சீர்திருத்த அமலில் தேக்க நிலை இல்லை: பிரணாப் முகர்ஜி உறுதி
முன்பு அடுத்து Page:

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு

 அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு

வாஷிங்டன், ஜூலை 27 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட, ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான முதற்கட்ட தேர்தல்கள் பல்வேறு....... மேலும்

27 ஜூலை 2016 16:34:04

காற்று மாசு சுத்திகரிப்பு கருவி கண்டுபிடிப்பு: பெய்ஜிங்கில் நிறுவ ஏற்பாடு

காற்று மாசு சுத்திகரிப்பு கருவி கண்டுபிடிப்பு: பெய்ஜிங்கில் நிறுவ ஏற்பாடு

பெய்ஜிங், ஜூலை 27 நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார். தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு முலம் காற்று மாசுபடுகிறது. அதனால் பூமி வெப்பமடைந்து பருவநிலை மாற்றம் ஏற்படு கிறது. அதை தடுக்க காற்றில் ஏற் படும் மாசுக்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெதர் லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு....... மேலும்

27 ஜூலை 2016 16:31:04

மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி

 மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து:  8 பேர் பலி

கோலாலம்பூர், ஜூலை 26 மலேசியாவின் கடற்கரை ஜோஹர் மாகாணத்துக்கு அருகே கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் படகில் இருந்த 20 பேர்  காணா மல் போய் விட்டனர். மலேசியாவின் கடற்கரை மாகாணமான ஜோஹர் இந்தோ னேசியாவின் கடல்வழி எல்லை யையொட்டி அமைந்து உள்ளது. இதனால் இந்தோனேசியர்கள் எளிதாக கடல்வழியாக எல்லை யை தாண்டி சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் குடியேறிவிடு கின்றனர்........ மேலும்

26 ஜூலை 2016 15:51:03

பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம்: ஆஸ்திரேலியப் பிரதமர் வலியுறுத்தல்

 பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம்: ஆஸ்திரேலியப் பிரதமர் வலியுறுத்தல்

மெல்போர்ன், ஜூலை 26 ஆஸ்தி ரேலியாவுக்கு உண்மை யான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள தால், பயங்கரவாதத்துக்கு எதி ரான மிகக் கடுமையான சட்டங் களை இயற்ற வேண்டும் என்று அந்த நாட்டுப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார். இதுதொடர்பான வரைவு மசோதா அம்சங்கள் குறித்து மாகாண ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப் பிட்டுள்ளதாவது: ஆஸ்திரேலியா எதிர்நோக்கி யுள்ள பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலும் உண்மையானது. அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத்....... மேலும்

26 ஜூலை 2016 15:49:03

லிபியாவில் கரையொதுங்கிய 41 அகதிகள் உடல் மீட்பு

லிபியாவில் கரையொதுங்கிய 41 அகதிகள் உடல் மீட்பு

திரிபோலி, ஜூலை 26 லிபியக் கடற்கரையில் ஒதுங்கிய 41 பேரது உடல்களை மீட்புக் குழு வினர் மீட்டனர்.அந்த உடல்கள், லிபியாவி லிருந்து அய்ரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடிச் சென்ற அகதிகளுடையவையாக இருக்க லாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறிய தாவது: தலைநகர் திரிபோலிக்கு வடக்கே உள்ள சப்ரதா கடற்கரையிலிருந்து 41 உடல்களை சிறப்பு மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக் கிழமை மீட்டனர். அந்த உடல்கள், 5 அல்லது 6 நாள்களுக்கு முன்....... மேலும்

26 ஜூலை 2016 15:45:03

சீர்திருத்த அமலில் தேக்க நிலை இல்லை: பிரணாப் முகர்ஜி உறுதி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், ஏப். 24- பொருளாதார சீர்திருத் தங்களை மேற்கொள்வ தில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேக்க நிலையை எட்டிவிட வில்லை என்று நிதிய மைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்தார். அரசின் பொருளாதார ஆலோ சகர் கவுசிக் பாசு தெரி வித்த சில கருத்துகளால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இனி அரசு சீர்திருத் தங்களை மேற்கொள் ளாது, 2014 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் எதுவும் நடக் கும்'' என்ற வகையில் பாசு கருத்து தெரிவித் திருந்தார். அதை முகர்ஜி உதாரணங்களுடன் மறுத்தார். பொருளா தாரச் சீர்திருத்தங்களை அமல் செய்வதில் தேக் கமோ, தயக்கமோ இல்லை. கவுசிக் பாசு சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. சமீபத்தில் கூட முக்கியமான பொரு ளாதார முடிவுகளை அரசு எடுத்து அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. புதிய ஆலை உற்பத் திக் கொள்கையை (மேனு பாக்சரிங் பாலிசி) அரசு வகுத்துள்ளது. அது இப் போது அமலுக்கும் வந் திருக்கிறது. அடித்தளக் கட்டமைப்புக்குத் தேவைப்படும் நிதியைப் பெற கடன் பத்திரங்கள் மூலம் நிதியை ஏற்படுத் துவோம் என்று கூறி யிருந்தோம்.

அந்த நிதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். தொழில், வணிகத் தேவைகளுக்காக வங்கி களை எளிதாக அணுகிக் கடன் பெறும் கொள் கைகளை உருவாக்குவோம் என்று கூறியிருந்தோம், அவற்றை இப்போது அமல் செய்துள்ளோம். இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடந்த நிர் வாகிகள் கூட்டத்தில் வட்டி வீதத்தை அரை சதவீதம் குறைத்து புதிய உத்வேகத்தை அளித்திருக் கிறது. இவையெல்லாம் சீர்திருத்த நடவடிக்கை கள் இல்லையா? நாட் டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதத்தைக் கடந்த ஆண் டைவிட அதிகரிக்க வேண் டும், பணவீக்க விகிதத் தைக் கட்டுப்படுத்த வேண் டும் என்ற இரட்டை நோக்கில் புதிய முடிவு கள் எடுக்கப்பட்டுள்ளன. பணவீக்க விகிதம் 6 முதல் 7 ஆகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

நாட்டின் ஒட்டுமொத் தப் பொருளாதார வளர்ச்சி வீதத்தையும் உயர்த்துவ தற்கு இலக்கு நிர்ணயித் திருக்கிறோம். மத்திய அரசின் வரவுக்கும் செல வுக்கும் உள்ள இடை வெளியைக் குறைக்க வேண்டும் என்று உணர்ந் திருக்கிறோம். வரவைப் பெருக்க வும் செலவைக் குறைக் கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின் றன.

வேளாண் துறையில் அதிகம் தேவைப்படும் உணவு தானியங்களை யும் எண்ணெய் வித்து களையும் பருப்பு வகை களையும் அதிகப் பரப் பளவில் சாகுபடி செய்ய ஊக்குவிப்புகளை அறி வித்துள்ளோம். சில பண்டங்களின் ஏற்றுமதியைக் கட்டுப் படுத்தி இருக்கிறோம். சிலவற்றை தேவைக் கேற்ப இறக்குமதி செய் யவும் அனுமதி வழங்கி யிருக்கிறோம். விவசாயி களுக்கு இடு பொருள் கள், விதை, உரம் போன் றவை உடனுக்குடன் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வழிகாட்டு நெறிகளை உருவாக்கி யிருக்கிறோம். வங்கிகள் தரும் கடன் மீதான வட் டியை கடந்த 3 ஆண்டு களாக சிறிதுசிறிதாக உயர்த்தி, பண விநியோகம் கட்டுப்படுத்தினோம். இப்போது தொழில், வர்த்தகத்துறை நட வடிக்கைகளுக்குப் பணம் தேவைப்படுகிறது என்பதால் வட்டி வீதத்தையே அரை சதவீதம் குறைத்திருக்கிறோம்.

இவையெல்லாம் பொரு ளாதார சீர்திருத்த நட வடிக்கைகள்தானே? சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத் தின் விலை 2 வாரங் களுக்கு ஒருமுறை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது; உலக அளவில் வளரும் நாடுகளுக்கு இது பெரிய பிரச்சினையாக இருக் கிறது. வளர்ந்த நாடுகளுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. காரணம் வள ரும் நாடுகளில்தான் பெட் ரோலியப் பண்டங்களுக் கான தேவை அதிகமா கிக் கொண்டே வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தென் கொரிய நிதியமைச்சரும் என் னைச் சந்தித்தபோது ஒப் புக்கொண்டார். இது தொடர்பாக வளரும் நாடுகள் ஒன்றுகூடிப் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார் முகர்ஜி..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner