சென்னை, நவ. 15- ஊரக மகளிருக்கு வெல்டிங், எலக்ட்ரிக் பணிகள் செய்ய பயிற்சி அளித்து வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும் மய்யங்களை பிரியூடன்பர்க் (Freudenberg) குழுமம் தமிழகத்தில் நாகப்பட்டினம் மற்றும் கருநாடகாவிலும் மேலும் பல மாநிலங்களிலும் நிறுவியுள்ளது. ஆட்டோமொபைல் நிறுவனம், வாகனம், இயந்திரம் மற்றும் ஆலை பொறியியல், ஜவுளி, கட்டு மானம், ஆற்றல், இரசாயனம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் புதுமையான தொழில்நுட்பத் தயாரிப்புகள் மற்றும் பல வேலைகளை இந்நிறுவனம் வழங்குகிறது என இதன் நிர்வாகி அரிஹரன் தெரிவித்துள்ளார்.

பொதுத் துறை வங்கிகளில் எழுத்தர் பணிகளுக்கான 7, 275 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பை இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக் சன் (அய்.பீ.பி.எஸ்.) அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளில் இந்தக் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 792 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 2018 செப்டம்பர் 1 அன்று, 20 முதல் 28 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகை உண்டு.

கல்வி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது இதற்கு இணையான படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கும் ஓ.பி.சி. பிரிவினருக்கும் ரூ.600; எஸ்.சி./எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு ரூ.100. கட்டணங்களை ஆன்லைனிலும், வங்கி செலான் மூலமாகவும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் :https://ibpsonline.ibps.in/crpclk8sep18/ என்னும் இணையதளத்தில் அக்டோபர் 10 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.10.2018

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள்: டிசம்பர், 8, 9, 15 ,16. முதன்மைத் தேர்வு நடைபெறும் காலம் : 20.01. 2019

விரிவான விவரங்களுக்கு: https://bit.ly/2NHEot5

Banner
Banner