Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அய்.ஓ.பீ., வங்கிக்கு நாடெங்கும் கிளைகள் உள்ளன. சிறந்த வாடிக்கையாளர் சேவை என்பதற்காக இந்த வங்கி அறியப்படுகிறது. இந்த வங்கியில் எழுத்தர் பிரிவில் நாடெங்கும் உள்ள காலி இடங்களுக்கு பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் மொத்தம் 728 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பிளஸ் 2-விற்கு நிகரான படிப்பைக் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

இவற்றுடன் அய்.பீ.பி.எஸ்., அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய எழுத்தர் பொது எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்த பட்சம் 24 மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலுக்கான தகுதி உடையவர்களுக்கு நாடெங்கும் உள்ள பல்வேறு மய்யங்கள் ஏதாவது ஒன்றில் அழைப்பு அனுப்பப்படும்.

மேலும் முழுமையான தகவல்களை இந்த வங்கியின் இணையதளத்திலிருந்து அறியவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 14.07.2012

இணையதள முகவரி: www.job.in/uploads/CEDDocuments/CLK%202012%20&%20ENGLISH%20AD.pdf



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்