Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சமீபத்தில் தமிழ்நாடு இந்து ரீலிஜியஸ் அண்டு சாரிடபிள் எண்டோமெண்ட் சபார்டி னேட் சர்வீஸிற்கான எக்ஸிக்யூடிவ் அதி காரிகள் 24 பேரைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

தமிழ் நாடு அரசின் எக்ஸிக்யூடிவ் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2012 அன்று 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 13.06.2012 அடிப்படையில் கலை, அறிவியல் அல்லது காமர்ஸ் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஏற்கெனவே மதரீதியான நிறுவனங்களில் குறைந்த பட்சம் 5 ஆண்டு கால அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதே போல் இந்திய கலாச்சாரம் மற்றும் மதரீதியான நிறுவனங்கள் பற்றிய மேலாண்மைப் படிப்பில் பி.ஏ., முடித்தவர் களுக்கும் முன்னுரிமை உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியில் நல்ல திறனிருப்பதும் தேவைப்படும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள எக்ஸிக்யூடிவ் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150/-அய் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தில் இருந்து விலக்கு பெற விரும்புபவர்கள் வங்கி, தபால் அலுவலகம் அல்லது ஏஜென்சிக்கு பிராசசிங் கட்டணத்தை மட்டும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு செலுத்த வேண்டும். ஒரே முறை கட்டணம் செலுத்த பதிவு செய்தவர்கள் தற்போது கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு வாயிலாகவே இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 13.07.2012

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : முதல் தாள் : 17.07.2012 இரண்டாம் தாள் : 12.08.2012

இணையதள முகவரி: www.tnpsc.gov.in/notifications/19B_2012_not_eng_EO&Grade&III.pdf



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்