3 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் அதிவேக விமானம் தயாரிக்கப்படுகிறது. அதிவேகமாக மின்னல் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய சூப்பர் சோனிக் பயணிகள் விமானம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அந்த விமா னத்தை அமெரிக்காவின் விர்ஜின் தொழில் அதிபர் ரிச்சர்ட் பிரான் சன் தயாரிக்கிறார். அதற்காக இதுவரை ரூ.21 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த விமானத்துக்கு பேபி பூம் என பெயரிடப்பட்டுள்ளது. தற்....... மேலும்

27 மார்ச் 2017 17:17:05

லண்டனில் ‘பிரெக்சிட்’ எதிர்ப்புப் பேரணி

லண்டனில் ‘பிரெக்சிட்’ எதிர்ப்புப் பேரணி

லண்டன், மார்ச் 26 அய்ரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் நேற்று நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் அய்ரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 52 சதவீத பிரிட்டிஷ் மக்கள், வெளியேற ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 48 சதவீதம் பேர் அய்ரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டாம் என்று வாக்களித்தனர். மக்களின்....... மேலும்

26 மார்ச் 2017 15:55:03

டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் நடத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், ஜன.8 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொ னால்டு டிரம்ப் வெற்றி பெற உதவும் வகையில் பிரசாரம் செய்யுமாறு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உத்தரவிட்டதாக அமெரிக்க உளவு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக் குநர், விரைவில் பதவிக்காலம் முடிவடைய உள்ள அதிபர் ஒபாமாவிடம் சமர்ப்பித்துள்ள 31 பக்க அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

கடந்த ஆண்டில் (2016) நடை பெற்ற அமெரிக்க அதிபர் தேர்த லில் வாக்காளர்கள் மீது தாக்கத் தை ஏற்படுத்தும் வகை யில் ஒரு பிரச்சாரத்தை நடத்துமாறு ரஷ்ய அதிபர் உத்தரவிட்டதாக நாங்கள் கணிக்கிறோம். அமெ ரிக்க ஜனநாயக நடைமுறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை யைச் சீர்குலைப்பது, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனின் நற்பெய ருக்கு களங்கம் ஏற்படுத்துவது, அவரது வெற்றி வாய்ப்புகளைச் சிதைப்பது ஆகியவையே ரஷ் யாவின் இலக்குகளாகும். மேலும் அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக் கப்பட வேண்டும் என்று புதி னும், ரஷ்ய அரசுத் தரப்பினரும் விரும்பினர் என்றும் கணித்துள் ளோம். இந்தக் கணிப்புகள் மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் உளவு அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இத னிடையே, இந்த அறிக் கையின் விவரங்கள் குறித்து, புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராகப் பதவியேற்க உள்ள மைக் பென்ஸ் ஆகி யோரிடம் உளவு அதிகாரிகள் குழு எடுத்துக் கூறியுள்ளது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தாம் வெளியிட்ட அறிக்கையில் உளவுத் துறையின் கணிப்பை டிரம்ப் மறுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:

ரஷ்யா, சீனா, மற்ற நாடுகள், வெளி அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் என பல்வேறு தரப்பி னரும் நமது அரசு அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், ஜன நாயகக் கட்சியின் தேசியக் குழு உள்ளிட்ட அமைப்புகள் ஆகிய வற்றின் இணையவெளிக் கட்ட மைப்பைச் சீர்குலைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், அவர்களால் அதி பர் தேர்தல் முடிவுகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடிய வில்லை. குறிப்பாக, வாக்கு இயந்திரங்களிலும் எந்த முறை கேடுகளும் நடைபெறவில்லை. எங்கள் குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவின் இணைய தளத்தை சீர்குலைக்கவும் முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த இணையதளத்தில் கடுமையான பாதுகாப்புக் கட்ட மைப்புகள் இருப்பதால் ஊடுருவ முனைந்தவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவை இணையவெளிப் பாதுகாப்பு மிகுந்ததாக மாற்றுவதற்கான திட் டம் ஒன்றை வகுத்து, நான் பதவியேற்று 90 நாள்களுக்குள் என்னிடம் சமர்ப்பிப்பதற்காக ஒரு குழுவை அமைக்க உள் ளேன். இன்னும் இரண்டு வாரங்களில் நான் பதவியேற் கிறேன். அமெரிக்கர்களின் பாது காப்பே எனது முதல் முன்னுரிமை என்று அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner