Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட தலைமையகத்தில் உள்ள டிராப்ட்ஸ்மேன் - கிரேடு 3 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. மூன்று பிரிவுகளிலான இந்தப் பதவிக்கு மொத்தம் 116 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பாதுகாப்பு அமைச்சகத்தின் டிராப்ட்ஸ்மேன் பதவியில் கன்ஸ்ட்ரக்சன் (சிவில்) பிரிவில் 31 காலி இடங்களும், மெக்கானிகல் பிரிவில் 47 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 38 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ள ஒருங்கிணைந்த தலைமையகத்திலான டிராப்ட்ஸ்மேன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். அதே போல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக அய்.டி.அய்., மூலமாக இரண்டு வருட டிராப்ட்ஸ்மேன் படிப்பை விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி முடித்திருக்க வேண்டும்.

இந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலேயே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் உரிய இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 03.09.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை ஜூலை 21 முதல் 27 தேதியிலான எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழைப் பார்த்து அறியவும்.

முகவரி: Integrated Headquarter of, Ministry of Defence (Navy), Directorate of Civilian,  Personnel, D&II Wing Sena Bhavan, New Delhi 110011.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 03.09.2012



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்