முன்பு அடுத்து Page:

உரத் தொழிற்சாலையில் வெடிவிபத்து: உயிரிழப்பு 44 ஆக உயர்வு

பீஜிங், மார்ச் 23- கிழக்கு சீனா வில் உள்ள ஜியாங்சு மாகா ணத்துக்குட்பட்ட யான்செங் நகரில் மிகப்பெரிய தொழிற் பேட்டை ஒன்று அமைந்துள் ளது. இங்கு பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ரசாயன உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று பிற் பகல் வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. தொழிற்சாலை யில் இருந்து வேகமாக பரவிய தீயால் அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளும் பலத்த சேதமடைந்தன. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும்....... மேலும்

23 மார்ச் 2019 15:49:03

புயலால் பேரழிவை சந்தித்துள்ள மொசாம்பிக் 1000 பேர் உயிரிழந்த நிலையில் 6 லட்சம் பேர் பாதிப்பு

புயலால் பேரழிவை சந்தித்துள்ள மொசாம்பிக்  1000 பேர் உயிரிழந்த நிலையில் 6 லட்சம் பேர் பாதிப்பு

பெய்ரா, மார்ச் 23- புயலால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில் 1000 பேர் உயிரிழந்த நிலையில், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் கின் துறைமுக நகரான பெய்ராவை இடாய் என்ற புயல் கடந்த வியாழக் கிழமை மணிக்கு 177 கி.மீ வேகத்தில் தாக்கியது. இதனால் ஏராளமான வீடு களின் மேற்கூரைகளும், சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்து கிடக்கின்றன. மரங்க ளும், மின்கம்பங்கள் அனைத்தும் விழுந் துள்ளன........ மேலும்

23 மார்ச் 2019 15:47:03

ஈராக்கில் படகு கவிழ்ந்து 40 பேர் பலி

பாக்தாத், மார்ச் 23- ஈராக் நாட்டில் உள்ள குர்திஷ் இன மக்கள் தங்கள் புத்தாண்டை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடி னர். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட 40-க்கும் மேற் பட்டோர் ஒரு படகில் மொசூல் நகர் அருகே உள்ள டைகரிஸ் ஆற்றை கடந்து சென்றனர். அப்போது அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 40 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதில்....... மேலும்

23 மார்ச் 2019 15:19:03

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்றார்

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிபதியாக  இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்றார்

வாசிங்டன், மார்ச் 23- அமெரிக்காவில் மாநில நீதிமன்றங்களும் மாவட்ட நீதி மன்றங்களும் தனிதனியாக இயங்கி வருகின்றன. இவ்விரு நீதிமன்றங்களிலும் வழங்கப்படும் தீர்ப்புகள் தொடர்பாக மேல் முறையீடு செய்ய மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் தனி நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. உச்சநீதிமன்றத்துக்கு அடுத்தப்படியாக மிகுந்த அதிகாரம் கொண்ட நீதிமன்றங்களாக மேல்முறையீடு நீதிமன்றங்கள் இங்கு உள்ளன. இந்நிலையில் கொலம்பியா மாவட்ட மேல் முறையீடு, நீதின்மன்றத்தின் நீதிபதி யாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான....... மேலும்

23 மார்ச் 2019 15:16:03

உலகளவில் மகிழ்ச்சியாக உள்ள நாடுகள் பட்டியல் இந்தியா - 140ஆவது இடம்

வாசிங்டன், மார்ச் 22- மனிதனின் அடிப்படை லட்சியம் மகிழ்ச்சியே, என்கிற அடிப்படையில் அய்.நா. பொதுச் சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச் சியாக உள்ள நாடுகளின் பட்டியலினை சர்வே எடுத்து வெளியிட்டு வருகின்றது. இந்த பட்டியல் வருமானம், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கியம், சமுக ஆதரவு மற் றும் பெருந்தன்மை ஆகிய  காரணிகளை கொண்டு....... மேலும்

22 மார்ச் 2019 15:11:03

தாய்லாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் திருநங்கை

தாய்லாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் திருநங்கை

பாங்காக், மார்ச் 22- ஜுன்டா எனப்படும் ராணுவ தலையீடு கொண்ட ஆட்சி நடைபெற்று வரும் தாய்லாந்து நாட்டின் பிரதமராக பிரயுத் சான்-ஓ-சா பதவி வகித்து வருகிறார். அந் நாட்டின் ஆட்சி முறையில் ராணுவத்தின் தலையீட்டை நீக்கி, முழுமையான மக்க ளாட்சி நடக்கும் வகையில் 500 இடங்களை கொண்ட நாடாளு மன்றத்துக்கு 2015-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என முன் னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்தடுத்து வெளியான தேர்தல் அறிவிப்பு களும் தள்ளிக்கொண்டே....... மேலும்

22 மார்ச் 2019 15:07:03

‘பிரெக்சிட்’ விவகாரம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் ஓட்டெடுப்பு இல்லை - சபாநாயகர் உத்தரவு

‘பிரெக்சிட்’ விவகாரம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில்  மீண்டும் ஓட்டெடுப்பு இல்லை - சபாநாயகர் உத்தரவு

லண்டன், மார்ச் 22- அய்ரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்சிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வருகிற 29ஆம் தேதி முடிவ டைகிறது. ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்சிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறி யாகி உள்ளது. பிரெக்சிட்டுக்காக, அய் ரோப்பிய கூட்டமைப்புடன் இங்கி லாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் இதற்கு முட்டுக்கட் டையாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் தேதி இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது....... மேலும்

22 மார்ச் 2019 15:03:03

கனடா: நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி நபர்

கனடா: நாடாளுமன்ற உறுப்பினராக  இந்திய வம்சாவளி நபர்

ஒட்டாவா, மார்ச் 22- கனடா எதிர்க் கட்சியின் வெள்ளை இனத்தைச் சேராத முதல் தலைவரும், இந் திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜக்மீத் சிங், நாடாளுமன்ற உறுப்பின ராக பதவியேற்றுக் கொண்டார். பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி நடை பெற்ற நாடாளுமன்ற மக்களவைக் கான இடைத்தேர்தலில், முக்கிய எதிர்க்கட்சியான, புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் (40) வெற்றி பெற்றார். இந்நிலையில், மக் களவை உறுப்பினராக அவர் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இந்திய....... மேலும்

22 மார்ச் 2019 14:56:02

ஆப்கானிஸ்தானில் மழை, வெள்ளத்துக்கு 10 பேர் பலி

ஹேரட், மார்ச் 20- 4 மாகாணங் களை கொண்ட ஆப்கானிஸ் தான் நாட்டில் மேற்கு பகுதி யில் ஹேரட் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகா ணத்தின் தலைநகரான ஹேரட் நகரம் மற்றும் அதை சுற்றி யுள்ள பகுதிகளில் நேற்று காலையில் இருந்து தொடர்ந்து 24 மணிநேர மாக கனமழை பெய்தது. இதனால் இந்த மாகாணத் தில் சில பகுதிகள் வெள்ளக் காடாக மாறின. பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில்....... மேலும்

20 மார்ச் 2019 17:05:05

கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள் அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள்  அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

வாசிங்டன், மார்ச் 20- சூரிய சக்தியைப் பயன்படுத்தி கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரி பொருளைத் தயாரிக்கும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், காற்றில் மாசுபாட்டை ஏற்படுத்தும் கார் பைன்டை ஆக்சைடை வெளி யிடாத, தூய்மையான ஹைட்ர ஜன் எரிபொருளை பெருமள வில் தயாரிப்பதற்கான ஆய் வில் முன்னேற்றம் ஏற்பட்டுள் ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புரொசீடிங்ஸ் ஆஃப் தி நேசனல் அகாடமி ஆஃப் சயன்ஸ் அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட் டுரையில்....... மேலும்

20 மார்ச் 2019 17:03:05

ஜின்ஜியாங்கில் சீன அடக்குமுறை முஸ்லிம் நாடுகள் மவுனம் காப்பது அதிருப்தி: அமெரிக்கா தூதர் பேட்டி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெனீவா, மார்ச் 15- சீனாவில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறை குறித்து முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு மவுனம் காப்பது அதிருப் தியளிப்பதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சர்வேதச குற்றப் பிரிவின் தலைவரும், அய்.நா.வுக்கான அமெரிக்க துணைத் தூதருமான கெல்லி கர்ரி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கூறியதாவது:

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு உள்ளது.

எனினும், சர்வதேச முஸ்லிம் நாடுக ளின் கூட்டமைப்பான ஓஅய்சி இதுகுறித்து மௌனம் காப்பது அதிருப்தி அளிப்பதாக உள்ளது.

இந்த விவகாரத்தில் சீனாவுக்கு துருக்கி கண்டனம் தெரிவித்திருப்பது பாராட்டத் தக்கதாகும். எனினும், ஜின்ஜியாங் மாகா ணத்தில் உய்கர் இன முஸ்லிம்களின் மத உரிமைகள் நசுக்கப்படுவது குறித்து ஓஅய்சி அமைப்பு கண்டனம் தெரிவிக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் என்றார் அவர்.

சீனாவில் முஸ்லிம்கள் தடுப்பு முகா மில் கட்டாயமாக அடைத்து வைக்கப்படும் விவகாரம் குறித்து ஜெனீவாவிலுள்ள அய்.நா. அலுவலகத்தில் அமெரிக்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு முன்னதாக கெல்லி கர்ரி செய்தியாளர் களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

உய்கர் முஸ்லிம்கள் தொடர்பாக ஜெனீ வாவில் அமெரிக்கா கூட்டம் நடத்தியுள்ள தற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன தூதரக அதிகாரி ஒரு வர் கூறுகையில், அரசியல் உள்நோக்கத் துடன் அந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ள தாகக் குற்றம் சாட்டினார்.

ஜின்ஜியாங் மாகாணத்தில் பிரிவினை வாதத்துக்கும், மத தீவிரவாதத்துக்கும் எதிராக சீனா போராடி வருவதாகக் குறிப் பிட்ட அவர், சீனாவில் தடுப்பு முகாம்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.

ஹன் இனத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட சீனாவில், ஜின்ஜியாங் மாகாணத் தில் மட்டும் முஸ்லிம் இனத்தவர் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், அந்த மாகாணத்தைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாக சீன அரசு குற்றம் சாட்டி வருகிறது.

எனவே, மக்களை நல்வழிப்படுத்துவதற் காக அவர்களுக்கு சீர்திருத்த வகுப்புகள் நடத்துவதாகக் கூறி, லட்சக்கணக்கான முஸ்லிம்களை அந்த நாட்டு அரசு தடுப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

எந்த வித குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படாமலேயே முகாம்களில் அடைத்து வைக்கப்படும் அவர்களது இருப்பிடம் குறித்து அவர்களது குடும்பத்தினரிடம் அரசு தெரியப்படுத்துவதில்லை.

அங்கு சீர்திருத்தக் கல்வி என்ற பெய ரில், அவர்கள் இஸ்லாம் மதத்தைக் கைவி டவும், கம்யூனிஸக் கொள்கைகளை வலுக் கட்டாயமாக ஏற்கவும் செய்வதற்கான நோக் கில் பிரசார வகுப்புகள் நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

அத்தகைய முகாம்களில் 10 லட்சம் உய்கர், கஜக் மற்றும் பிற இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் அடைத்து வைக்கப் பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ அண்மையில் அறிவித்தார்.

இந்தச் சூழலில், இதுதொடர்பாக ஜெனீவாவில் அமெரிக்கா நடத்திய கூட்டத்துக்கு முன்னதாக அய்.நா.வுக்கான அந்த நாட்டு துணைத் தூதர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner