
சிறந்த படைத்திறன், தொழில் நுட்ப ரீதியான அணுகுமுறை, பிரம்மாண்டமான எண்ணிக்கையிலான வீரர்கள் ஆகியவற்றுக்காக இந்தியாவின் முக்கிய 3 படைகளில் ஒன்றான இந்திய ராணுவம் சர்வதேச நாடுகளிலும் புகழ் பெற்று விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்திய ராணுவத்தில் இன்ஜினீயரிங் பிரிவுகள் பலவற்றில் உள்ள டெக்னிகல் பிரிவு எஸ்.எஸ்.சி., (ஷார்ட் சர்வீஸ் கமிஷன்) காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: இந்திய ராணுவத்தின் டெக்னிகல் பிரிவு காலி இடங்களில் மைனிங்/கன்ஸ்ட்ரக்சன் பிரிவில் 1 காலி இடங்களும், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 6 இடங்களும், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், மெக்கானிகல் பிரிவில் 7 இடங்களும், கம்யூனிகேஷன்/டெலிகம்யூனிகேஷன் பிரிவில் 6 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-டெக்,புட் டெக், ஆர்கிடெக்சர் ஆகிய பிரிவுகளில் தலா 2 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 4 இடங்களும், புரொடக்சன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் தலா ஒரு இடமும் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பதவிகள் அனைத்தும் ஆண்களுக்கானவை. பெண்களைப் பொறுத்த வரை எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பிரிவில் 10 காலி இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 8 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 6 இடங்களும், மெக்கானிகல் பிரிவில் 5 இடங்களும், சிவில் பிரிவில் 4 இடங்களும், ஆர்கிடெக்சர் பிரிவில் 2 இடங்களும் காலியாக உள்ளன.
தற்போது இன்ஜினீயரிங் பட்டப் படிப்பின் இறுதியாண்டு படிப்பவர்களும், இன்ஜினீயரிங் பட்டதாரிகளும் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பி.இ., பி.டெக்., அல்லது பி.ஆர்க்., படிப்பை விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் முடித்திருக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 02.04.86க்கு பின்னரும், 01.04.1993 முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் இரு பாலருக்கும் கல்வித் தகுதியுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆண்களாக இருந்தால் குறைந்த பட்சம் 157.5 செ.மி., பெண்களாக இருந்தால் குறைந்த பட்சம் 152 செ.மீ., உயரம் கொண்டவராக இருக்க வேண்டும். முழுத் தேவைகளை இணையதளத்திலிருந்து அறியவும்.
இந்திய ராணுவத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை முழுமைப்படுத்தி உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு 14.09.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணைய தளத்திலிருந்தோ அல்லது 28.07.2012-03.08.2012 தேதியிட்ட எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழைப் பார்த்தோ அறியவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 31.08.2012 விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 14.09.2012 இணையதள
முகவரி:www.joinindianarmy.nic.in