
இந்தியாவின் சர்வதேச கடல் எல்லைகளைக் கவனமாகப் பாதுகாக்கும் பொருட்டு இதற்கான பிரத்யேக பாதுகாப்புப் படை தேவை என்று உணரப்பட்டது. இதன் விளைவாக கடந்த 1977இல் இந்தியக் கடலோரக் காவல் படை நிறுவப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளைப் போன்றே போர்க்கால பணிகளுக்காக இந்தியக் கப்பல்படையும், கடலோர எல்லையைப் பாதுகாப்பதற்காக கடலோரக் காவல் படையும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் படையில் துணை கமாண்டண்டு களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: இந்தியக் கடலோரக் காவல் படையின் துணை கமாண்டண்ட் பதவி ஜெனரல் டியூடி, ஜெனரல் டியூடி (பைலட் மற்றும் நேவிகேட்டர்), டெக்னிக்கல் பிரான்ச், பைலட் மற்றும் கமர்சியல் பைலட் லைசென்ஸ் ஹோல்டர்ஸ், ஜெனரல் டியூடி - பெண் என்ற பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பிரிவுகளைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. முதலாவது, 2ஆவது மற்றும் 5ஆவது பிரிவுகளுக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற போதும், இவர்கள் பிளஸ் 2 அளவிலான படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டெக்னிக்கல் பிரிவுக்கு மெக்கானிக்கல், ஏரோனாடிக்கல், எலக்ட்ரிகல் ஆகிய பிரிவுகளில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பைலட் மற்றும் கமர்சியல் பைலட் லைசென்ஸ் ஹோல்டர் பிரிவுக்கு ப்ளஸ் டூ அளவிலான படிப்பும் இத்துடன் டி.ஜி.சி.ஏ., வழங்கியகமர்சியல் பைலட் லைசென்ஸூம் பெற்றிருப்பது கட்டாயத் தேவையாகும்.
மற்றவை: எழுத்துத் தேர்வு அடிப்படையிலேயே இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு குறைந்த பட்ச கல்வித் தகுதிகளுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் கட்டாயம் தேவைப்படும். முதல் கட்ட நுழைவுத் தேர்வு தமிழகத்தைப் பொறுத்த வரை சென்னையில் மட்டும் நடத்தப்படும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும். கடலோரக் காவல் படையின் துணை கமாண்டண்ட் பதவிக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 20.06.2012
இணையதள முகவரி: http://indiancoastguard.nic.in/indiancoastguard/jobs/AC_01_2013/Advt%2001%202013.pdf