முன்பு அடுத்து Page:

ஜெருசலேமில் காவல்துறையினருடன் மோதல்: இரு பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

ஜெருசலேமில் காவல்துறையினருடன் மோதல்: இரு பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

ஜெருசலம், ஜூலை 24- ஜெருச லேமில் உள்ள புனிதத் தலம் அருகே இசுரேல் காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் மேலும் இரு பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.இதைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களில் நடைபெற்ற பல்வேறு வன்முறை சம்பவங் களில் உயிரிழந்தோர் எண் ணிக்கை 8ஆக அதிகரித்தது.ஜெருசலேம் வன்முறை குறித்து இசுரேல் பிரதமர் பெஞ் சமின் நெதன்யாஹு ஞாயிற் றுக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து, அவசர ஆலோசனை நடத்தி னார்.ஜெருசலேம் புராதன நகரப்....... மேலும்

24 ஜூலை 2017 15:03:03

வான்வழித் தாக்குதலில் 16 ஆப்கன் வீரர்கள் பலி

வான்வழித் தாக்குதலில் 16 ஆப்கன் வீரர்கள் பலி

கெரிஷ்க், ஜூலை 23- ஆப் கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நிகழ்த்திய வான் வழித் தாக்குதலில் 16 காவலர் கள் உயிரிழந்தனர்.இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:ஹெல்மந்த் மாகாணம் கெரிஷ்க் மாவட்டத்தில் வெள் ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட் டது. தலிபான் பயங்கரவாதிகள் பெரும்பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ள இந்த மாவட்டத் தில் அமெரிக்கப் படை நிகழ்த் திய வான்வழித் தாக்குதலில் காவல் துறையைச் சேர்ந்த இரண்டு மூத்த....... மேலும்

23 ஜூலை 2017 10:29:10

பாகிஸ்தானுக்கான ரூ.2,300 கோடி நிதி நிறுத்தம்: அமெரிக்கா முடிவு

பாகிஸ்தானுக்கான ரூ.2,300 கோடி நிதி நிறுத்தம்: அமெரிக்கா முடிவு

வாஷிங்டன், ஜூலை 22 பாகிஸ் தானுக்கு அளிக்கப்பட இருந்த சுமார் ரூ.2,300 கோடி (350 மில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை நிறுத்தி வைப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துள் ளது. பாகிஸ்தான்-அமெரிக்கா கூட்டு நடவடிக்கை நிதிக்காக அமெரிக்கா தரப்பில் ஆண்டு தோறும் நிதி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 2016-ஆம் ஆண்டு கூட்டு நடவடிக்கை நிதிக்கு சுமார் ரூ.2,300 கோடி நிதியை பாகிஸ்தானுக்கு வழங் குவதற்கு அமெரிக்கா திட்ட மிட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற பாதுகாப்பு....... மேலும்

22 ஜூலை 2017 16:16:04

இந்திய துணைத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

இந்திய துணைத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத், ஜூலை 21 போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்திவருவதாக இஸ்லாமா பாதில் உள்ள இந்திய துணைத் தூதர் ஜே.பி.சிங்கை தொடர்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமை யும் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.தெற்கு ஆசியா மற்றும் சார்க் அமைப்புக்கான பாகிஸ்தான் பொது இயக்குநர் முகமது ஃபைசல், ஜே.பி.சிங்குக்கு அழைப்பாணை அனுப்பி புதன் கிழமை நேரில் வரவழைத்தார். இந்நிலையில், வியாழக்கிழமை யும் அவரை வரவழைத்து, போர்....... மேலும்

21 ஜூலை 2017 15:23:03

எச்1பி விசா விவகாரம்: அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு

எச்1பி விசா விவகாரம்: அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு

வாஷிங்டன், ஜூலை 21 அமெரிக்காவில் எச்1பி விசா பெற விண்ணப்பிப்பவர்களுக்கு ஒ பிரிவு விசா பெற விண்ணப் பிக்குமாறு ஆலோசனை வழங் கப்படுவதாக அமெரிக்க நாடாளு மன்ற மேலவை (செனட்) எம்.பி. சக் கிராஸ்லி கூறியுள்ளார்.வெளிநாடுகளில் இருந்து வரும் திறமையான பணியாளர் களுக்கு அமெரிக்க வழங்கி வரும் எச்1பி விசாவுக்கு அதிபர் டிரம்பின் நிர்வாகம் சமீபத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பிட்ட எண்ணிக் கையில் மட்டும்தான் எச்1பி விசா வழங்கப்பட்டுகிறது.இதையடுத்து,....... மேலும்

21 ஜூலை 2017 15:21:03

குறைந்து வரும் எய்ட்ஸ் மரணங்கள் - அய்.நா. அறிக்கை

குறைந்து வரும் எய்ட்ஸ் மரணங்கள் - அய்.நா. அறிக்கை

வாஷிங்டன், ஜூலை 21 எய்ட்ஸ் நோயால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கி யுள்ளதாக அய்.நா. அறிவித்துள் ளது.பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் எய்ட்ஸ் அறிவியல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. அதனை யொட்டி, அய்.நா. வெளியிட் டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த 2016-ஆம் ஆண்டில், எய்ட்ஸ் நோய் காரணமாக உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். இது கடந்த 2005-ஆம் ஆண்டில் எயிட்ஸ் நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகை யில் ஏறத்தாழ பாதியாகும்........ மேலும்

21 ஜூலை 2017 15:17:03

கத்தார் மீதான தடையால் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்கு பாதிப்பில்லை: பிபா

கத்தார் மீதான தடையால் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்கு பாதிப்பில்லை: பிபா

லண்டன், ஜூலை 20 கத்தார் மீது 7 அரபு நாடுகள் தடைவிதித்துள்ள விவகாரம் 2022ஆ-ம் ஆண்டு நடக்க உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டி களை பாதிக்காது என சர்வதேச கால்பந்து சம்மேளமான பிபா தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தை ஊக்குவிப் பதாக கூறி அரபு நாடுகளான சவுதி அரேபியா, அய்க்கிய அமீரகம், பஹ்ரைன், எகிப்து, ஏமன், லிபியா ஆகிய நாடுகள் கத்தாரை ஒதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தீவிரவாதத் திற்கு....... மேலும்

20 ஜூலை 2017 15:52:03

விண்வெளி, கணினி பாதுகாப்பு துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் அமெரிக்கா வலியுறுத்தல்

விண்வெளி, கணினி பாதுகாப்பு துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன், ஜூலை 20 விண்வெளி, கணினி பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திடம் செனட் அவை குழு வலியுறுத்தி யுள்ளது.அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் (மேலவை) செல்வாக்கு மிகுந்த குழுவாக கருதப்படும் பாதுகாப்புப் படை களுக்கான குழு, செனட் அவையிடம் 600 பக்கங்களைக் கொண்ட ஓர் அறிக்கையை அளித்துள்ளது. அந்த அறிக்கையானது, செனட் சபையில் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு அதிகாரச்....... மேலும்

20 ஜூலை 2017 15:39:03

பாதுகாப்புப் படைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு பிரான்சு ராணுவத் தளபதி பதவி விலகல்

பாதுகாப்புப் படைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு பிரான்சு ராணுவத் தளபதி பதவி விலகல்

பாரீசு, ஜூலை 20  பாதுகாப்புக் கான நிதி ஒதுக்கீடு செய்வதில் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த நாட்டு ராணுவ தலைமைத் தளபதி பியர்டே வில்லியர்ஸ் (60) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.பிரான்சில் இரண்டு மாதங் களுக்கு முன்னர் புதிதாக அதிபர் பொறுப்பை ஏற்ற இமானுவல் மேக்ரான் (39), பாதுகாப்புப் படைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் 85 கோடி யூரோவை (சுமார் ரூ.6,248 கோடி) குறைக்கவிருப் பதாக அறிவித்திருந்தார்.இந்த....... மேலும்

20 ஜூலை 2017 15:36:03

பாகிஸ்தானில் சுதந்திர நாடு கோரி சிந்து மாகாண மக்கள் போராட்டம்

பாகிஸ்தானில் சுதந்திர நாடு கோரி சிந்து மாகாண மக்கள் போராட்டம்

இசுலாமாபாத், ஜூலை 19  பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகா ணத்தில், சுதந்திர நாடு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனால் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு புது சிக்கல் ஏற் பட்டுள்ளது.பாகிஸ்தானில் கில்கிட், ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலுசிஸ் தான் உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திர நாடு கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகின்றன. அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டம் நடைபெறும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீர், கில்கிட்....... மேலும்

19 ஜூலை 2017 14:53:02

ஆஸ்திரேலியாவுடனான ராணுவ உறவு துண்டிப்பு: இந்தோனேசியா அறிவிப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தோனேசியா, ஜன.5 ஆஸ் திரேலியாவுடனான ராணுவ உறவை தாற்காலிகமாகத் துண் டித்திருப்பதாக இந்தோ னேசியா புதன்கிழமை அறிவித்தது.

இதையடுத்து, அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா  - இந்தோனேசியா இடையிலான உறவில் மேலும் சிக்கல் ஏற் படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்தோனேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர் வுர்யான்டோ கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை தாற் காலிகமாக நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட் டுள்ளது. தொழில்நுட்பக் காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு தொடர்பாக ஆஸ்திரேலிய ராணுவத்துக்கு கடந்த மாதமே கடிதம் அனுப் பப்பட்டுள்ளது.

தொழில்நுட்பப் பிரச்னைகள் விரைவில் தீரும் என்று நம்பு கிறோம் என்றார் அவர்.

இந்தோனேசிய ராணுவத்தி னருக்கு ஆஸ்திரேலியா பயிற்சி யளிப்பதற்கான சாதனங்கள், இந்தோனேசியாவை அவமதிக் கும் வைகையில் அமைந்துள்ள தால் இந்த முடிவு எடுக்கப் பட்டதாக “கம்பாஸ்’ என்ற இந் தோனேசிய நாளிதழ் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் தகவலை ராணுவ செய்தித் தொடர்பாளர் வுர்யான்டோ மறுத்தார்.

அண்டை நாடுகளான ஆஸ்திரேலியாவும், இந்தோ னேசியாவும் நட்புறவைக் கொண்டிருந்தாலும், அவ்வப் போது அந்த உறவில் பதற்றம் அதிகரித்து வருகிறது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner

-- >