Banner
முன்பு அடுத்து Page:

கூகுளின் தானியங்கி கார்: புத்தாண்டில் சோதனை ஓட்டம்

கூகுளின் தானியங்கி கார்: புத்தாண்டில் சோதனை ஓட்டம்

சான் பிரான்சிஸ்கோ, டிச. 25_ எல்லா தேடல்க ளுக்கும் விடை தரும் இணைய ஜாம்பவானான கூகுள் கடந்த சில ஆண் டுகளாகவே பல்வேறு தொழில் நுட்பங்களில் கவ னம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது நீண்ட நாள் ஆய்வின் பலனாக தனது முதல் தானியங்கி காரை அந்நிறு வனம் தயாரித்துள்ளது. சோதனை ஓட்டத்திற்காக அந்த கார் தயார் நிலையில் உள்ளது. இந்த காரில் ஸ்டியரிங், ஆக்ஸிலேட்டர், பிரேக் என்று எதுவுமே இல்லை,....... மேலும்

25 டிசம்பர் 2014 16:05:04

கம்யூனிச கொள்கைகளை அமெரிக்கா மதிக்க வேண்டும்: கியூபா அதிபர்

கம்யூனிச கொள்கைகளை அமெரிக்கா மதிக்க வேண்டும்: கியூபா அதிபர்

ஹவானா, டிச. 22_ அமெரிக்காவும் கியூபாவும் இரு நாடுகளுக்கு இடை யேயான தூதரக உறவுக ளைப் புதுப்பிக்க இருக்கும் நிலையில் நேற்று கியூபா அதிபர் ரஃபேல் காஸ்ட்ரோ அமெரிக்கா கியூபாவின் கம்யூனிச கொள்கைகளை மதிக்க வேண்டும் என்றார். இரு நாட்டிலும் இருந்து தத்தமது நாட்டிற்கு புலம் பெயர்ந்தவர்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நல்லிணக் கத்தை சீர்குலைக்க முயற் சிக்கலாம் எனவும் அவர் எச்சரித்தார். 18 மாத ரகசியப் பேச்சு வார்த்தைக்கு பிறகு....... மேலும்

22 டிசம்பர் 2014 17:02:05

காசா மீது இஸ்ரேல் விமான தாக்குதல்

காசா மீது இஸ்ரேல் விமான தாக்குதல்

காசா சிட்டி, டிச. 21_ காசாவில் 50 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்த போரானது, கடந்த ஆகஸ்ட் மாதம் பேர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இந்நிலையில் 4 மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேலிய விமானம், காசாவின் மீது தாக்குதல் நடத்தியது. காசா வில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில் இந்த....... மேலும்

21 டிசம்பர் 2014 15:54:03

ஸ்னோடனை விசாரிக்க புதிய வழி

ஸ்னோடனை விசாரிக்க புதிய வழி

அமெரிக்க உளவுத் துறை குறித்த பல்வேறு ரகசியங்களை வெளியிட்ட வர் எட்வர்ட் ஸ்னோடன். இதனால் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகி, அங்கிருந்து வெளியேறி தற்போது ரஷ்யாவில் தற்காலிக தஞ்சமடைந்து உள்ளார். அவரிடம் இருந்து தகவல்களை பெறுவதற்காக ரஷ்ய உளவுத்துறை அதிகாரி கள் ரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது தற்போது வெளிவந்து உள்ளது. அதன்படி ரஷ்யாவின் செக்ஸ் பாம் உளவாளி என வர்ணிக்கப் படும் அன்னா சாப்மன் என்ற மாடலிங் பெண் ஒருவரை ஸ்னோடனுடன்....... மேலும்

21 டிசம்பர் 2014 15:53:03

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: சீனா சோதனை

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: சீனா சோதனை

அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று, கண்டம் விட்டு கண்டம் பாயும் வல் லமை கொண்ட "டி.எப்-41' என்ற ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையை சீன ராணுவம் கடந்த 13ஆம் தேதி சோதனை செய்ததாக "வாஷிங்டன் ஃப்ரீ பீகன்' என்ற செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதற்கு முன்பும், சீனாவின் ஏவுகணை சோத னைகளை இந்த நிறுவ னம் உலகுக்கு தெரிவித்தது. இந்த ஏவுகணை, ஒரே நேரத்தில் 10 ஆயுதங்க ளைச்....... மேலும்

21 டிசம்பர் 2014 15:52:03

அமெரிக்க வான்வழித் தாக்குதலில் முக்கிய அய்.எஸ். தலைவர்கள் சாவு

அமெரிக்க வான்வழித் தாக்குதலில் முக்கிய அய்.எஸ். தலைவர்கள் சாவு

வாஷிங்டன், டிச.20_ ஈராக்கில் உள்ள இஸ் லாமிய தேச (அய்.எஸ்.) பயங்கரவாதிகளின் நிலைகள் மீது கடந்த சில வாரங்களாக அமெரிக்கப் போர் விமா னங்கள் நடத்திய தாக்கு தல்களைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் பலியாகியுள் ளனர் என்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. வாஷிங்டனில் அமெரிக் கப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி இது தொடர் பாக கூறிய விவரம்: கடந்த நவம்பர் மாதம் முதல், இராக்கில்....... மேலும்

20 டிசம்பர் 2014 18:05:06

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியது: புகை மூட்டத்தால் விமான நிலையம் மூடப்பட்டது

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியது: புகை மூட்டத்தால் விமான நிலையம் மூடப்பட்டது

ஜகார்த்தா, டிச.20 நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் இந்தோனேஷியாவில் 129 எரிமலைகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலையில் சீற்றத்துடன் இருக்கின்றன. இதில் வடக்கு மலுக்கு மாகாணத் தின் கமலாமா மலையில் உள்ள எரிமலை ஒன்று நேற்று மாலை வெடித்து சிதறியது. இதையடுத்து அப்பகுதி யில் உள்ள அனைவரும் உடனடியாக வெளியேறும் படி அரசு உத்தரவிட்டது. மலையில் வசித்து வந்த 11 பேர் சரிவில் இறங்கி வரும்போது காயமடைந் தனர். 3 பேருக்கு....... மேலும்

20 டிசம்பர் 2014 18:02:06

கியூபாவுடனான உறவை புதுப்பித்தது அமெரிக்கா

கியூபாவுடனான உறவை புதுப்பித்தது அமெரிக்கா

வாஷிங்டன், டிச.19_ கம்யூனிச நாடான கியூபாவு டனான உறவை பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா புதுப்பித்துக் கொண்டது. இதுதொடர்பான அறி விப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, கியூபா தலைநகர் ஹவானா வில் மீண்டும் அமெரிக்கத் தூதரகத்தை ஏற்படுத் துவது; வர்த்தக, சுற்றுலா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது ஆகிய முயற் சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதுதொடர்பாக அமெ ரிக்காவில் தொலைக்காட்சி மூலம் மக்களிடையே அந்நாட்டு அதிபர் ஒபாமா பேசியதாவது: கியூபா உடனான உறவை புதுப்பித்துக்கொள்....... மேலும்

19 டிசம்பர் 2014 16:57:04

பாகிஸ்தானில் பள்ளியைத் தொடர்ந்து மகளிர் கல்லூரியிலும் தாக்குதல் ஆப்கன் வங்கியில் மனித குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில் பள்ளியைத் தொடர்ந்து மகளிர் கல்லூரியிலும் தாக்குதல் ஆப்கன் வங்கியில் மனித குண்டுவெடிப்பு

கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட தலிபான்கள் இஸ்லாமாபாத், டிச. 8_ பாகிஸ்தானில் ராணுவப் பள்ளியை குறிவைத்து, தலிபான்கள் நடத்திய பயங்கர தாக்குதலில் மாணவர்கள், ஆசிரியர் கள் உள்பட உயிரிழந் தோர் எண்ணிக்கை, 148 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்த பாகிஸ் தானே சோகத்தில் மூழ்கி யுள்ள நிலையில், அந்நாட் டில் உள்ள மகளிர் கல்லூ ரியில் தீவிரவாதிகள் நேற்று மற்றொரு தாக்கு தல் நடத்தியுள்ளனர். ஆப்கன் வங்கியிலும் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதனால்,....... மேலும்

18 டிசம்பர் 2014 17:01:05

பாகிஸ்தானில் தலிபான்கள் வெறிச் செயல் 132 மாணவர்கள் உள்பட 141 பேர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் தலிபான்கள் வெறிச் செயல் 132 மாணவர்கள் உள்பட 141 பேர் சுட்டுக் கொலை

பாகிஸ்தான், டிச. 17_ பாகிஸ்தானில் பெஷாவர் நகரிலுள்ள ராணுவத்தி னர் நடத்தும் பள்ளிக்குள் செவ்வாய்க்கிழமை புகுந்த தலிபான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப் பாக்கியால் சுட்டதில் 132 மாணவர்கள் உள்பட 141 பேர் உயிரிழந்தனர். இந்தப் பள்ளிக்குள், தலிபான் தற்கொலைப் படையினர் 7 பேர், ராணு வச் சீருடையில் பாகிஸ் தான் நேரப்படி காலை 10.30 மணிக்கு நுழைந்த னர். ஒவ்வொரு வகுப்புக் கும் சென்று அந்தப் பயங் கரவாதிகள் கண்மூடித் தனமாக....... மேலும்

17 டிசம்பர் 2014 17:04:05

வளர்ச்சி வங்கியை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் ஆர்வம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், ஏப். 24- இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப் ரிக்கா ஆகிய வளரும் நாடு கள் இணைந்து பிரிக்ஸ் எனும் அமைப்பை உரு வாக்கியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. அதில் இந்த அமைப்புக்கென ஒரு வங்கியை உருவாக்க தீர்மானித்தனர். உலக வங்கி மற்றும் இன்டர்நேஷனல் மானி டரிங் பண்ட் ஆகிய இரு உலக வங்கி அமைப்பு களும் இதற்கு இசைவு தரும் எனவும், பிரிக்ஸ் நாடுகளும் புதிய வங்கி உருவாவதற்கான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் பிரிக்ஸ் அமைப்பின் நிதித்துறையின் தலைமை பொருளாதார ஆலோ சகர் கவுசிக் பாசு தெரி வித்துள்ளார். இதுபற்றி மேலும் அவர் கூறுகை யில்:- புதிதாக உருவாக்கப் படும் வங்கி நிர்வாகத் தில் அனைத்து நாடுகளின் கொள்கை வகுப்பாளர் களும் நிபுணர்களும் பங்கு பெறுகிறார்கள் எனவும், இந்நிபுணர்கள் குழு விரைவில் அமைக் கப்படும் எனவும் தெரி வித்தார். இதற்கு முந் தைய பிரிக்ஸ் மாநாடு களைக் காட்டிலும் தற் போது நடைபெற்ற மாநாட்டில் அனைத்து உறுப்பு நாடுகளும் தங் களுக்கென்று தனி வங்கி உருவாக ஆர்வம் காட்டு கின்றன. தான் உலக வங்கி மற்றும் இன்டர் நேஷனல் மானிடரிங் பண்ட் அதிகாரிகளுடன் பேசியதாகவும் அவர் களிடம் இருந்து சாத கமான தகவல்கள் வந் துள்ளதாகவும் தெரிவித் தார். மேலும், அவர் கூறு கையில் இன்றைய பொரு ளாதார சந்தை மிகப் பெரியது. புதிய வங்கி உருவாவதினால், அது எந்தவொரு வங்கியை யும் பாதிக்காது. இப் புதிய வங்கி தொடங்குவ தற்கு போதுமான இடை வெளி இருப்பதாகவும் தெரிவித்தார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Banner

அண்மைச் செயல்பாடுகள்