எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 24 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு பொறியியல் துறையில், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்களிடம் இருந்து வரும் 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 24

பதவி:   Junior Engineer (JE) (Civil) - 15

பதவி:   Junior Engineer (JE) (Electrical)  - 09

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் போன்ற துறைகளில் 65 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்கள் 2 ஆண்டுகளும், டிகிரி முடித்தவர்கள் 1 ஆண்டும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற பிரிவினருக்கு ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPJECE07012019E2779FB41A5F4FABA1F30CDA9F0183AB.PDF  என்ற இணைப்பில் (LINK) சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2019

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner