
வாஷிங்டன், மே 24- அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்திவருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் கிட்டத்தட்ட 50 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். பல தகுதிச் சுற்றுகளைத் தாண்டி 54 பேர் இறுதி போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் முதல் இடத்தை இந்திய வம்சாவளி மாணவன் சாத்விக் கர்னிக் பெற்றார். இவர் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசித்து....... மேலும்
24 மே 2013 16:08:04

ரியாத், மே 24- சவுதி அரேபிய குடிமக்களுக்கு உள்நாட்டு நிறுவனங் களில் 10 சதவீத வேலை வாய்ப்பு வழங்க வேண் டும் என்ற நிடாகட் சட் டத்தை அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிமுகப் படுத்தியது. இதனால், சவுதியில் வேலை செய்யும் லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் தாய் நாட்டிற்கு திரும்ப நேரிட்டுள்ளது. மேலும், உரிய அனுமதியின்றி தங் கள் நாட்டில் தங்கி யுள்ள வெளிநாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,....... மேலும்
24 மே 2013 16:05:04

இஸ்லாமாபாத், மே 23- பாகிஸ்தானின் முக்கிய துறைமுகங்களில் ஒன் றான குவாடர் துறை முகத்தை கையாளும் ஒப்பந்தத்தை சீனா கடந்த ஆண்டு பெற்றது. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்களுக்கு இந்த துறைமுகம் தான் மிக குறைந்த தூரத்தில் உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. ஹோர்மஸ் ஜல சந்திப்பு பகுதியில் இந்த துறைமுகம் அமைந்துள் ளது. இங்கிருந்து மேற்கு சீனாவின் துறைமுகங் கள்....... மேலும்
23 மே 2013 16:05:04

அமெரிக்கா, மே 22- அமெரிக்காவில் ஒக்ல ஹோமா நகரில் திங்கள் கிழமை வீசிய பெரும் சூறாவளியில் சிக்கி 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 233 பேர் காயமடைந்தனர். ஒக்லஹோமா நகரின் மூர் பகுதியில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியால் அந்நக ரமே சின்னாபின்னாமாகி விட்டது. ஏராளமான வீடுகள், பள்ளிகள் முற் றிலும் சேதமடைந்தன. இச்சூறாவளியால் 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 70 குழந்தைகள் உள்பட....... மேலும்
22 மே 2013 15:51:03

ரியாத், மே 22- புதிய பாஸ்போர்ட்களுடன் இந்தியாவில் இருந்து எங்கள் நாட்டிற்கு வேலை செய்ய வரும் இந்தியர் களை அனுமதிக்க முடி யாது என சவுதி அரே பியா அரசு சமீபத்தில் அறிவித்தது. பழைய இந்திய பாஸ் போர்ட்களில் சம்பந் தப்பட்ட நபர்களின் புகைப்படம் இரண் டாம் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால், புதிய பாஸ்போர்ட்டில் மூன்றாம் பக்கத்தில் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இவ்வகையில் மூன் றாம் பக்கத்தில் புகைப் படம் இடம்பெற்றுள்ள....... மேலும்
22 மே 2013 15:43:03

பாக்தாத், மே 21- ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கும் இடையே சமய நம்பிக்கையில் வேறுபாடு காரணமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஈராக்கை ஆண்டு வரும் ஷியா முஸ்லிமான நவுரி மாலிகியின் ஆட்சிக்கு எதிராக சன்னி பிரிவு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அரசுக்கும், சன்னி பிரிவு ஆயுதம் ஏந்தியவர்களுக்கும் இடையே சமீப....... மேலும்
21 மே 2013 15:27:03

வாஷிங்டன், மே 21- 18 வயதான அமெரிக்க வாழ் இந்தியப் பெண் ஒருவர், 20 வினாடிகளில் செல் போனை சார்ஜ் செய் யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சர கோட்டா நகரில் வாழ்ந்து வரும் ஈஷா கரே என்ற பெண் இந்த சாதனை யைப் புரிந்துள்ளார். இதற்காக, இண்டெல் அறக்கட்டளை அளித்த இளம்....... மேலும்
21 மே 2013 15:25:03

நியூயார்க், மே 21- அமெரிக்காவின் நியூ யார்க் பல்கலைக் கழ கத்தில், அமெரிக்க அர சின் நிதி உதவி பெற்று, காந்த ஒத்திசைவு குறித்த ஆராய்ச்சி ஒன்றில், மூன்று சீன நாட்டு ஆராய்ச்சி யாளர்கள் ஈடுபட்டுள்ள னர். இந்த ஆராய்ச்சி பற் றிய தகவல்களை வெளி யிட, அரசு நிதி உதவி பெறும் சீன ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர் கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திங்களன்று, மன் ஹாட்டன்....... மேலும்
21 மே 2013 15:23:03

டாக்கா, மே 20- வங்காள தேச சுதந்திரத்திற்காக 1971ஆம் ஆண்டு நடந்த போரில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்களுக்கு எதிராக வரும் தீர்ப்பை கண்டித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் நடத்தி வரும் போராட்டத் திற்கு இந்த மாதம் முன்னதாகவே 28 பேர் கொல்லப்பட்டனர். சில அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் என்ற பெயரில், வங்க....... மேலும்
20 மே 2013 16:05:04

துபாய், மே 20- அரே பிய வளைகுடா நாடுகளில் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளி லிருந்துதான் அதிகமா னோர் ஒப்பந்த அடிப் படையில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவ ரும் விடுதி பணி இடங் களில் தான் தூரத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள னர். அப்படி, துபாயில் பல்லாயிரக்கணக்கா னோர் மிகப்பெரிய கட் டுமானக் கம்பெனிகள், அரேப்டெக் கம்பெனி யில் வேலைபார்த்து வரு கின்றனர். இவர்கள் அதிகம் சம் பளம் உள்ளிட்ட....... மேலும்
20 மே 2013 15:57:03

தைபே, ஆக. 4- பிலிப் பைன்ஸ் மற்றும் தைவான் நாட்டில் சாவ்லா புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடும் சூறா வளி காற்றும் வீசி வருவ தால் சாலைகளில் விபத்து அதிகரித்துள்ளது.
புயல் மற்றும் வெள் ளத்தில் சிக்கி பிலிப் பைன்சில் 37 பேரும், தைவானில் 5 பேரும் பலியாகினர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்த சுமார் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாது காப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரைக் காண வில்லை. அவர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சீனாவின் தென்கிழக்கு கடற்பகுதியில் மய்யம் கொண்டிருந்த சாவ்லா புயல் நேற்று காலையில் கரையைக் கடந்தது. இதனால் மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத் தில் காற்று வீசுகிறது. தொடர்ந்து கனமழை யும் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தண்ணீர் கசிவு ஏற்பட்டதைய டுத்து பிலிப்பைன்சில் உள்ள தங்கச் சுரங்கம் மூடப்பட்டது. கிங்டோ நகரில் உள்ள பன்னாட்டு விமான நிலையமும் கடு மையாக பாதிக்கப்பட்ட தால் அங்கிருந்து கிளம் பும் 29 விமானங்கள் இன்று ரத்து செய்யப் பட்டன. இதேபோல் தரைவழிப் போக்குவரத் தும் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது.