எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் அமைச்சக மற்றும் இதர அரசுப் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. தற்போது குரூப் - 1 பிரிவில் 139 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிட விபரம்: தமிழ்நாடு சிவில் சர்வீஸ் பிரிவிலான சப்-கலெக்டர் 27, சப்-சூபரின்டென்டன்ட் ஆப் போலீஸ் பிரிவில் 56, கமர்சியல் டாக்ஸ் பிரிவிலான அசிஸ்டென்ட் கமிஷனரில் 11, தமிழக கூட்டுறவு சேவையைச் சார்ந்த துணை ரிஜிஸ்ட்ரர் 13, பதிவுத் துறை சார்ந்த டெபுடி ரிஜிஸ்ட்ரர் 7, தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி பிரிவைச் சார்ந்த துணை இயக்குநரில் 15, டெபுடி எம்ப்ளாய்மென்ட் ஆபிசரில் 8, பயர் அண்டு ரெஸ்க்யூ சர்வீஸ் பிரிவிலான மாவட்ட அதிகாரியில் 2 காலியிடங்கள் உள்ளன.

தேவை: விண்ணப்பிக்கும் பிரிவை பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. குறைந்த பட்சம் பட்டப் படிப்பும், பிரிவு சார்ந்த இதர சிறப்பு படிப்புகளும் தேவைப்படலாம். எனவே முழுமையான விபரங்களை இணைய தளத்தைப் பார்த்து அறியவும்.

தேர்ச்சி முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு, நேர் காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மய்யங்கள்: தமிழகத்தின் சென்னை, விழுப் புரம், திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் தேர்வு மய்யம் அமைக்கப் படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 150. கட்டணம். அய்ந்து ஆண்டு செல்லத்தக்க பதிவுக் கட்டணம் ரூ.150.

கடைசி நாள்: 2019 ஜன. 31.

விபரங்களுக்கு:www.tnpsc.gov.in/Notifications /2019_01_notyfn_Group_I_services.pdf.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner