முன்பு அடுத்து Page:

பிரெக்சிட் விவகாரம்: பிரதமர் பதவி விலக மீண்டும் வலியுறுத்தல்

பிரெக்சிட் விவகாரம்: பிரதமர் பதவி விலக மீண்டும் வலியுறுத்தல்

லண்டன், ஏப். 24- பிரிட்டனில் 11 நாள் விழா விடுமுறைக்குப் பிறகு கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தில், பிரெக்சிட் விவ காரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே பதவி விலக வேண் டும் என்று மீண்டும் வலியுறுத் தப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்க ளிடம் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி. நைஜல் இவான்ஸ் கூறியதாவது: பிரதமர் தெரசா மே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுவடைந்து வருகி றது. எனவே, அவர் உடனடி....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:30:03

பதவி நீக்கம் செய்யக் கோரும் ஜனநாயகக் கட்சிக் கோரிக்கை: டிரம்ப் எதிர்ப்பு

பதவி நீக்கம் செய்யக் கோரும்  ஜனநாயகக் கட்சிக் கோரிக்கை: டிரம்ப் எதிர்ப்பு

வாசிங்டன், ஏப். 24- அமெரிக்கா வில் கடந்த 2016ஆ-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது, குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கிய டொனால்டு டிரம்ப்பை வெற்றி பெறவைப் பதற்காக ரசியா உதவியதாக புகார் எழுந்தது. இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் இது குறித்து விசா ரணை நடத்தப்பட வேண்டும் என ஜனநாயக கட்சியினர் அழுத்தம் கொடுத்தனர். அதன்பேரில், அமெரிக்கா வின் மத்திய புலனாய்வு குழுவின் முன்னாள் இயக்குநர் ராபர்ட்....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:29:03

ஸ்பெயின் தேர்தல்: காடலோனியாவை மய்யப்படுத்தி விவாதம்

ஸ்பெயின் தேர்தல்: காடலோனியாவை மய்யப்படுத்தி விவாதம்

மேட்ரிட், ஏப். 24- ஸ்பெயின் பொதுத் தேர்தலையொட்டி நடைபெற்ற முக்கிய கட்சித் தலைவர்களின் நேரடி விவாதத் தில், காடலோனியா விவகா ரத்தை மய்யப்படுத்தி காரசார மான கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஸ்பெயினில் வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற விருக்கிறது. அதனையொட்டி, தேர்தலில் போட்டியிடும் 4 முக்கிய கட்சிகளின் தலைவர் கள் பங்கேற்ற நேரடி விவாத நிகழ்ச்சி, அரசுத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது. அந்த விவாதத்தில், தற் போதைய பிரதமரும்,....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:15:03

உள்ளாட்சித் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் முதல்முறையாக வெற்றி

உள்ளாட்சித் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் முதல்முறையாக வெற்றி

டோக்கியோ, ஏப். 24- ஜப்பானில்  நடைபெற்ற உள்ளாட்சித் தேர் தலில் எடோகாவா வார்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புராணிக் யோகேந்திரா வெற்றி பெற்றார். ஜப்பானில் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் இவர்தான். ஜப்பானில் செயல்பட்டு வரும் "ஆசாகி சிம்பன்' செய்தி வலைதளத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதா வது: ஜப்பானில் கடந்த 21ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தம், 2,26,561 வாக்குகள் பதிவானது. எடோகாவா வார்டு தேர்தலில் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த  புராணிக்....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:15:03

உகான்டாவில் மழை, வெள்ளத்துக்கு 18 பேர் பலி

உகான்டாவில்  மழை, வெள்ளத்துக்கு 18 பேர் பலி

கம்பாலா, ஏப். 24- உகான்டா நாட்டின் கிழக்கில் உள்ள புயென்டே மற்றும் கமுலி மாநிலங்களில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாது பெய்த பெருமழையினால் கியோலா ஏரியை ஒட்டி தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளப் பெருக்கினால் பல வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், மழை மற்றும் வெள்ளம் சார்ந்த விபத்து களில் புயென்டே மாநிலத்தில் 13 பேரும் கமுலி மாநிலத்தில்....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:11:03

வெனிசுலா: எதிர்க்கட்சியினருக்கு எதிராக அரசு ஆதரவாளர்கள் போட்டி பேரணி

கராகஸ், ஏப். 24- வெனிசுலாவில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ள மே மாதம் 1-ஆம் தேதி, அரசை ஆதரிக்கும் வகையில் மாபெரும் பேரணி நடத்தும்படி ஆதரவாளர்க ளுக்கு மடூரோ தலைமையி லான அரசு அழைப்பு விடுத்து உள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: வெனிசுலா அதிபர் நிக் கோலஸ் மடூரோவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றால், அதனை முறியடிக்கும் வகையில் அவருக்கு ஆதரவான வர்களின் போட்டி ஆர்ப்பாட் டங்களை நடத்த திட்டமிட்....... மேலும்

24 ஏப்ரல் 2019 15:10:03

மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா

மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும்  சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா

நாதியா, ஏப்.23 மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையில் தேர்தல் ஆணையத் தின் சிறப்பு பார்வையாளர்களின் செயல்பாடு உள்ளது என அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார். நாதியா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் தேர்தலை காரணம் காட்டி, இரண்டு ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்து, மேற்கு வங்க அரசுக்கு எதிராக இயக்கி வருகின்றனர். இந்த அதிகாரிகள், மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையிலும்,....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:20:04

தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி இலங்கையில் அவசரநிலை அமல் பலி 290-ஆக அதிகரிப்பு; இதுவரை 24 பேர் கைத…

கொழும்பு, ஏப்.23 தொடர் குண்டு வெடிப்புகள் எதிரொலியாக, இலங்கையில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. பயங்கரவாதத்தை வலுவுடன் எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்புப் படையினருக்கு பெருமள விலான அதிகாரங்களை அளிக்க இந்த அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார். இலங்கையில் கிறித்துவ சர்ச்சுகள், நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத் தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட் டன. இவற்றில் பலியானோர் எண்ணிக்கை திங்கள்கிழமை....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:36:03

பல கோடி ஆண்டுகளுக்கு முன் நிலப்பகுதிகளில் வாழ்ந்த நான்கு கால் திமிங்கலம்

துபாய், ஏப்.23  பல கோடி ஆண்டுகளுக்கு முன், நீரில் மட்டு மின்றி 4 கால்களோடு நிலத்திலும் திமிங்கலம் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அய்ந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தைய திமிங்கிலத்தின் படிவங்கள் வட இந்தியாவில் இமய மலையில் பகுதிகளிலும், இன்றைய பாகிஸ்தானிலும் காணப்படுகின்றன. இந்த படிமங்கள் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதில், அந்த காலக்கட்டத்தில் தற்போது ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்கள் நான்கு கால்களுடன் நிலத்திலும் வாழ்த்து இருக்கலாம் என்று....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:21:03

பூமியின் அளவில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

துபாய்,  ஏப்.23   அமெரிக்கா வின் விண்வெளி ஆய்வு மய்யமான நாசா, புதிய கிரகங்களை கண்டறிந்து ஆய்வு மேற்கொள் வதற்காக கடந்தாண்டு டெஸ் என்ற செயற்கைக்கோளை விண் ணுக்கு அனுப்பியது. இந்த செயற் கைக் கோள் மற்றொரு கிரகத்தை கண்டு பிடித்து ஆராய்ச்சியாளர் களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி யுள்ளது. எச்டி 21749 சி என்று அழைக்கப்படும் இந்த கிரகம் பூமியை போல், அதே அளவில் இருப்பது பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. ....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:19:03

இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்துக்கு இரு திட்டங்கள்: அமெரிக்க அரசு அறிவிப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், பிப். 11- பெண்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதன் மூலம், அவர்களது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்வதற்கான இரண்டு திட்டங்களை இந்தியாவில் செயல் படுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் உள்ள 5 கோடி பெண்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி, அவர்களை பொருளாதார ரீதி யில் முன்னேற்றமடையச் செய்வதற்கான புதிய திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு செயல்படுத்தவிருக்கிறது.

அதிபர் டிரம்ப்பின் மகளும், அவரு டைய மூத்த ஆலோசகருமான இவாங்கா டிரம்ப்பின் தலைமையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக செயல்படுத்தப்படவி ருக்கும் இந்தத் திட்டத்துக்கு உலக பெண்கள் முன்னேற்றம் மற்றும் பொரு ளாதார வளர்ச்சி (டபிள்யூ-ஜிடிபி) என்று பெயரிடப்பட்டுள்ளது.

அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கான ஒரு திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த விருக்கிறது.

தனியார் குளிர்பான நிறுவனத்துடன் இணைந்து, அமெரிக்க சர்வதேச மேம் பாட்டு அமைப்பு இந்தத் திட்டத்தை செயல்படுத்தும். இந்தத் திட்டத்தின்படி, பெண்களுக்கு வேளாண் பொருள்களுக் கான விநியோக வசதிகளை வழங்கு வதன் மூலம் அவர்களது பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யப் படும்.

மேலும், பெண் தொழில் முனை வோருக்கு  இந்தியாவின் இண்டஸ் இண்ட் சிறுதொழில் கடன் வங்கியின் மூலம் கடன் வழங்கப்படும். இதற்காக அமெரிக்காவின் வெளிநாட்டு தனியார் முதலீட்டு அமைப்பின் (ஓபிஅய்சி) மூலம் 10 கோடி டாலர் (சுமார் ரூ.712 கோடி) அந்த வங்கியில் முதலீடு செய் யும்.

இந்தியாவில் செயல்படுத்தப்பட வுள்ள மற்றோர் திட்டத்தில், இந்திய பெண் தொழில்முனைவோர் தங்களது தயாரிப்புகளை ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அவர்களது திறன் மேம்படுத்தப்படும் என்று அதி பர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டபிள்யூ-ஜிடிபி திட் டத்தின் கீழ் 5 கோடி பெண்களின் வாழ் க்கைத் தரத்தை உயர்த்த திட்டமிடப்பட் டிருந்தாலும், அதைவிட அதிகம் பேர் இந்தத் திட்டத்தால் பலனடையக் கூடும் என்று அதிபர் டிரம்ப்  நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner