Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு இந்திய ராணுவம் மட்டுமன்றி இதற்கான சிறப்பு பயிற்சிகளுடன் கூடிய படையும் தேவை என்று உணரப்பட்டதன் காரணமாக பார்டர் செக்யூரிட்டி போர்ஸ்(பி.எஸ்.எப்.,) எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இன்று வரை சிறப்புடன் செயல்படும் இந்தப்படையில் டப்த்ரி பிரிவு கான்ஸ்டபிள்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்: எல்லைப் பாதுகாப்புப் படையின் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிவர்கள் 18 வயது நிரம்பியவராகவும் 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை இவர்கள் முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகளுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தேவைப்படும். உயரம் ஆண்களாய் இருந்தால் குறைந்த பட்சம் 167.5 செ.மீ.,யும், பெண்களாய் இருந்தால் குறைந்த பட்சம் 157 செ.மி.,யும் இருக்க வேண்டும். உயரத்திற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு குறைந்த பட்சம் 80 செ.மீ., இருக்க வேண்டும்.

கண்ணாடி அணிந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவப் பரிசோதனை போன்ற முறைகளிலான தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

மற்றவை: எல்லைப் பாதுகாப்புப் படையின் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/-அய் விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி எடுத்து அனுப்ப வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பங்களை நிரப்பி பொருத்தமான முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழ் நாட்டிற்கு அருகிலுள்ள பெங்களூரு மய்யத்தின் முகவரி கீழே கொடுக்கப் பட்டுள்ளது. தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் செலுத்துதல் போன்றவை பற்றிய முழுமையான விபரங்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 07.07.2012

முகவரி : The Inspector General, BSF, Bangalore, PO& Yelahanka, Bangalore, Karnataka - 560064



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்