
சென்னை, ஜூலை ௧௯-தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த படிப்பான பாரா மெடிக்கல் படிப்புக்கு ரேங்க் பட்டியல் மருத்துவக்கல்வி இயக்ககம் நேற்று மாலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இப்படிப்பிர்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம், முதல் வாரத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில், பி.எஸ்சி., படிப்பிற்கு 200 இடங்களும், பி.பார்ம்., படிப்பிற்கு 120 இடங்களும், பி.பி.டி., படிப்பிற்கு 50 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
மேலும் விபரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.