எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அனைவராலும் எல்அய்சி என அழைக்கப்படும் லைப் இன்ஸ் யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 590 உதவி நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 590

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி:AAO (Generalist)  - 350

பணி: AAO (IT) - 150

பணி: AAO (CA) - 50

பணி: AAO (Actuarial) - 30

பணி: AAO (Rajbhasha) - 10

தகுதி: பட்டதாரிகள், பொறியியல் துறையில் கணினி அறிவியல், அய்.டி, எல்க்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் பி.இ முடித்தவர்கள், எம்சிஏ, கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி., சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆக்சுவரியல் தேர்வுகளில் சிடி1 முதல் சிடி5 வரைவுள்ள தாள்களையும், குறைந்தபட்சம் 4 தாள்களையும் முடித்தவர்கள் ஆக்சுவரியல் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.   சம்பளம்: மாதம் ரூ.32795- 1610(14) 55335 1745(4) 62315 + இதர சலுகைகள்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இருகட்ட எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.licindia.in  என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.licindia.in/  இணையதளம் தெரிந்துகொள்ளவும்.   கடைசி தேதி: 22.03.2019

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner