முன்பு அடுத்து Page:

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல்: ஆளும்கட்சி-எதிர்க்கட்சி அறிக்கைகள் வெளியீடு

டாக்கா, டிச. 19- வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆளும் அவாமி லீக் கட்சி சார்பிலும், எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சி சார்பிலும் தேர்தல் அறிக்கைகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. வங்கதேசத்தில் டிசம்பர் 30-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் சேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சிக்கும், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டுள்ள கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சிக் கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது........ மேலும்

19 டிசம்பர் 2018 15:42:03

சீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது - அதிபர் ஜின்பிங்

சீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது - அதிபர் ஜின்பிங்

பீஜிங், டிச. 19- உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்பினர் இடையே வர்த்தகப்போர் மூண்டது. இந்த நிலையில் சமீபத்தில் அர் ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் அமெ ரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள். அதில் இரு தரப்பு வர்த்தகப்போரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உடன்....... மேலும்

19 டிசம்பர் 2018 15:40:03

நேபாள முன்னாள் பிரதமர் துல்சி கிரி மரணம்

நேபாள முன்னாள் பிரதமர்  துல்சி கிரி மரணம்

காத்மாண்டு, டிச. 19- இந்தியாவின் அண்டைநாடான நேபாளம் நாட்டின் பிரதமராக கடந்த 1964--1965 மற்றும் 1975--77 ஆண்டுகளுக்கு இடையில் இருமுறை பதவி வகித்தவர் துல்சி கிரி. சிராஹா மாவட்டத்தில் 1926ஆ-ம் ஆண்டில் பிறந்த கிரி, நேபாளி காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பணியை தொடங்கினார். பஞ்சாயத்து சட்டத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், நேபாளத்தின் மன்னராக பிரேந்திரா ஆட்சி செய்த காலக்கட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இலங்கையில் அரசியல் தஞ்சம் அடைந்து,....... மேலும்

19 டிசம்பர் 2018 15:24:03

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர் விடுதலை

பாகிஸ்தான் சிறையில்  அடைக்கப்பட்ட இந்தியர் விடுதலை

இஸ்லாமாபாத், டிச. 18- மும்பை நகரை சேர்ந்தவர் ஹமித் நிஹால் அன்சாரி(33). சமூக வலைத் தளம் மூலமாக பாகிஸ்தான் நாட்டு பெண்ணை காதலித்து வந்த அன்சாரி ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்த குற்றத்துக்காக கடந்த 2012-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். உரிய ஆவணங்கள் ஏது மின்றி இந்தியாவுக்காக உளவு பார்ப்பதற்காக தங்கள் நாட்டுக் குள் நுழைந்ததாக அன்சாரி மீது பெசாவர் நகரில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போலி....... மேலும்

18 டிசம்பர் 2018 16:06:04

ஜனநாயகத்தை காப்பாற்றவே ரணிலுக்கு மீண்டும் பதவி இலங்கை அதிபர் சிறிசேனா விளக்கம்

ஜனநாயகத்தை காப்பாற்றவே ரணிலுக்கு மீண்டும் பதவி  இலங்கை அதிபர் சிறிசேனா விளக்கம்

கொழும்பு, டிச. 18- இலங்கையில் பிரதம ராக இருந்த அய்க்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரம சிங்கேவை அதிபர் சிறிசேனா நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதை சமாளிக்க நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக....... மேலும்

18 டிசம்பர் 2018 16:06:04

புதிய பொருளாதாரத் தடையால் அணு ஆயுதப் பேச்சுவார்த்தை முறியும்

அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை பெங்வாங், டிச. 18- தங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளால், அணு ஆயுதங்க ளைக் கைவிடுவதற்காக அந்த நாட்டுடன் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தை நிரந்த ரமாக முறிந்துவிடும் என்று வட கொரியா எச்சரித்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உனின் வலதுகரமாக அறியப்படும் சோ ரியோங்-ஹே உள்ளிட்ட 3 உயரதிகாரி கள் மீது அமெரிக்கா அண் மையில் பொருளாதாரத் தடை களை விதித்தது. அவர்கள் மனித உரிமை....... மேலும்

18 டிசம்பர் 2018 16:06:04

டிச.18 முதல் அமலுக்கு வருகிறது ஏமன் ஒப்பந்தம்

டிச.18 முதல் அமலுக்கு  வருகிறது ஏமன் ஒப்பந்தம்

ஏமன், டிச. 18- ஏமனின் ஹோடைடா நகரில் அந்த நாட்டு அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள் ளப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (டி. 18) அமலுக்கு வரும் என்று அய்.நா. தெரிவித்துள்ளது. ஏமனின் முக்கியத்துவம் வாய்ந்த ஹோடைடா நகரம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை மீட்பதற்காக அந்த நகரை அரசுப் படையினர் சுற்றி வளைத் துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை வான்வழித் தாக்குதல் நடத்தி....... மேலும்

18 டிசம்பர் 2018 16:06:04

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஏமனில் மோதல்

ஏமன், டிச. 17- அய்.நா.வின் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையிலும், ஏமனின் துறைமுக நகரான கோடைடா வில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நீடித்தது. இதுகுறித்து அரசு ஆதரவுப் படை ராணுவத் தகவல்கள் தெரிவிப்பதாவது: கோடைடா மாகாணத்தில் சனிக்கிழமை இரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 22 கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட 29 வீரர்கள் உயிரி ழந்தனர். இந்த தாக்குதலின்போது, கோடைடா நகரத்துக்கு தெற்கே 20 கி.மீ. தொலைவில் உள்ள  அல்-துரேகிமி....... மேலும்

17 டிசம்பர் 2018 15:41:03

துபையில் மென்பொருள் நிறுவனம் தொடங்கிய 13 வயது இந்தியச் சிறுவன்

துபையில் மென்பொருள் நிறுவனம்  தொடங்கிய 13 வயது இந்தியச் சிறுவன்

துபை, டிச. 17- துபையில் 13 வயது இந்தியச் சிறுவன் மென் பொருள் நிறுவனம் தொடங் கியுள்ளது வியப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்தச் சிறுவன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, செல்லி டப்பேசி செயலியை வடிவ மைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது. கேரளத்தைச் சேர்ந்த ஆதித் யன் ராஜேஷ் என்ற அந்தச் சிறு வன், 9 வயதிலேயே நிறுவனங் களுக்கு இணையதள பக்கத்தை வடிவமைப்பது, நிறுவனச் சின்னங்களை கணினியில் வடிவமைப்பது போன்ற பணி....... மேலும்

17 டிசம்பர் 2018 15:41:03

ஜப்பான் விடுதியில் வெடிவிபத்து 42 பேர் படுகாயம்

ஜப்பான் விடுதியில் வெடிவிபத்து  42 பேர் படுகாயம்

சப்போரோ, டிச. 17- ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று இரவு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு அருகில் இருந்த ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெடிப்பைத் தொடர்ந்து எரிவாயு கசிந்த வாசனையும் உணரப்பட்டதாக காயமடைந்தவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்த தகவலறிந்து, 20க்கும் மேற்பட்ட தீய ணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப் புப் படையினர்....... மேலும்

17 டிசம்பர் 2018 15:41:03

ஈரானில் பலத்த மழை, வெள்ளம் - 7 பேர் பலி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டெக்ரான், அக். 9- ஈரான் நாட்டில் கடந்த 5-ஆம் தேதியில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. மஜந்தரன், கிலான், கோலஸ்டான் மாகாணங்களில் இந்த மழை, வெள்ளத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

சாலைகள், பாலங்கள், வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. வெள்ளத்தில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல் லப்பட்டன. மின்வினியோகம் தடைபட்டுள்ளது. எரிவாயு வினியோகம் பாதித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது. இந்த மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுவதற்கு குழுக்களை ஈரான் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு அனுப்பி வைத்து உள்ளது.

பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுக்கும் மசோதா

ஈரான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

டெக்ரான், அக். 9- சர்வதேச அளவில் பணமோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதை கண்காணித்துவரும் சர்வதேச நிதி நடவடிக்கை செயற்குழு அய்க்கிய நாடுகளின் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுக்கும் கூட்டமைப்பில் ஈரானும் இணைய வலியுறுத்தியது.

இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 143 வாக்குகள் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுப்பதற்காக அளிக்கப் பட்டன. இதையடுத்து, ஈரானுக்கு 3 மாதங்கள் கால அவகா சம் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து வாக்கெடுப் பின்போது பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத் ஷரிப், அய்.நா. பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதை தடுக்கும் கூட்டமைப்பில் ஈரான் இணைந்து விட்டால் மட்டும் எல்லாம் சரியாகி விடாது, இருப்பினும்,  தற்போது தாங்கள் இணையாவிட்டால் எங்கள் மீது பழி சொல்ல அமெரிக்காவுக்கு அதிக சாக்கு கிடைத்துவிடும் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ஈரான் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதை தடுக்கும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner