முன்பு அடுத்து Page:

போனஸ் பிரச்சினையில் உடன்பாடு போராட்டம் முடிவுக்கு வந்தது

 போனஸ் பிரச்சினையில் உடன்பாடு போராட்டம் முடிவுக்கு வந்தது

யாமோவ்சோக்ரோ, ஜன. 16- மேற்காப்பிரிக்காவில் பிரான்ஸ் நாட்டின் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்துவரும் சிறிய நாடான அய்வரி கோஸ்ட் கொக்கோ உற்பத்தியில் உலகின் முதலிடத் தில் உள்ள நாடாகும். இந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றிவரும் அதிகாரிக ளும், வீரர்களும் சம்பள உயர்வு, வீட்டு வசதி, போனஸ், பதவி உயர்வு போன்ற கோரிக் கைகளுக்காக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியும், போராட் டங்களை நடத்தியும் வருகின்ற னர். குறிப்பாக, முன்னர் ஆயுத மேந்திய போராளிக் குழுவாக....... மேலும்

20 ஜனவரி 2017 15:44:03

இலங்கை அரசியல் சாசன தயாரிப்பு நடவடிக்கையில் இருந்து வெளியேறுவோம்

 இலங்கை அரசியல் சாசன தயாரிப்பு நடவடிக்கையில் இருந்து வெளியேறுவோம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு எச்சரிக்கை கொழும்பு, ஜன. 16- இலங்கையில் கடந்த 1978-ஆம் ஆண்டு ஏற் படுத்தப்பட்ட அரசியல் சாச னத்துக்கு பதிலாக புதிய அரசி யல் சாசனம் ஒன்றை வகுக்க அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. இது தொடர்பாக அமைக் கப்பட்டு இருந்த 6 துணை குழுக்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்டு பிரதான குழு வுக்கு அளித்துள்ளது. புதிய அரசியல் சாசன தயா ரிப்பு நடவடிக்கைகளில் பிர தான தமிழர்....... மேலும்

20 ஜனவரி 2017 15:44:03

கனடா பிரதமர் ஜஸ்டின் பொங்கல் வாழ்த்து

  கனடா பிரதமர் ஜஸ்டின் பொங்கல் வாழ்த்து

டொரண்டோ, ஜன. 16- கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடியு, தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொலிச் செய்தி யில், “வணக்கம். கனடாவாழ் தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் தங்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து தைப் பொங்கலை கொண்டாடுகின்றனர். இந்தப் பொங்கல் சிறப்பான அர்த்தமும், பாரம்பரியமும் கொண்டது. இப்பண்டிகை, அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தது. கனடா வாழ் தமிழர்கள் இந்த நாட்டை வலிமையான, வளமான நாடாக ஆக்கியவர்கள். அவர்களுக்கு....... மேலும்

20 ஜனவரி 2017 15:44:03

ஈரானில் தீ விபத்து: 30 தீயணைப்பு வீரர்கள் பலி

ஈரானில் தீ விபத்து: 30 தீயணைப்பு வீரர்கள் பலி

டெஹ்ரான், ஜன.20 ஈரானில் 17 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து தீயணைப்பு வீரர்கள் 30 பேர் உயிரிழந்தனர். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வியாழக்கிழமை இந்த தீ விபத்து நிகழ்ந்தது. “பிளாஸ்கோ’ என்று அறியப்பட்ட அந்தக் கட்டடம் 1960-களில் கட்டப்பட்டது. குடி யிருப்புகள், அலுவலகங்கள், கடைகள் ஆகியவை அதில் இருந்தன. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு அந்தக் கட்டடத்தில் தீ பிடித்ததாகத் தகவல் அறிந்து....... மேலும்

20 ஜனவரி 2017 14:54:02

அய்ரோப்பிய நாடாளுமன்ற தலைவராக அன்டோனியோ தஜனி தேர்வு

அய்ரோப்பிய நாடாளுமன்ற தலைவராக அன்டோனியோ தஜனி தேர்வு

ஸ்டிராஸ்பர்க், ஜன.19 751 உறுப்பினர்களை கொண்ட அய்ரோப்பிய நாடாளுமன்ற தலைவராக இத்தாலியை சேர்ந்த அன்டோனியோ தஜனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அய்ரோப்பிய நாடாளு மன்றம் என்பது அய்ரோப்பிய ஒன்றியத்தின் நேரடியாகத் தேர்ந் தெடுக்கப்படும் அமைப்பாகும். இந்த நாடாளுமன்றத்தில் 751 (முன்னதாக 766) நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்திய பாராளுமன்றத்தை அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரும் வாக்காளர்களைக் கொண்ட மக்களாட்சி அமைப் பாகவும் நாட்டு எல்லைகளைக் கடந்த மிகப் பெரிய மக்களாட்சி அமைப்பாகவும் அய்ரோப்பிய நாடாளுமன்ற....... மேலும்

19 ஜனவரி 2017 16:21:04

ஏமன் உள்நாட்டுப் போரில் 10 ஆயிரம் பேர் பலி: அய்.நா. தகவல்

ஏமன் உள்நாட்டுப் போரில் 10 ஆயிரம் பேர் பலி: அய்.நா. தகவல்

ஏடன், ஜன.18 ஏமன் உள் நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலியானதாக அய்.நா.சபை தெரிவித்துள்ளது.ஏமனில் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலைநகர் கனா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப் பற்றி தனி அரசு நடத்தி வரு கின்றனர். எனவே அதிபர் மன்சூர் ஹாதி ஏடனை தலை நகராக கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார்........ மேலும்

18 ஜனவரி 2017 18:06:06

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடக் கூடாது: ஒபாமா எச்சரிக்கை

 ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடக் கூடாது: ஒபாமா எச்சரிக்கை

வாஷிங்டன், ஜன.18 ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடக் கூடாது என்று புதிய அதிபராகப் பொறுப் பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்பை, தற்போதைய அதிபர் ஒபாமா மறைமுகமாக எச்சரித் துள்ளார். தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கா னவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளா தாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகளும் ஒப்புக் கொண்டு, இருதரப்பின ருக்கும் இடையே....... மேலும்

18 ஜனவரி 2017 18:04:06

அய்ரோப்பிய பொதுச் சந்தையிலிருந்தும் விலகல் பிரிட்டன் அறிவிப்பு

  அய்ரோப்பிய பொதுச் சந்தையிலிருந்தும் விலகல்   பிரிட்டன் அறிவிப்பு

பிரிட்டன், ஜன.18 அய்ரோப்பிய யூனியனிலிருந்து விலகும்போது, அய்ரோப்பிய பொதுச் சந்தையிலிருந்தும் பிரிட்டன் விலகும் என்று அந்த நாட்டின் பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார். அய்ரோப்பிய யூனியனிலி ருந்து விலகுவதற்காக, அதன் 28 உறுப்பு நாடுகளுடன் நடத்த விருக்கும் பேச்சுவார்த்தை அம் சங்கள் குறித்து தெரசா மே லண் டனில் செவ்வாய்க்கிழமை கூறிய தாவது: அய்ரோப்பிய யூனியனிலி ருந்து விலகினாலும், அய்ரோப் பிய பொதுச் சந்தையில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்கலாம் என்ற யோசனையை ஏற்க....... மேலும்

18 ஜனவரி 2017 18:04:06

அமெரிக்க நாடாளுமன்ற குழுக்களில் இந்திய வம்சாவளியினர்

அமெரிக்க நாடாளுமன்ற குழுக்களில் இந்திய வம்சாவளியினர்

வாஷிங்டன், ஜன.17 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியினர் அய்வரும் முக்கிய நாடாளுமன்றக் குழுக்களில் இடம் பெற்றுள்ளனர். அண்மையில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அத்துடன் நாடாளுமன்றத்துக்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அய்ந்து பேர் வெற்றி பெற்றனர். அவர்கள் அய்ந்து பேரும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற குழுக்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அய்ந்து பேருமே ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலிக்கன்....... மேலும்

17 ஜனவரி 2017 17:29:05

குடியிருப்புப் பகுதிக்குள் சரக்கு விமானம் விழுந்து விபத்து: 32 பேர் பலி!

குடியிருப்புப் பகுதிக்குள் சரக்கு விமானம் விழுந்து விபத்து: 32 பேர் பலி!

பிஷ்கேக், ஜன.17 கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சரக்கு விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த விபத்தில் 37 பேர் பலியானார்கள். துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சரக்கு விமானம் ஒன்று இஸ்தான்புலில் இருந்து ஹாங்காங்கிற்கு சென்று கொண்டிருந்தது. வழியில் பிஷ்கேக் விமான நிலையத்தில் அந்த விமானம் நேற்று காலை  தரையிறங்கிய போது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது மக்கள் நெருக்கம் நிறைந்த பிஷ்கேக் நகரில் நேற்று கடும் பனிமூட்டம்  நிலவியது. இந்த பனிமூட்டத்துக்கு இடையே தரையிறங்க....... மேலும்

17 ஜனவரி 2017 17:24:05

காற்று மாசுபாட்டால் நிறம் மாறும் புல்லட் ரயில்கள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காற்று மாசுபாட்டால்
நிறம் மாறும் புல்லட் ரயில்கள்

பீஜிங், ஜன.6 சீனாவில் நிலவி வரும் கடும் காற்று மாசுபாட் டால் அங்குள்ள புல்லட் ரயில் கள் நிறம் மாறி காட்சியளிக் கின்றன.

சீனாவின் பல பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்தது. இத னால் அந்நாட்டு அரசால் இரண்டு முறை உயர் எச்சரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள்  தற்காலிகமாக மூடப்பட்டன.

தற்போது மீண்டும் காற்று மாசுபாடு அதிகரித் துள்ளது.பீஜிங் உள்ளிட்ட 72 நகரங்களில் பனிப்புகை சூழ்ந்துள்ளது. இது குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மய்யம் மக்களுக்கு எச்ச ரிக்கை விடுத்தது. காற்றுமாசுடன் கூடிய பனிப்புகை காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல விமானங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

இந்த காற்று மாசுபாடு அங்கு இயக்கப்படும் ரயில் களையும் விட்டு வைக்க வில்லை. முழுவதும் வெள்ளை நிறத்தில் இயக்கப் பட்டு வந்த புல்லட் ரயில்கள், காற்று மாசு பாட்டின் காரணமாக தற்போது பழுப்பு நிறத்தில்  மாறியுள்ளன.

அந்தக் காட்சியை அங் குள்ளவர்கள் நிழற்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். சீனாவில், சுத்த மான காற்று விலைக்கு விற்கப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner