எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலையில்லாத இளைஞர்கள்
சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை, டிச.20 படித்து வேலையில்லாத இளை ஞர்கள் சுயதொழில் தொடங்க விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

படித்து, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, பொருளா தார முன்னேற்றம் அளிக்கும் வகையில் வேலையில்லா இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப் படுகிறது.

இந்தத் திட்டத்தின் 2016- - - 2017-ஆம் ஆண்டு இலக்காக 183 பேருக்கு மானியமாக ரூ.91.67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.
எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட் டத் தைச் சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.  விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவராகவும், பொதுப் பிரிவினர் 45 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண் ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உற்பத்தித் தொழிலுக்கு ரூ.10 லட்சம், சேவைத் தொழிலுக்கு ரூ.3 லட்சம், வியாபாரத்துக்கு ரூ.ஒரு லட்சம் வரை கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.

திட்ட மதிப்பில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும். உற்பத்தியினத்துக்கு அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

எனவே, தகுதியான விண் ணப்பதாரர்கள் பொது மேலாளர், மாவட்ட தொழில் மய்யம், மாவட்ட ஆட்சியரின் பெருந் திட்ட வளாகம், திருவண்ணா மலை 606604 என்ற முகவரியில் நேரில் சென்று தேவையான விவ ரங்களைப் பெற்று விண்ணப்பிக்க லாம்.
மேலும், 9444650082, 7200545219 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner