எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக அரசின் மின் ஆளுகைத் துறையில் ( e-Governance) 36 உதவி சிஸ்டம் பொறியாளர் பணியிடங்களும் 24 உதவி சிஸ்டம் அனலிஸ்ட் பணியிடங்களும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

உதவி சிஸ்டம் பொறியாளர் பதவிக்குக் கணினி அறிவியல், கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட் ரானிக்ஸ்-இவற்றில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டப் படிப்பு அனைத்திலும் 60 சதவீத மதிப்பெண் அவசியம். உதவி சிஸ்டம் அனலிஸ்ட் பதவிக்கும் இதே கல்வித் தகுதி பொருந்தும்.

கூடுதலாக இந்தப் பதவிக்கு எம்.சி.ஏ., எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்சி. தகவல் தொழில்நுட்பப் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 30 வரை. பி.சி., பி.சி. (முஸ்லிம்), எம்.பி.சி., அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த ஆதரவற்ற கைம்பெண்கள் (destitute widow)ஆகியோருக்கு 21 முதல் 32 வரை. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 21 முதல் 35 வரை. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். இந்தத் தேர்வு அப்ஜெக்டிவ், விரிவாக விடை யளிக்கும் முறையில் அமைந்திருக்கும்.

மொத்தம் 3 தாள்கள் இருக்கும். எழுத்துத் தேர்வு ஏப்ரல் 7 அன்று நடைபெற உள்ளது.

உரிய கல்வித் தகுதியும் வயதும் உடைய பொறியியல் பட்டதாரிகளும் எம்.எஸ்சி., எம்.சி.ஏ. பட்டதாரிகளும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தைப் (www.tnpsc.gov.in)பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப முறை, தேர்வு மய்யங்கள், தேர்வுக்கான பாடத் திட்டம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner