முன்பு அடுத்து Page:

இலண்டனில் கலைஞருக்கு நினைவேந்தல்

இலண்டனில் கலைஞருக்கு நினைவேந்தல்

லண்டன், ஆக. 15- கலைஞர் அவர் களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியை லண்டன் 'தமிழர் முன்னேற்றக் கழகம்' ஒருங் கிணைத்தது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழீழத் தமிழர்களும் ஒருங்கே கலந்துகொண்டு கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்தினர். த.மு.க தலைவர் நாகதேவன், செயலாளர் அன்பழகன், பாதுகாப்பு மன்றத் தலைவர் தேவதாஸ், த.மு.க திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தவமணி மனோகரன் ஆகியோர் கலைஞரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் பால் சத்தியநேசன்,....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 16:11:04

அமெரிக்காவில் கலைஞர் அவர்கட்கு நினைவேந்தல்

அமெரிக்காவில் கலைஞர் அவர்கட்கு நினைவேந்தல்

அமெரிக்கா, ஆக. 15- கலைஞரின் மறைவையொட்டி அமெரிக்காவின் பல நகரங்களில் தமிழ்ச் சங்கங்கள் மற்ற அமைப்புகள் மரியாதை செய்து வருகின்றனர். அரசியல் மற்ற வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக இணைந்து மரி யாதை செய்வது அவரது தமிழ்,தமிழினத் தொண்டின் சிறப்பாக அமைந்தது. நியூசெர்சி, சிகாகோ, கன்னெக்டிகட், டெக்சாசு,கலிபோர்னியா, வாசிங்டன் என்று பல ஊர்களிலும் நேரடியாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி யும், செலுத்த ஏற்பாடுகள் செய்தும் தங்கள் நெஞ்சத்தில் நிறைந்துள்ள கலை ஞர் பற்றிய....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 15:23:03

நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 6 பேர் பலி

நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 6 பேர் பலி

இசுலாமாபாத், ஆக. 15- பாகிஸ் தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தலைநகர் குவெட்டாவில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சஞ்சாடி பகுதியில்  இயங்கி வரும் நிலக்கரி சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர் கள் வேலை செய்து கொண்டி ருந்தனர். சுமார் 4 ஆயிரம் அடி ஆழத் தில் அவர்கள் பணியில் இருந்த போது திடீரென்று பூமியின் அடியில் இருந்து பெருமளவில் கசிந்த மீத்தேன் வாயுவினால் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கத்தின்....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 14:39:02

பாகிஸ்தான்: இம்ரான் உள்பட 329 எம்.பி.க்கள் பதவியேற்பு

  பாகிஸ்தான்: இம்ரான் உள்பட 329 எம்.பி.க்கள் பதவியேற்பு

    இசுலாமாபாத், ஆக. 15- பாகிஸ்தானின் 15-ஆவது நாடாளுமன்றம் திங்கள் கிழமை முதல் முறையாகக் கூடியது. கடந்த மாதம் 25-ஆம் தேதி நடை பெற்ற பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட 329 உறுப்பினர்கள், அந்தக் கூட்டத்தில் பதவியேற்றனர். நாட்டின் அடுத்த பிரதமராகத் தேர்ந் தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப் படும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலை வருமான இம்ரான் கானும் பதவியேற்ற உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் வரலாற்றில், ஜனநாயக முறையில் ஆட்சி....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 14:39:02

36 ஆண்டுகள் கைதியாக வாடிய இந்தியர் விடுதலையாகி தாயகம் திரும்பினார்

      36 ஆண்டுகள் கைதியாக வாடிய இந்தியர் விடுதலையாகி தாயகம் திரும்பினார்

இசுலாமாபாத், ஆக. 15- பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத் தையொட்டி அந்நாட்டின் சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டுள்ள 26 மீனவர்கள் உள்பட 29 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்தது. அவர்கள் நேற்று இந்திய எல்லைப்பகுதியான அட்டாரி-வாகா எல்லைப்பகுதிக்கு இன்று பேருந்து மூலம் அழைத்து வரப்பட்டனர். விடுதலை ஆனவர்களில் ஒருவரான கஜானந்த் சர்மா கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து திடீரென்று....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 14:39:02

கலிதா ஜியாவின் பிணையை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

   கலிதா ஜியாவின் பிணையை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

டாக்கா, ஆக. 14- வங்காளதேசத் தில் கடந்த 2015ஆ-ம் ஆண்டு அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான தேசியவாத கட்சி மற் றும் தேசியவாத ஜமாத் கூட் டணி அழைப்பு விடுத்தது. நாடு தழுவிய அளவில் நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த தொடர் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையின் போது 3-.2.-2015 அன்று கொமில்லா மாவட்டம், சிட்டாகாங் பகுதி யில் அடையாளம் தெரியாத நபர்களால்....... மேலும்

14 ஆகஸ்ட் 2018 14:49:02

சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவியது அமெரிக்கா

   சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவியது அமெரிக்கா

வாசிங்டன், ஆக. 14- வெப்ப கிரகமான சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை திரட்டிவர கடந்த 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் ‘ஹீலியோஸ் 1’ மற்றும் ‘ஹீலியோஸ் 2’ செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட் டாக விண்ணில் செலுத்தின. பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற இந்த செயற்கைக்கோள்கள் சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. இதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய....... மேலும்

14 ஆகஸ்ட் 2018 14:28:02

2050ஆம் ஆண்டில் ஜகார்த்தா நகரம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

   2050ஆம் ஆண்டில் ஜகார்த்தா நகரம் முழுவதும்  கடலில் மூழ்கும் அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    இலண்டன், ஆக. 14- பருவ நிலை மாற்றம் காரணமாக வட துருவத்தில் உள்ள அண் டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகுகின்றன. கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது. இத்த கைய காரணங்களால் கடலோ ரத்தில் உள்ள நகரங்கள் கட லில் மெல்ல மெல்ல மூழ்கி வருகின்றன. அவற்றில் அதிவிரைவாக மூழ்கி வரும் நகரமாக இந் தோனேசியாவின் ஜகார்த்தா திகழ்கிறது. இங்கு 1 கோடி மக்கள் வசிக்கின்றனர். ஜாவா தீவில் இது அமைந்துள்ளது. இதன் மீது....... மேலும்

14 ஆகஸ்ட் 2018 14:28:02

சூரிய ஆய்வு செயற்கைக்கோள் ஏவுவதை நாசா ஒத்திவைத்தது

சூரிய ஆய்வு செயற்கைக்கோள் ஏவுவதை நாசா ஒத்திவைத்தது

  நியூயார்க், ஆக. 13- வெப்ப கிரகமான சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை திரட்டிவர கடந்த 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் ‘ஹீலியோஸ் 1’ மற்றும் ‘ஹீலியோஸ் 2’ செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக விண்ணில் செலுத்தின. பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற இந்த செயற்கைக்கோள்கள் சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்து தான் ஆய்வு செய்ய முடிந்தது. இதனால் உலக அழிவை ஏற்படுத் தக்கூடிய....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 14:44:02

மறைந்த உலக இலக்கியப் படைப்பாளி வி.எஸ்.நைப்பாலுக்கு நமது வீர வணக்கம் - இரங்கல்

மறைந்த உலக  இலக்கியப் படைப்பாளி வி.எஸ்.நைப்பாலுக்கு நமது வீர வணக்கம் - இரங்கல்

நோபல் பரிசு பெற்ற பிரபல  ஆங்கில இலக்கிய மேதையும், டிரினிடாட் என்ற தீவில் பிறந்த இந்திய வம்சாவளியினருமான வி.எஸ்.நைப்பால் அவர்கள் இலண்டனில் தமது 85 ஆம்வயதில் காலமானார் என்பதை அறிவிந்து மிகவும் வருந்துகிறோம். அவர் சுமார் 30 புத்தகங்களுக்குமேல் எழுதியுள்ளார். 1989 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து தமிழ்நாட்டில் சென்னைக்கும் வந்து, நமது இயக்கம், தந்தை பெரியார், பெரியார் திடல், பெரியார் - அன்னை மணியம்மையார் மறைவிற்குப் பிறகு நமது கழகம்....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 14:42:02

உலகளவில் நாத்திகர்கள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகிலேயே அதிக விழுக்காட்டில் நாத்திகர்கள் இருப்பது சீனாவில்தான் என்று ஆய்வுத்தகவல் கூறுகிறது.

globalnation.inquirer.net இணையத்தில் (9.5.2018) இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கேல்லப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் 2017ஆம் ஆண்டுவரை பன்னாட்ட ளவில் 68 நாடுகளில் சுமார் 68,000பேரிடம் மத நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் மத நம்பிக்கையற்றவர்கள்குறித்து புள்ளிவிவரம் திரட்டப்பட்டது.

சீனாவில் 67 விழுக்காட்டினர் நாத்திகர்கள்

அப்புள்ளிவிவரத்தின்படி, சீனாவில் 67 விழுக்காட்டினர் மத நம்பிக்கையற்ற நாத்தி கர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

பத்துபேரில் ஏழு பேர் நாத்திகர்களாக உள்ளனர்.  வேறு எந்த நாட்டையும்விட, இருமடங்கு அளவில் 23 விழுக்காட்டினர் மத மற்றவர்களாக அறிவித்துக்கொண்டுள்ளனர்.

சீனாவில் 9 விழுக்காட்டினர் மட்டுமே தங்களை மத நம்பிக்கை கொண்டவர்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவைத் தொடர்ந்து நாடுவாரியாக நாத்திகர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:

ஜப்பான் நாட்டில் 29 விழுக்காடு, சுலோவேனியா நாட்டில் 28 விழுக்காடு, செக் குடியரசில் 25 விழுக்காடு, தென்கொரியாவில் 23 விழுக்காடு, அய்ரோப்பிய நாடுகளான பெல்ஜியம் 21 விழுக்காடு, பிரான்சு 21 விழுக்காடு, சுவீடன் 18 விழுக்காடு, அய்ஸ்லாந்து 17 விழுக்காடு அளவில் நாத் திகர்களாக தங்களை அறிவித்துக்கொண் டுள்ளனர்.

நம்பிக்கையில் பல விதங்கள்

மதநம்பிக்கையைச் சார்ந்துள்ளவர்களாக 62 விழுக்காட்டினர் தங்களை மதநம்பிக்கை உள்ளவர்கள் என்று கூறியுள்ளனர். மத நம்பிக்கை உள்ளவர்களிடையே ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நம்புபவர்களாக 74 விழுக்காட்டினரும், கடவுள் நம்பிக்கை யாளர்களாக 71 விழுக்காட்டினரும், சொர்க்கம் என்று இருப்பதாக நம்புபவர்களாக 56 விழுக்காட்டினரும், மறுபிறப்பு உள்ளதாக 54 விழுக்காட்டினரும், நரகம் என்ற ஒன்று இருப்பதாக 49 விழுக்காட்டினரும் உள்ளதாக புள்ளி விவரத் தகவல் கூறுகிறது.

வங்கதேசம், இந்தோனேசியா, பிலிப் பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்களிடையே மதம், கடவுள், ஆன்மா, சொர்க்கம், நரகம் ஆகிய நம்பிக்கைகள் மிகுந்துள்ளதாக கேல்லப் இன்டர்நேஷனல் நிறுவனப் புள்ளிவிவரத்தகவல் கூறுகிறது. மங்கோலியா நாட்டில் 8 விழுக்காடு, வியட்நாம் 6 விழுக்காடு, இந்தியா 2 விழுக்காடு, பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்தில் ஒரு விழுக்காடு நாத்திகர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள் இருப்பதாக புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது.

ஆக, மதத்தை நம்புவோரிடையே ஆன்மா, சொர்க்கம், மறுபிறப்பு, நரகம், கடவுள் ஆகிய கருத்துகளை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள் என்று இப்புள்ளி விவரத்தகவல்கள் மூலம் தெரிகிறது.

வருவாய், கல்வி, சமூக பண்புநலன்கள் பெருக நாத்திகம்

புள்ளிவிவரத் தகவலின்படி, மதநம்பிக்கை குறைவாக உள்ள நிலையில் வருவாய் மற்றும் கல்வி நிலை அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது.

மத நம்பிக்கை சார்ந்தவர்களிடையே குறைவான வருவாய் கொண்டவர்களாக 66 விழுக்காடும்,

மத நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர் களில்  50 விழுக்காட்டளவில் அதிக வருவாய் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

அதேபோன்று மத நம்பிக்கை மிகுந்தவர்களிடையே 83 விழுக்காட்டளவில் கல்வி நிலையில் குறைந்து காணப்படு வதாகவும், மதநம்பிக்கையற்றவர்களிடையே  49 விழுக்காட்டளவில் கல்விநிலையில் உயர்ந்து காணப்படுவதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது. புள்ளிவிவரத்தின்படி, மதம் சார்ந்த நம்பிக்கை மற்றும் சமுதாயத்தில் மக்களின் பண்புநலன்களிடையே ஒப்பீட்டளவில் வயது, வருவாய், கல்வி நிலை உள்ளிட்டவற்றில் மதநம்பிக்கை இல்லாதவர்களின் நிலை ஓங்கியும், மத நம்பிக்கையாளர்களின் நிலை குறைந்தும் காணப்படுகிறது. மேலும் இளைஞர்கள் ஒரே மதத்தைச் சார்ந்திராமல், பன்மத நம்பிக்கையாளர்களாக அதிகரித்துவருவதாக தகவல்கள் கூறுகின்றன.

சமுதாயத்தில் மதத்தை ஏற்றுக்கொள்வதில் கூட, கல்வியின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதாக  தகவல்கள் கூறுகின்றன.

பன்னாட்டளவில் தனிமனிதர்களின் வாழ்வில் மதம் பொருந்தக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு நாட்டின் வரலாற்றைப் பொருத்தவரையிலும்கூட,கல்விநிலைமட்டுமே குறிப்பிடத்தக்க மதிப்புகளை பெறுவதாக இருந்து வருகிறது.

- இவ்வாறு புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner