எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களுள் பெரம்பலூர் நீதிமன்றம் சிறப்பு வாய்ந்தது. இதில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிட விபரம்: கம்ப்யூட்டர் ஆபரேட்டரில் 6, எக்சாமினரில் 2, ரீடரில் 1, சீனியர் பெய்லியில் 1, டிரைவரில் 1, ஜூனியர் பெய்லியில் 3, ஜெராக்ஸ் மிசின் ஆபரேட்டரில் 3, ஆபிஸ் அசிஸ்டென்டில் 24, நைட் வாட்ச்மேனில் 7, மசால்சியில் 9ம், ஸ்காவஞ்சரில் 1ம், ஸ்வீபாரில் 3ம், சானிடரி ஒர்க்கரில் 1ம் சேர்த்து மொத்தம் 62 காலியிடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 18- 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : எக்சாமினர், ரீடர், சீனியர் பெய்லி, ஜூனியர் பெய்லி, ஜெராக்ஸ் மெசின் ஆபரேட்டர், போன்ற பதவிகளுக்கு குறைந்த பட்சம் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர் பதவிக்கு எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இதர பதவிகளுக்கு தமிழில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர் - 621 212.

கடைசி நாள் : 2019 ஜன., 21.

விபரங்களுக்கு:https://districts.ecourts.gov.in/sites/default/file/PerambalurDistrictJudiciaryRecruitmentcalledforason28-12-2018_0.pdf

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner