முன்பு அடுத்து Page:

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 8 ஈரான் வீரர்கள் சுட்டுக் கொலை

டெஹ்ரான், ஏப்.28 பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள சிஸ்டன்-பலூசிஸ்தான் மாகாணத்தில் ஈரான் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 8 வீரர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டனர். பாகிஸ்தானை ஒட்டியுள்ள ஈரானின் சிஸ்டன்-பலூசிஸ்தான் மாகாணத்தின் மிர்ஜாவே நகரில் நடைபெற்ற மோதலில் ஈரான் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 8 வீரர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மேலும், நான்கு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். ஈரானுக்கு தென்கிழக்கேயுள்ள சிஸ்டன்-பலூசிஸ் தான் மிகப்பெரிய மாகாணமாகும். இந்த....... மேலும்

28 ஏப்ரல் 2017 16:13:04

அய்.நா. மனித உரிமைகள் ஆணைய பிரதிநிதிக்கு வட கொரியாவில் ஆய்வு நடத்த அனுமதி

அய்.நா. மனித உரிமைகள் ஆணைய  பிரதிநிதிக்கு வட கொரியாவில்  ஆய்வு நடத்த அனுமதி

ஜெனீவா, ஏப்.28 வட கொரியாவில் உடல் ஊனமுற்றோர் உரிமைகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதிக்கு அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. அய்.நா. மனித உரிமைகள் ஆணைய அதிகாரியொருவர் வட கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இது தொடர்பாக அந்த அமைப்பு வியாழக்கிழமை (ஏப்.27)  வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது: வட கொரியாவில் உள்ள உடல் ஊனமுற்றோர் நலன் மற்றும் உரிமைகள்....... மேலும்

28 ஏப்ரல் 2017 16:09:04

அணு ஆயுத சோதனையை கைவிட மாட்டோம்: வடகொரியா அறிவிப்பு

அணு ஆயுத சோதனையை  கைவிட மாட்டோம்: வடகொரியா அறிவிப்பு

பியாங்யாங், ஏப்.28 வடகொரியா வின் அணு ஆயுத சோதனைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது என வடகொரிய அரசின் மூத்த அதிகாரி சோல் வோன் தெரிவித்துள்ளார் அய்.நா. தீர்மானத்தை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும், ஏவு கணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதற்காக அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை அய்.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளன. புதிதாக மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அமைச்சர்கள் வலியுறுத்தி வரு கின்றனர். வடகொரியாவுக்கு....... மேலும்

28 ஏப்ரல் 2017 16:05:04

சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் - நாட்டுக்கு அர்ப்பணிப்பு

சீனாவின் புதிய விமானம்தாங்கி  போர்க்கப்பல் - நாட்டுக்கு அர்ப்பணிப்பு

பெய்ஜிங், ஏப்.27 முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப் பணிக்கப்பட்டது. உலகளவில் சீனாவின் படை பலம் அபாரமானது. ஆண்டு தோறும் சீனா தனது ராணுவ பட்ஜெட்டை அதிகரித்துக்கொண் டே வருகிறது. அதன்மூலம் ஆயு தக்குவிப்பிலும் ஈடுபட்டுள்ளது. சீனாவிடம் சி.என்.எஸ். லயனிங் என்ற விமானம்தாங்கி போர்க்கப்பல் மட்டும் இருந்து வந்தது. அதுவும் கூட மிகப் பழையது. 25 ஆண்டுகளுக்கு முந்தையது. பழைய சோவியத் ஆட்சிக்காலத்தில் வாங்கப் பட்டதாகும்.   இந்தப் பணிகள்....... மேலும்

27 ஏப்ரல் 2017 17:34:05

காசினி விண்கலம் சனிகிரக வளையங்களுக்குள் ஊடுருவி சாதனை

காசினி விண்கலம்  சனிகிரக வளையங்களுக்குள் ஊடுருவி சாதனை

வாஷிங்டன், ஏப்.27 சனி கிரகத்தை நெருங்குவதற்கான இறுதிக்கட்ட பயணத்தை   தொடங்கிய காசினி விண்கலம், பல்டி அடித்து சனி வளையங் களுக்குள் ஊடுருவி சாதனை படைத்துள்ளது. சூரியக் குடும்பத்திலுள்ள சனி கிரகத்தை ஆய்வு செய்வதற் காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 1997ஆ-ம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி காசினி விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம், 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி சனி கிரகத்தின் சுற்று வட்ட பாதையில்....... மேலும்

27 ஏப்ரல் 2017 17:24:05

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு

சிறுவர்கள், பெண்கள் உள்பட 14 பேர் பலி லாகூர், ஏப்.26 பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பழங்குடியினர் பகுதியில் பயணிகள் வாகனம் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 சிறுவர்கள், 4 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள குர்ரம் மாவட்டம், கொன்டாரா கிராமத்தில், பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சிற்றுந்தைக் குறிவைத்து குண்டு வெடிப்புத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அந்த வாகனம் சென்று....... மேலும்

26 ஏப்ரல் 2017 16:29:04

பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் கணினியில் ரஷ்யா ஊடுருவியதாக தகவல்

பாரிஸ், ஏப்.26 பிரான்ஸ் அதிபர் தேர்தல் இறுதிச் சுற்றில் போட் டியிடும் வேட்பாளரின் கணி னியை ரஷ்யாவைச் சேர்ந்த ஊடு ருவல் கும்பல் ஊடுருவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் தேர்தல் முதற்சுற்றில் முதலிடத்தைப் பிடித்தவர் இமானுவல் மேக்ரான். அதன் மூலம் இறுதிச் சுற்றுத் தேர்தலுக்கு முன்னேறியுள்ளார். அவரது கணினியையும் அவருடைய பிரச்சாரக் குழு கணினியையும் ஊடுருவித் தகவல்கள் சேகரிப்பது போன்ற நடவடிக்கையில் ரஷிய ஊடுருவல் கும்பல் ஈடுபட்டதாக இணைய பாதுகாப்பு அமைப்பு....... மேலும்

26 ஏப்ரல் 2017 16:13:04

போர்க்கப்பல் மூழ்கடிக்கப்படும் அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா

போர்க்கப்பல் மூழ்கடிக்கப்படும் அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா

சியோல், ஏப்.25 அமெரிக்கா வின் விமானம் தாங்கி போர்க் கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார் என்று வட கொரியா, அமெரிக்காவை மிரட்டி உள்ளது. வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவு கணை சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத் துள்ளது. இந்த அணி அடுத்த சில நாட்களில் கொரிய தீபகற்பத்துக்கு போய்ச்சேரும் என....... மேலும்

25 ஏப்ரல் 2017 18:57:06

சிரிய அரசு மீது கூடுதல் பொருளாதார தடை: அமெரிக்கா நடவடிக்கை

வாஷிங்டன், ஏப்.25  ரசாயன குண்டு தாக்குதல் நடத்தியதற்காக அதிபர் ஆசாத் தலைமையிலான சிரிய அரசு மீது கூடுதல் பொரு ளாதார தடை விதித்து அமெரிக்கா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு தரப்பு படைக்கும் கிளர்ச்சியாளர்கள் படைக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக ரஷ்ய படைகள் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியா ளர்கள் வசம் உள்ள பகுதியில்....... மேலும்

25 ஏப்ரல் 2017 17:53:05

மெக்சிகோ வன்முறை: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

 மெக்சிகோ வன்முறை: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மெக்சிகோ, ஏப்.23 மெக்சி கோவில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களால் சென்ற மார்ச் மாதத்தில் மட்டும் இரண்டாயிரத் துக்கும் மேற்பட்டோர் பலியாகி யுள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிப்ப தாவது: மெக்சிகோவில் நாள்தோறும் வன்முறை சம்பவங்கள் அதி கரித்து வருவதை எடுத்துக்காட்டும் வகையில் சென்ற மார்ச் மாதத்தில் மட்டும் 2,020 பேர் உயிரிழந்தனர். கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே மாதத்தில் இந்த அளவுக்கு உயிர்பலி ஏற்படுவது இதுவே முதல் முறை. கடந்த இருபது ஆண்டுகளில்....... மேலும்

23 ஏப்ரல் 2017 15:51:03

Banner
Banner