முன்பு அடுத்து Page:

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர் விடுதலை

பாகிஸ்தான் சிறையில்  அடைக்கப்பட்ட இந்தியர் விடுதலை

இஸ்லாமாபாத், டிச. 18- மும்பை நகரை சேர்ந்தவர் ஹமித் நிஹால் அன்சாரி(33). சமூக வலைத் தளம் மூலமாக பாகிஸ்தான் நாட்டு பெண்ணை காதலித்து வந்த அன்சாரி ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்த குற்றத்துக்காக கடந்த 2012-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். உரிய ஆவணங்கள் ஏது மின்றி இந்தியாவுக்காக உளவு பார்ப்பதற்காக தங்கள் நாட்டுக் குள் நுழைந்ததாக அன்சாரி மீது பெசாவர் நகரில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போலி....... மேலும்

18 டிசம்பர் 2018 16:06:04

ஜனநாயகத்தை காப்பாற்றவே ரணிலுக்கு மீண்டும் பதவி இலங்கை அதிபர் சிறிசேனா விளக்கம்

ஜனநாயகத்தை காப்பாற்றவே ரணிலுக்கு மீண்டும் பதவி  இலங்கை அதிபர் சிறிசேனா விளக்கம்

கொழும்பு, டிச. 18- இலங்கையில் பிரதம ராக இருந்த அய்க்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரம சிங்கேவை அதிபர் சிறிசேனா நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதை சமாளிக்க நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக....... மேலும்

18 டிசம்பர் 2018 16:06:04

புதிய பொருளாதாரத் தடையால் அணு ஆயுதப் பேச்சுவார்த்தை முறியும்

அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை பெங்வாங், டிச. 18- தங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளால், அணு ஆயுதங்க ளைக் கைவிடுவதற்காக அந்த நாட்டுடன் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தை நிரந்த ரமாக முறிந்துவிடும் என்று வட கொரியா எச்சரித்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உனின் வலதுகரமாக அறியப்படும் சோ ரியோங்-ஹே உள்ளிட்ட 3 உயரதிகாரி கள் மீது அமெரிக்கா அண் மையில் பொருளாதாரத் தடை களை விதித்தது. அவர்கள் மனித உரிமை....... மேலும்

18 டிசம்பர் 2018 16:06:04

டிச.18 முதல் அமலுக்கு வருகிறது ஏமன் ஒப்பந்தம்

டிச.18 முதல் அமலுக்கு  வருகிறது ஏமன் ஒப்பந்தம்

ஏமன், டிச. 18- ஏமனின் ஹோடைடா நகரில் அந்த நாட்டு அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள் ளப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (டி. 18) அமலுக்கு வரும் என்று அய்.நா. தெரிவித்துள்ளது. ஏமனின் முக்கியத்துவம் வாய்ந்த ஹோடைடா நகரம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை மீட்பதற்காக அந்த நகரை அரசுப் படையினர் சுற்றி வளைத் துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை வான்வழித் தாக்குதல் நடத்தி....... மேலும்

18 டிசம்பர் 2018 16:06:04

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஏமனில் மோதல்

ஏமன், டிச. 17- அய்.நா.வின் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையிலும், ஏமனின் துறைமுக நகரான கோடைடா வில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நீடித்தது. இதுகுறித்து அரசு ஆதரவுப் படை ராணுவத் தகவல்கள் தெரிவிப்பதாவது: கோடைடா மாகாணத்தில் சனிக்கிழமை இரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 22 கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட 29 வீரர்கள் உயிரி ழந்தனர். இந்த தாக்குதலின்போது, கோடைடா நகரத்துக்கு தெற்கே 20 கி.மீ. தொலைவில் உள்ள  அல்-துரேகிமி....... மேலும்

17 டிசம்பர் 2018 15:41:03

துபையில் மென்பொருள் நிறுவனம் தொடங்கிய 13 வயது இந்தியச் சிறுவன்

துபையில் மென்பொருள் நிறுவனம்  தொடங்கிய 13 வயது இந்தியச் சிறுவன்

துபை, டிச. 17- துபையில் 13 வயது இந்தியச் சிறுவன் மென் பொருள் நிறுவனம் தொடங் கியுள்ளது வியப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்தச் சிறுவன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, செல்லி டப்பேசி செயலியை வடிவ மைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது. கேரளத்தைச் சேர்ந்த ஆதித் யன் ராஜேஷ் என்ற அந்தச் சிறு வன், 9 வயதிலேயே நிறுவனங் களுக்கு இணையதள பக்கத்தை வடிவமைப்பது, நிறுவனச் சின்னங்களை கணினியில் வடிவமைப்பது போன்ற பணி....... மேலும்

17 டிசம்பர் 2018 15:41:03

ஜப்பான் விடுதியில் வெடிவிபத்து 42 பேர் படுகாயம்

ஜப்பான் விடுதியில் வெடிவிபத்து  42 பேர் படுகாயம்

சப்போரோ, டிச. 17- ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று இரவு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு அருகில் இருந்த ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெடிப்பைத் தொடர்ந்து எரிவாயு கசிந்த வாசனையும் உணரப்பட்டதாக காயமடைந்தவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்த தகவலறிந்து, 20க்கும் மேற்பட்ட தீய ணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப் புப் படையினர்....... மேலும்

17 டிசம்பர் 2018 15:41:03

பருவ நிலை ஒப்பந்த செயல்திட்டத்துக்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல்

பருவ நிலை ஒப்பந்த செயல்திட்டத்துக்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல்

வார்சா, டிச. 17- கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க  பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான நெறி முறைகளுக்கு சர்வதேச நாடு கள் ஒப்புதல் அளித்துள்ளன. போலந்தில் இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த அய்.நா. பருவ நிலை மாநாட் டில், பருவ நிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்நோக்கி யுள்ள நாடுகளுக்கும், வளர்ச்சி யடைந்த நாடுகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற் படாததால் இந்த விவகாரத் தில் இழுபறி நீடித்து வந்தது. எனினும்,....... மேலும்

17 டிசம்பர் 2018 15:41:03

தீவிரம் குறைந்தது 'மஞ்சள் அங்கி' போராட்டம்

ஸ்ட்ராங்பர்க், டிச. 16- பிரான்ஸில் அரசுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் "மஞ்சள் அங்கி' போராட்டம், தீவிரம் குறைந்து காணப்பட் டது. காற்று மாசைக் குறைத்து, பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசலுக் கான வரியை மேக்ரான் அரசு அதிகரித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. எரிபொருள் விலையேற்றம் மட்டுமன்றி, குறைந்தபட்ச....... மேலும்

16 டிசம்பர் 2018 16:09:04

இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாடுகள் காக்கப்பட வேண்டும்

இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாடுகள் காக்கப்பட வேண்டும்

பன்னாட்டு நிதியம் வாசிங்டன், டிச. 16- இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஅய்) சுதந் திரமான செயல்பாடுகள் காக்கப்பட வேண்டியது அவசியம் என பன்னாட்டு நிதியம் (அய்எம்எஃப்) தெரிவித்துள்ளது. இது குறித்து, வாசிங்டனில் வியாழக்கிழமை செய்தியாளர்க ளுக்குப் பேட்டியளித்த பன்னாட்டு நிதியத்தின் தகவல் தொடர் புத் துறை இயக்குநர் கேரி ரைஸ் கூறியதாவது: இந்தியாவில் பொருளாதார மற்றும் நிதி நிலைப்புத்தன்மையை ஏற்படுத்தியதில் ஆர்பிஅய் முக்கியப் பங்காற்றியது. பன்னாட்டு நிதியத்துடனும் மிகச் சிறந்த நல்லுறவை ஆர்பிஅய் பேணி....... மேலும்

16 டிசம்பர் 2018 16:09:04

உச்சநீதிமன்ற நீதிபதி கவானா மீது அவதூறு: மன்னிப்பு கேட்டார் டிரம்ப்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், அக். 11- அமெரிக்காவில், உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப் பேற்றுள்ள பிரெட் கவானா மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது குறித்து, அமெரிக்கா சார்பில் அவரிடம் மன்னிப்பு கேட்பதாக அதிபர் டிரம்ப் உருக்கமாகத் தெரிவித்தார்.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 114-ஆவது நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள பிரெட் கவானாவின் அதிகாரப்பூர்வ பதவியேற்பு நிகழ்ச்சி வாசிங்டனிலுள்ள அதிபர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பிரெட் கவானா தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார்.

அப்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:

நீதிபதி கவானா மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தியதன் மூலம் பெரும் துன்பத்தை அனுபவித்த அவரி டமும், அவரது குடும்பத்தினரிடமும் அமெரிக்கா சார்பில் மன்னிப்பு கோரு கிறேன்.

நமது நாட்டுக்காக சேவையாற்ற முன்வருவோரை நாம் நேர்மையுடனும், கவுரவத்துடனும் வரவேற்க வேண்டும். அவர்கள் மீது பொய்யான அவதூறுகளை வாரியிறைக்கக் கூடாது.

கவானாவுக்கும், அவரது குடும்பத் தாருக்கும் நடைபெற்ற கொடுமைகள், இந்த நடைமுறைக்கு முற்றிலும் மாறு பட்டதாக இருந்தது என்றார் அவர்.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் துணை நீதிபதியாக இருந்த அந்தோணி கென்னடியின் பதவிக் காலம் முடிவ டைந்ததையடுத்து, அந்தப் பதவிக்கு பிரெட் காவனாவின் பெயரை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரெட் காவனா மீது கிறிஸ்டைன் பிளேசி ஃபோர்டு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஊடகங்களிடம் தாமாக முன்வந்து பேட்டியளித்த கிறிஸ்டைன் பிளேசி, 1980-களில் பிரெட் காவனா தன்னை பாலியல் வன்முறை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, டெபோரா ரமீரெஸ் (53) என்ற பெண்ணும் யேல் பல்கலைக்கழகத்தில் 1983-ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, பிரெட் காவனா தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியாக குற்றம் சாட்டினார். அதையடுத்து, ஜூலி ஸ்வெட்னிக் என்ற பெண், காவனா கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை காவனா திட்டவட்டமாக மறுத்து வந்த நிலை யில், அவர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகும் ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில் தன்னுடன் இருந்த பெண் மீது காவனா பாலியல் தாக்குதல் நிகழ்த்தியதாக மேலும் ஒரு பெண் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், காவனா மீதான பாலியல் புகார் அளித்த கிறிஸ்டைன் பிளேசி ஃபோர்டிடமும், காவனாவிட மும் நாடாளுமன்ற குழு தனித் தனியாக விசாரணை நடத்தியது.

மேலும், இதுகுறித்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.அய். யும் இதுகுறித்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், அவரது நியமனத் துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவை களும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அவர் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக் கிடையிலும், முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவிக்கு கவானா தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளது, அவரைப் பரிந்துரைத்த அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி யாக கருதப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner