முன்பு அடுத்து Page:

உலக வங்கித் தலைவர் பதவி: இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை?

வாசிங்டன், ஜன.17  உலக வங்கி தலைவர் பதவிக்கு பெப்ஸி கோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) இந்திரா நூயி(63) பெயரை பரிந்துரைக்க அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. உலக வங்கி தலைவராக உள்ள ஜிம் யாங் கிம், வரும் பிப்ரவரி மாதம் தனது பதவியில் இருந்து விலக இருப்பதாக அண் மையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து தலைவரைத் தேர்ந் தெடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்குமாறு, உலக வங்கியில்....... மேலும்

17 ஜனவரி 2019 15:20:03

பிரெக்சிட் மசோதா விவகாரம் தெரசா மேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

பிரெக்சிட் மசோதா விவகாரம்  தெரசா மேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

லண்டன், ஜன.17 பிரெக்சிட் ஒப்பந்த மசோதா தோல்வி அடைந்ததை அடுத்து, தெரசா மே அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இதனால் தெரசா ஆட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கியது. முன்னதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்த மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், மிகப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பந்தத்தை எதிர்த்து வாக் களித்தனர். அய்ரோப்பிய யூனியன் அமைப் பிலிருந்து பிரிட்டன் விலகிய பிறகு, அந்த அமைப்புக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவு....... மேலும்

17 ஜனவரி 2019 15:19:03

சிரியாவில் குர்துகளை தாக்கினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் துருக்கிக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாசிங்டன்,  ஜன.17  சிரியாவில் குர்து படைகள் மீது துருக்கி தாக்குதல் நடத்தினால் அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் தெரிவித்துள்ளதாவது: சிரியாவில் உள்ள குர்து படைகளுக்கு எதிராக துருக்கி தாக்குதல் நடத்தினால் அந்த நாடு கடுமையான பொருளாதார பேரழிவை சந்திக்கும். அவர்களை பாதுகாக்க 20 மைல் சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்படும். அதே நேரத்தில், குர்துகளும்....... மேலும்

17 ஜனவரி 2019 14:32:02

பிரான்சில் 9ஆவது வாரமாக மஞ்சள் அங்கி போராட்டம்

பிரான்சில் 9ஆவது வாரமாக மஞ்சள் அங்கி போராட்டம்

பாரிசு,  ஜன. 14- பிரான்சில் அர சுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் "மஞ்சள் அங்கி' போராட்டம், 9-ஆவது வாரமாக சனிக்கிழமை யும் நடைபெற்றது.  இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் நடைபெற்று வரும் மஞ்சள் அங்கிப் போராட் டம், 9-ஆவது வாரமாக சனிக் கிழமையும் நடைபெற்றது. ....... மேலும்

14 ஜனவரி 2019 17:09:05

22ஆவது நாளாக அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம்

வாசிங்டன், ஜன. 14- அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம் 22-ஆவது நாளாக சனிக்கிழமை நீடித்தது. அந்த நாட்டின் வர லாற்றிலேயே மிக அதிக நாள் களுக்கு நீடித்த அரசுத் துறைகள் முடக்கம் இது என்பது குறிப் பிடத்தக்கது. மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 570 கோடி டாலர் (சுமார் ரூ.45,125....... மேலும்

14 ஜனவரி 2019 17:09:05

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் விமானங்கள், வாகன போக்குவரத்து பாதிப்பு

நியூயார்க், ஜன. 14- அமெரிக்கா வில் கடும் பனிப்புயல் தாக்கி வருகிறது. இது அந்நாட்டின் வட கிழக்கு பகுதியில் 1,609 கி.மீ. தூரம் தாக்கத்தை ஏற் படுத்தியுள்ளது. கன்சாஸ், இன்டியானா பொலிஸ், வாசிங்டன், டென் வர், மிசோரி, செயின்ட் லூயிஸ், அர்கன் சாஸ் உள்ளிட்ட பல....... மேலும்

14 ஜனவரி 2019 17:09:05

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது: 19 தொழிலாளர்கள் பலி

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது: 19 தொழிலாளர்கள் பலி

பீஜிங், ஜன. 14- சீனாவில் ஷான்ஜி மாகாணம், ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் 87 தொழிலா ளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடி யாமல் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 19 பேர் பலியாகினர். 66 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய....... மேலும்

14 ஜனவரி 2019 17:09:05

உலக வங்கி தலைவர் பதவி நிக்கி ஹாலே - இவாங்கோ டிரம்ப் முன்னிலை

உலக வங்கி தலைவர் பதவி நிக்கி ஹாலே - இவாங்கோ டிரம்ப் முன்னிலை

வாசிங்டன், ஜன. 14- உலக வங்கி யின் தலைவர் ஜிம் யோங்கிம், தனது பதவிலிருந்து வில குவதாக கடந்த வாரம் அறிவித்தார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும்போதே அவர் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார். வருகிற 31-ஆம் தேதி அவர் தனது பதவில் இருந்து விலகு வார் என தெரிகிறது. இந்நிலையில் உலக வங்கி....... மேலும்

14 ஜனவரி 2019 17:09:05

360 டிகிரி கோணத்தில் நிலவின் இருண்ட பகுதி: படமெடுத்து அனுப்பியது சீன ஆய்வுக் கலம்

பீஜிஸ், ஜன. 13- பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவினு டைய பின் பகுதியின் 360 டிகிரி கோண படத்தை, சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக பூமிக்கு அனுப்பி யுள்ளது. பிரத்யேக செயற்கைக்கோள் வழியாக இந்தப் படம் அனுப்பப்பட்டதையடுத்து, சாங் இ-4 ஆய்வுத் திட்டம் முழு வெற்றியடைந்துள்ளதாக சீனா....... மேலும்

13 ஜனவரி 2019 15:47:03

தைவான் பிரதமராக சூ தசெங்-சாங் நியமனம்

தைவான் பிரதமராக சூ தசெங்-சாங் நியமனம்

தைபே, ஜன. 13- தைவானில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பிரதமர் வில்லியம் லையின் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி பெருத்த பின்னடவை சந்தித்தது. தைவானை பொறுத்தமட்டில் உள்ளூர் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் போது, தலைமை பொறுப் பில் இருப்பவர்கள் பதவி விலகுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் வில்லியம் லை தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்றுமுன்தினம் இரவு அறிவித்தார். அதனை....... மேலும்

13 ஜனவரி 2019 15:47:03

உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 137ஆவது இடம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிட்னி, ஜூன் 10- சிக்கலான உலகில் அமைதியான நாடுகள் பட்டியலில், 2008-ஆம் ஆண்டில் இருந்தே முதலிடம் பிடித்து வரும் அய்ஸ்லாந்து இந்தாண்டும் முதலிடம் பெற்றுள்ளது. 141ஆவது இடத்தில் இருந்த இந்திய நான்கு இடங்கள் முன்னேறி 137ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இது உலகளாவிய சமாதான குறியீட்டின் பன்னிரண்டாவது பதிப்பில் உலகின் எவ்வளவு நாடுகள் குறைவான அமைதியை பெற்றுள்ளது என்பதை இந்த ஆய்வு தெளிவுப்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் நடத்திய ஆய்வில், சமாதான போக்கு, அதன் பொருளாதார மதிப்பு மற்றும் அமை தியான சமுதாயத்தை எவ்வாறு விரி வாக்கம் செய்வது ஆகியவற்றின் மீதான மிக விரிவான தரவு சார்ந்த பகுப் பாய்வை இந்த அறிக்கை அளிக்கிறது.

இந்த அறிக்கையின் படி, உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில், 141ஆவது இடத்தில் இருந்த இந்தியா 137ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகின் அமைதியான நாடுகள் பட்டி யலில் 2008-ஆம் ஆண்டில் இருந்தே அய்ஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் ஆகியவை அடுத் தடுத்த அய்ந்து இடங்களை பிடித்துள் ளன. கடந்து அய்ந்து ஆண்டுகளாக அமைதியற்ற சூழல் நிலவும் சிரியா, ஆப்கன், ஈராக், தெற்கு சூடான், சோமா லியா ஆகிய நாடுகள் குறைந்த அமைதி யான நாடுகளாக அதாவது கடைசி இடங்களில் உள்ளன.  உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலில் 61 சதவீதம் நாடுகள் 2008 முதல் மோச மடைந்துள்ளது.

பொருளாதார தாக்கத்தின் எழுச்சி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு செலவி னங்களின் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணங்களால், சீனா, ரஷ்யா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் அதிகரித்து வரும் வன்முறைகளின் காரணங்களால் 2017-ஆம் ஆண்டில் பொருளாதார பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில், குறைந்த அள விலான அமைதியான நாடுகளுடன் பொருளாதார செயல்திறனை ஒப்பிடு கையில், மிகவும் அமைதியான நாடு களில் தனிநபர் வருமானம் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

கடுமையான சட்டங்கள் மூலம் இந்தியாவில் வன்முறை மரணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை, சாட், கொலம்பியா, உகாண்டா நாடுகளி லும் வன்முறை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைத்திக் கான மாற்றங்களை பார்க்கும் போது, வேறுபாடுகள் மிகவும் வலுவானதா கவும், அதே சமயம், அமைதியில் முன் னேற்றமடைந்த நாடுகள் மற்றும் கடந்த பத்தாண்டுகளில் சீரழிக்கப்பட்ட நாடு களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஏழு மடங்கு அதிகரித்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. கடந்த பத்து ஆண்டுகளில் ஏற் பட்ட பதட்டங்கள், மோதல்கள் மற் றும் நெருக்கடிகள், குறிப்பாக மத்திய கிழக்கில் தீர்க்கப்படாமல் இருப்பதை வெளிப்படுத்தி உள்ளது. இதன் விளை வாக சமாதானத்தில் படிப்படியாக வீழ்ச்சி ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner