முன்பு அடுத்து Page:

மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா

மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும்  சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா

நாதியா, ஏப்.23 மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையில் தேர்தல் ஆணையத் தின் சிறப்பு பார்வையாளர்களின் செயல்பாடு உள்ளது என அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார். நாதியா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் தேர்தலை காரணம் காட்டி, இரண்டு ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்து, மேற்கு வங்க அரசுக்கு எதிராக இயக்கி வருகின்றனர். இந்த அதிகாரிகள், மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையிலும்,....... மேலும்

23 ஏப்ரல் 2019 16:20:04

தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி இலங்கையில் அவசரநிலை அமல் பலி 290-ஆக அதிகரிப்பு; இதுவரை 24 பேர் கைத…

கொழும்பு, ஏப்.23 தொடர் குண்டு வெடிப்புகள் எதிரொலியாக, இலங்கையில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. பயங்கரவாதத்தை வலுவுடன் எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்புப் படையினருக்கு பெருமள விலான அதிகாரங்களை அளிக்க இந்த அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார். இலங்கையில் கிறித்துவ சர்ச்சுகள், நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத் தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட் டன. இவற்றில் பலியானோர் எண்ணிக்கை திங்கள்கிழமை....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:36:03

பல கோடி ஆண்டுகளுக்கு முன் நிலப்பகுதிகளில் வாழ்ந்த நான்கு கால் திமிங்கலம்

துபாய், ஏப்.23  பல கோடி ஆண்டுகளுக்கு முன், நீரில் மட்டு மின்றி 4 கால்களோடு நிலத்திலும் திமிங்கலம் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அய்ந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தைய திமிங்கிலத்தின் படிவங்கள் வட இந்தியாவில் இமய மலையில் பகுதிகளிலும், இன்றைய பாகிஸ்தானிலும் காணப்படுகின்றன. இந்த படிமங்கள் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதில், அந்த காலக்கட்டத்தில் தற்போது ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்கள் நான்கு கால்களுடன் நிலத்திலும் வாழ்த்து இருக்கலாம் என்று....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:21:03

பூமியின் அளவில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

துபாய்,  ஏப்.23   அமெரிக்கா வின் விண்வெளி ஆய்வு மய்யமான நாசா, புதிய கிரகங்களை கண்டறிந்து ஆய்வு மேற்கொள் வதற்காக கடந்தாண்டு டெஸ் என்ற செயற்கைக்கோளை விண் ணுக்கு அனுப்பியது. இந்த செயற் கைக் கோள் மற்றொரு கிரகத்தை கண்டு பிடித்து ஆராய்ச்சியாளர் களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி யுள்ளது. எச்டி 21749 சி என்று அழைக்கப்படும் இந்த கிரகம் பூமியை போல், அதே அளவில் இருப்பது பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. ....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:19:03

ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆதாரங்களை காட்சிக்கு வைத்தது பாகிஸ்தான்

ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆதாரங்களை  காட்சிக்கு வைத்தது பாகிஸ்தான்

லாகூர், ஏப்.23 ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆவணங்களை பாகிஸ்தான் முதல் முறையாக, காட்சிக்கு வைத்துள்ளது. இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில், ஜாலியன் வாலாபாக் படுகொலையை யாராலும் மறக்க முடியாது. 1919ஆம் ஆண்டு ரவுலட் சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. இதன்படி, யாரையும் விசாரணையின்றி கைது செய்யலாம். இந்த சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் கூட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:17:03

அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிக்க எகிப்தில் பொதுவாக்கெடுப்பு

கெய்ரோ, ஏப்.23  எகிப்தில் அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்த பொதுவாக்கெடுப்பு 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பொதுவாக்கெடுப்பு வெற்றி பெற் றால், தற்போதைய அதிபர் அப்தெல் அல்-சிசி, அந்தப் பதவியில் வரும் 2030-ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: எகிப்தின் தற்போதைய அரசியல் சாசனத் தின்படி, ஒருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட அதிபரின் பதவிக் காலம் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கும். மேலும், ஒருவர் இரண்டு....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:08:03

ஆப்கன்: அதிபர் பதவிக் காலம் செப்டம்பர் வரை நீட்டிப்பு

ஆப்கன்: அதிபர் பதவிக் காலம்  செப்டம்பர் வரை நீட்டிப்பு

ஆப்கன், ஏப்.23 ஆப்கானிஸ்தான் தேர்தல் வரும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அதிபர் அஷ்ரஃப் கனியின் பதவிக் காலத்தை நீட்டித்து அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தல் நடைபெற்று, அடுத்த அதிபர் பொறுப்பேற்கும் வரை நாட்டின் அதிபராக அஷ்ரஃப் கனி நீடிக்கும் வகையில்....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:04:03

காவல்துறை எச்சரிக்கை புறக்கணிப்பு

காவல்துறை எச்சரிக்கை புறக்கணிப்பு

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு: இந்தியர்கள் 4 பேர் பலி - ஊரடங்கு உத்தரவு அமல் இலங்கை, ஏப்.22 இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் ஞாயிற்றுக் கிழமை அடுத்தடுத்து நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்புகளில் 290 பேர் பலியாகி னர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, நாடெங்கிலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தாக்கு தல் தொடர்பாக இதுவரை....... மேலும்

22 ஏப்ரல் 2019 17:03:05

ஏப்.22 உலக பூமி நாள்

பிரபஞ்சத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரே வீடு பூமி. நம்மை சுமக்கும் பூமியை, பாதுகாப்பது நமது கடமை. இதனை சேதப்படுத் தினால், வருங்கால சந்ததி வாழ வழியிருக்காது.  பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏப்., 22ஆம் தேதி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. நமது உயிரினங்களை பாதுகாப்போம் என்பது இந்தாண்டு மய்யக்கருத்து. கடந்த 1970, ஏப்., 22ஆம் தேதி, 150 ஆண்டுகால தொழிற்சாலையின் கழிவுகளால், பாதிக்கப்பட்ட பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி,....... மேலும்

22 ஏப்ரல் 2019 16:05:04

பக்ரைன், குவைத்தில் பொங்கல் விழா வீர விளையாட்டு விழா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பக்ரைன், ஜன. 22- பக்ரைனில் தமிழ் உணர்வாளர்கள் சங்கமும், இந்திய கிளப்பும் இணைந்தும் நடத்திய பொங் கல் பண்டிகை உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழர் களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அரபு நாடுகளில் பொங்கல் பண் டிகை முன் எப்போதும் இல்லாத வகை யில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டா டப்பட்டது. குறிப்பாக, பக்ரைனில் பல பகுதிகளில் தமிழர்கள் ஒன்று திரண்டு கொண்டாடினர்.

பக்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் இந்தியன் கிளப் இணைத்து உழவர் திருவிழா 2019 என்ற பெயரில் பொங்கல் விழாவை மிக விமர்சையாக கொண்டாடினர். நிகழ் விற்கு பக்ரைன் வேலைமற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தில் கீழ் செயல்படும் விவசாயம் மற்றும் கடல் வளத்துறை தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தது.

உலக வரலாற்றிலேயே முதன் முறை யாக ஒரு அந்நிய நாட்டின்அமைச்சகம் பொங்கல் விழாவிற்கு ஆதரவுதெரிவித் திருந்தது இதுவே முதன் முறையாகும். பிரம்மாண்ட அலங்காரங்களுடன் 16 மீட்டர் நீள பதாகைகளில் பொங்கலின் சிறப்பம்சங்கள் அடங்கிய விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் பக்ரைன் தமிழ் உணர்வாளர்கள் குடில் என்ற பெயரில் விவசாய நிலம், குடிசை, பசு மாடு, ஜல்லிக்கட்டு மாடு போன்ற மாதிரிகள் செய்யப்பட்டிருந்தன. வண்டி, மரங்கள் தமிழரின் உடல்பயிற்சி கருவி யான கரலக்கட்டை, பெண்கள் புத்திக் கூர்மையை மேம்படுத்த விளையாடும் பல்லாங்குழி ஆகியவற்றின் முக்கியத் துவத்தை விளக்கும் விதத்தில் மாதிரிகள் செய்து வைக்கப் பட்டிருந்தன.

நிகழ்ச்சி முழுவதையும் பக்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் வளர்ச்சித் துறை செயலாளர் பஞ்சு ராஜ்குமார் மற்றும் மூத்த உறுப்பினர் பட்டிமன்றம் புகழ் பவானிபிரேமானந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினர். கோலப்போட்டியுடன் தொடங்கி பின்பு விறகடுப்பில் 11 மண் பானையில் பொங்கல் வைக்கப்பட்டிருந்தது. பக் ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் பொறுப்பாளராக செயல்பட்டு பொங் கல் பொங்கியதும் பெண்கள் ஒன்றுகூடி குலவை சத்தமிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் ஆதிப்பறை இசை குழுவினரின் பறையிசையுடன் கலை நிகழ்சிகள் தொடங்கின. கிராமிய கலைகளுடன் உற்சாகம் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கிராமிய ஆடல் பாடல் உட்பட பக்ரைன் தமிழர் வரலாற்றில் முதன் முறையாக மாடு ஆட்டம், பொய் கால் குதிரை ஆட்டம் நடைபெற்றது. அவற்றில் பங்கெடுத்த கலைஞர்கள் அனைவரும் பக்ரைனில் வசிப்பவர்கள் என்பது கூடுதல் சிறப்பு. அனைவரையும் விழா பொறுப்பாளர் முகமது அபுசாலி வரவேற்றார்.

பக்ரைன் விவசாயம் மற்றும் கடல் வளத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் பொறியாளர் கூசைன் ஜவாத் அல்லைத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துடன் பக்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திகேயன் தொகுத்த இந்திய சுதந்திர போரில் தமிழரின் பங்கு என்ற நூலின் முதல் பாகத்தை வெளியிட்டார்.

பக்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் சமூகநலத்துறை சார்பாக தொடங்கப்பட்ட 24 மணி நேர மருத்துவ குழுவை எசிஇ ஹெல்த்கார் நிறுவன தலைமை செயல் அதிகார மருத்துவர் ஜகதீஷ் கரிமுட் தொடங்கி வைத்தார். 2019க்கான தமிழ் காலண் டரை கிரௌன் எலெக்ட்ரோ மெக்கா னிக்கல் நிறுவனத்தின் நிறுவனர் எஸ். இணையதுல்லா வெளியிட்டார். உறியடித்தல், கயிறு இழுத்தல், ரொட்டி கவ்வுதல், கனியும் கரண்டியும், உருளை கிழங்கு சேகரித்தல், கயிறு தாண்டுதல், சாக்கு ஓட்டம் போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

குவைத்

தமிழர்களின் தாயகமான தமிழ் நாட்டில் வெகு விமரிசையாக கொண்டா டப்படும் பொங்கல் பண்டிகை, மலே சியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மலே சியா, இலங்கை உள்ளிட்ட சில நாடு களில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள்.

குவைத் நாட்டில் நண்பர்கள் சிலர் ஒன்றாக wafra என்ற இடத்தில் பண்ணை வீடு (farm house) ஒன்றில் மிக சிறப்பாக பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து, குலவையிட்டு, ஆண்கள், பெண்கள் சேர்ந்து கும்மி ஆட்டம் ஆடியும் சர்க்கரை பொங்கலும், வெண் பொங்கலும், கதிரவனுக்கு படைத்து, தலை வாழை இலையில் உணவருந்தி, புகைப்படங்கள் பல எடுத்து, உள்ளம் மகிழ்ந்து கொண்டாடி வந்திருக்கிறார்கள்.

கயிறு இழுத்தல், பெண்களுக்கான லெமன் ஸ்பூன், பாட்டு போட்டி, பாட் டுக்கு பாட்டு, நடன போட்டி, நடிப்பு போட்டி போன்ற போட்டிகள் பல நடத்தி அசத்தினர். மனைவி, குழந்தை களை பிரிந்து வேலை வேலை என்று விடுமுறை இல்லாமலும் நாள் முழுதும் வேலை செய்து கொண்டு வாடும் எங்க ளுக்கு இந்த ஒரு நாள் அந்த கவலை மறந்து தாயகத்தில் இருப்பது போன்று உணர்ந்தோம்.

இந்த கொண்டாட்டத்தில் முக்கிய மான விஷயம் என்ன தெரியுமா.. அந்த வேட்டி சட்டைதான். ஆண்கள் மட்டு மல்லாமல் ஆண் குழந்தைகளும் கூட வேட்டி சட்டையில் வந்திருந்து தமி ழன்டா எந்நாளும் என்று உரத்த குரலில் காட்டிச் சென்றதுதான் இந்த கொண் டாட்டத்தின் உச்சம்.

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner