முன்பு அடுத்து Page:

உரத் தொழிற்சாலையில் வெடிவிபத்து: உயிரிழப்பு 44 ஆக உயர்வு

பீஜிங், மார்ச் 23- கிழக்கு சீனா வில் உள்ள ஜியாங்சு மாகா ணத்துக்குட்பட்ட யான்செங் நகரில் மிகப்பெரிய தொழிற் பேட்டை ஒன்று அமைந்துள் ளது. இங்கு பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ரசாயன உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று பிற் பகல் வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. தொழிற்சாலை யில் இருந்து வேகமாக பரவிய தீயால் அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளும் பலத்த சேதமடைந்தன. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும்....... மேலும்

23 மார்ச் 2019 15:49:03

புயலால் பேரழிவை சந்தித்துள்ள மொசாம்பிக் 1000 பேர் உயிரிழந்த நிலையில் 6 லட்சம் பேர் பாதிப்பு

புயலால் பேரழிவை சந்தித்துள்ள மொசாம்பிக்  1000 பேர் உயிரிழந்த நிலையில் 6 லட்சம் பேர் பாதிப்பு

பெய்ரா, மார்ச் 23- புயலால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில் 1000 பேர் உயிரிழந்த நிலையில், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் கின் துறைமுக நகரான பெய்ராவை இடாய் என்ற புயல் கடந்த வியாழக் கிழமை மணிக்கு 177 கி.மீ வேகத்தில் தாக்கியது. இதனால் ஏராளமான வீடு களின் மேற்கூரைகளும், சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்து கிடக்கின்றன. மரங்க ளும், மின்கம்பங்கள் அனைத்தும் விழுந் துள்ளன........ மேலும்

23 மார்ச் 2019 15:47:03

ஈராக்கில் படகு கவிழ்ந்து 40 பேர் பலி

பாக்தாத், மார்ச் 23- ஈராக் நாட்டில் உள்ள குர்திஷ் இன மக்கள் தங்கள் புத்தாண்டை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடி னர். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட 40-க்கும் மேற் பட்டோர் ஒரு படகில் மொசூல் நகர் அருகே உள்ள டைகரிஸ் ஆற்றை கடந்து சென்றனர். அப்போது அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 40 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதில்....... மேலும்

23 மார்ச் 2019 15:19:03

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்றார்

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிபதியாக  இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்றார்

வாசிங்டன், மார்ச் 23- அமெரிக்காவில் மாநில நீதிமன்றங்களும் மாவட்ட நீதி மன்றங்களும் தனிதனியாக இயங்கி வருகின்றன. இவ்விரு நீதிமன்றங்களிலும் வழங்கப்படும் தீர்ப்புகள் தொடர்பாக மேல் முறையீடு செய்ய மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் தனி நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. உச்சநீதிமன்றத்துக்கு அடுத்தப்படியாக மிகுந்த அதிகாரம் கொண்ட நீதிமன்றங்களாக மேல்முறையீடு நீதிமன்றங்கள் இங்கு உள்ளன. இந்நிலையில் கொலம்பியா மாவட்ட மேல் முறையீடு, நீதின்மன்றத்தின் நீதிபதி யாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான....... மேலும்

23 மார்ச் 2019 15:16:03

உலகளவில் மகிழ்ச்சியாக உள்ள நாடுகள் பட்டியல் இந்தியா - 140ஆவது இடம்

வாசிங்டன், மார்ச் 22- மனிதனின் அடிப்படை லட்சியம் மகிழ்ச்சியே, என்கிற அடிப்படையில் அய்.நா. பொதுச் சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச் சியாக உள்ள நாடுகளின் பட்டியலினை சர்வே எடுத்து வெளியிட்டு வருகின்றது. இந்த பட்டியல் வருமானம், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கியம், சமுக ஆதரவு மற் றும் பெருந்தன்மை ஆகிய  காரணிகளை கொண்டு....... மேலும்

22 மார்ச் 2019 15:11:03

தாய்லாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் திருநங்கை

தாய்லாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் திருநங்கை

பாங்காக், மார்ச் 22- ஜுன்டா எனப்படும் ராணுவ தலையீடு கொண்ட ஆட்சி நடைபெற்று வரும் தாய்லாந்து நாட்டின் பிரதமராக பிரயுத் சான்-ஓ-சா பதவி வகித்து வருகிறார். அந் நாட்டின் ஆட்சி முறையில் ராணுவத்தின் தலையீட்டை நீக்கி, முழுமையான மக்க ளாட்சி நடக்கும் வகையில் 500 இடங்களை கொண்ட நாடாளு மன்றத்துக்கு 2015-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என முன் னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்தடுத்து வெளியான தேர்தல் அறிவிப்பு களும் தள்ளிக்கொண்டே....... மேலும்

22 மார்ச் 2019 15:07:03

‘பிரெக்சிட்’ விவகாரம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் ஓட்டெடுப்பு இல்லை - சபாநாயகர் உத்தரவு

‘பிரெக்சிட்’ விவகாரம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில்  மீண்டும் ஓட்டெடுப்பு இல்லை - சபாநாயகர் உத்தரவு

லண்டன், மார்ச் 22- அய்ரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்சிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வருகிற 29ஆம் தேதி முடிவ டைகிறது. ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்சிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறி யாகி உள்ளது. பிரெக்சிட்டுக்காக, அய் ரோப்பிய கூட்டமைப்புடன் இங்கி லாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் இதற்கு முட்டுக்கட் டையாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் தேதி இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது....... மேலும்

22 மார்ச் 2019 15:03:03

கனடா: நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி நபர்

கனடா: நாடாளுமன்ற உறுப்பினராக  இந்திய வம்சாவளி நபர்

ஒட்டாவா, மார்ச் 22- கனடா எதிர்க் கட்சியின் வெள்ளை இனத்தைச் சேராத முதல் தலைவரும், இந் திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜக்மீத் சிங், நாடாளுமன்ற உறுப்பின ராக பதவியேற்றுக் கொண்டார். பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி நடை பெற்ற நாடாளுமன்ற மக்களவைக் கான இடைத்தேர்தலில், முக்கிய எதிர்க்கட்சியான, புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் (40) வெற்றி பெற்றார். இந்நிலையில், மக் களவை உறுப்பினராக அவர் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இந்திய....... மேலும்

22 மார்ச் 2019 14:56:02

ஆப்கானிஸ்தானில் மழை, வெள்ளத்துக்கு 10 பேர் பலி

ஹேரட், மார்ச் 20- 4 மாகாணங் களை கொண்ட ஆப்கானிஸ் தான் நாட்டில் மேற்கு பகுதி யில் ஹேரட் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகா ணத்தின் தலைநகரான ஹேரட் நகரம் மற்றும் அதை சுற்றி யுள்ள பகுதிகளில் நேற்று காலையில் இருந்து தொடர்ந்து 24 மணிநேர மாக கனமழை பெய்தது. இதனால் இந்த மாகாணத் தில் சில பகுதிகள் வெள்ளக் காடாக மாறின. பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில்....... மேலும்

20 மார்ச் 2019 17:05:05

கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள் அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள்  அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

வாசிங்டன், மார்ச் 20- சூரிய சக்தியைப் பயன்படுத்தி கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரி பொருளைத் தயாரிக்கும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், காற்றில் மாசுபாட்டை ஏற்படுத்தும் கார் பைன்டை ஆக்சைடை வெளி யிடாத, தூய்மையான ஹைட்ர ஜன் எரிபொருளை பெருமள வில் தயாரிப்பதற்கான ஆய் வில் முன்னேற்றம் ஏற்பட்டுள் ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புரொசீடிங்ஸ் ஆஃப் தி நேசனல் அகாடமி ஆஃப் சயன்ஸ் அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட் டுரையில்....... மேலும்

20 மார்ச் 2019 17:03:05

84 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் சிறப்புப் பணி அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், மார்ச் 13  அமெரிக்காவில், ‘எச் - 4’ விசா பெற்று, பணியாற்றி வரு வோருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அனுமதியை ரத்து செய்ய, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.

இதையடுத்து, அங்கு பணியாற்றும், 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர் களுக்கு, வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, இந்தியர்கள், வேலை, டிரம்ப், விசா

பொறியியல் அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு, அமெரிக்காவில் பணியாற்ற, ‘எச் - 1பி’ என்ற விசா வழங்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த வர்கள், பெரும்பாலும் இந்த விசா பெற்று, பணியாற்றி வருகின்றனர்.இந்த விசா பெற்றவர்கள், தங்கள் மனைவி அல்லது கணவனை, தங்களுடன் அமெ ரிக்கா அழைத்துச் செல்ல, எச் - 4 என்ற விசா வழங்கப்படுகிறது.இந்த விசா பெற்றவர்கள், தங்கள் கணவர் அல்லது மனைவியுடன், அமெரிக்காவில் வசிக்கலாம். ஆனால், அங்கு வேலை பார்க்கவோ, சொந்த தொழில் செய்யவோ முடியாது.

பரிந்துரை

இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்தபோது, 2015இல், இந்த, எச் - 4 விசா நடைமுறையில் சில சலுகைகளை அறிவித்தார். அதில், ‘எச் - 4 விசா வைத்திருப்பவர்கள், இ.ஏ.டி., எனப்படும், சிறப்பு பணி அனுமதி ஆவணம் என்ற திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் பணியாற்ற அனுமதி வழங்கப்படும்‘ என, அறிவித்தார்.

இதன் வாயிலாக, எச் - 4 விசாவில் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் பலர், வேலைவாய்ப்பு பெற்றனர்.இந்நிலையில், இந்த, எச் - 4 விசாவில் உள்ள சிறப்பு பணி அனுமதி ஆவண திட்டத்தை ரத்து செய்ய, அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.

இந்த முடிவு, ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘சிறப்புப் பணி அனுமதி நடைமுறையை ரத்து செய்ய வேண்டாம்‘ என, அமெரிக்க அதிபரிடம் கோரிக்கை வைக்க, எச் - 4 விசா வைத்துள்ளோர் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

அமெரிக்காவில் வாழும், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை ஒன்றி ணைக்கும் விதமாக, ‘அய்.டி., ப்ரோ அலையன்ஸ்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.இந்த அமைப் பின் உதவியுடன், ‘எச் - 4 விசா வைத்துள்ளவர்களுக்குவழங்கப்பட்டு வந்த சிறப்பு பணி அனுமதியை ரத்து செய்ய வேண்டாம்‘ என, வலியுறுத்தி,

வெள்ளை மாளிகையின் அதிகார பூர்வ இணையதளத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கையெழுத்து

இந்த மனுவுக்கு ஆதரவு தெரிவிப்போர், இந்த இணையதளத்தில் பதி வாகியுள்ள மனுவில் கையெழுத்திட வேண்டும். இந்த மனு தாக்கல் செய்யப் பட்ட ஒரு மாத காலத்திற்குள், இதற்கு ஒரு லட்சம் பேர் ஆதரவு தெரிவித்தால், இதை அதிபர் மாளிகை மறுபரிசீலனை செய்யும் என்பது அந்நாட்டு நடைமுறை. அமெரிக்காவில், எச் - 4 விசாவில் சிறப்பு அனுமதி பெற்று பணியில் இருப் பவர்களில், இந்தியர்களே அதிகம்.

எனவே, அதிபர் டிரம்பின் பரிந் துரை நடைமுறைக்கு வந்தால், 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner