
சென்னை ஜூலை 27 - அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார் படிப்புகளான பி.எஸ்சி.,(நர்சிங்), பி.பார்ம், பி.ஏ.எஸ்.எல்.பி, பி.பி.டி, பி.ஒ.டி, பி.எஸ்சி.,ஆர்டி, பி.எஸ்சி., ஆர்.டி போன்ற படிப்புகளுக்கு ஆகஸ்ட் 06 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
6 ஆம் தேதி நடைபெற உள்ள கலந்தாய்வில் ராணுவ வீரர்களின் பிள்ளைகள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
௭ ஆம் தேதி 9 மணிக்கு 184.50 கட்ஆப் மதிப்பெண் முதல் 176.25 வரையும் பிற்பகல் 2 மணி 176.25 முதல் 174.00 கட்ஆப் மதிப்பெண் உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகின்றது.
8 ஆம் தேதி 9 மணிக்கு 174.00 கட்ஆப் மதிப்பெண் முதல் 169.00 வரையும் பிற்பகல் 2 மணி 169.00 முதல் 167.25 கட்ஆப் மதிப்பெண் உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகின்றது.
9 ஆம் தேதி 9 மணிக்கு 167.25 கட்ஆப் மதிப்பெண் முதல் 164.25 வரையும் பிற்பகல் 2 மணி 164.25 முதல் 163.00 கட்ஆப் மதிப்பெண் உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகின்றது.
10 ஆம் தேதி 9 மணிக்கு 163.00 கட்ஆப் மதிப்பெண் முதல் 160.25 வரையும் பிற்பகல் 2 மணி 160.25 முதல் 159.00 கட்ஆப் மதிப்பெண் உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகின்றது.
கலந்தாய்வுக்கு கலந்துக்கொள்ளும் மாணவர்கள் 1 மணி நேரத்திற்கு முன்பாக கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.
பங்கேற்கும் மாணவர்களுக்கு கலந்தாய்வு குறித்த அழைப்புச்சீட்டு கிடைக்கவில்லை என்றாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
கலந்தாய்வில் பங்கேற்க தவறிய மாணவர்கள் 2ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்கலாம்.அழைப்புச்சீட்டு கிடைக்க பெறாத மாணவர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.