எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தொழில்நுட்ப ரீதியாகவும் எண்ணிக்கையிலும் அர்ப்பணிப்புணர்வு உள்ள வீரர்களுக்காகவும் நமது கப்பல் படை உலக அளவில் பேசப்படும் படை. இப்படையில் பெர்மனென்ட் கமிஷன் அடிப்படையில் எக்சிக்கியூடிவ் பிரிவில் உள்ள இன்ஜினியரிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிட விபரம்: நேவல் ஆர்ம மென்ட் இன்ஸ் பெக்சன் பிரிவில் 12, ஹைட்ரோ கிராபியில் 27, ஜெனரல் சர்வீசில் 28, எலக்ட்ரிகல் ஜெனரல் சர்வீசில் 32ம் சேர்த்து மொத்தம் 99 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.  விண்ணப்பதாரர்கள் 02.01.1995 முதல் 01.07.2000க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் இன்ஜினி யரிங் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: எஸ்.எஸ்.பி., நேர் காணல், மருத்துவப் பரிசோதனை, உடல் திறனறியும் தேர்வு என்ற முறைகளில் இருக்கும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2019 பிப்., 1.

விபரங்களுக்கு:www.davp.nic.in/WriteReadData/ADSeng_10701_41_1819b.pdf.