எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க பெரியவர்களால் மட்டுமல்ல, இளையோ ராலும், சிறுவர்களாலும் முடியும் என்பதற்கு எத்தனையோ முன்னுதாரணங்கள் உள்ளன.

இளையோரின் உத்திகளை அவ்வப்போது தூண்டி, அவர்களின் பயனுள்ள யோசனை களைப்   பயன்பாட்டுக்குக் கொண்டுவர, சர்வதேச நாடுகள் பல முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளன.

இதற்காக, அரசு மற்றும் தனியார் ஆய்வு நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வரு கின்றன.

அவற்றில் ஒன்றுதான், நம் நாட்டின் மேற்கு வங்க மாநிலம், காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இளம் விஞ்ஞானிகள் திட்டம்.

இந்த நிறுவனத்தின் மாணவ அமைப்பாகச் செயல்பட்டு வரும் இந்தப் பிரிவு இளம் விஞ்ஞானிகளை உரு வாக்கவும், ஊக்கு விக்கவும் கடந்த ஆண்டு (2017) முதல் இந்தத் திட்டத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டியை நடத்தி வருகிறது.

இந்தப் போட்டியில் நாடு முழுக்க உள்ள அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த 8, 9, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 அல்லது 3 பேர் கொண்ட ஒரு குழுவாகப் பங்கேற் கலாம்.

போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தூய சக்தி, சுகாதாரம் மற்றும் தூய்மை, வள மேலாண்மை, வன்பொருள் மாதிரி அமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, பேரழிவு மேலாண்மை ஆகிய பிரச்சினைகளில் புதிய தீர்வுகளைக் கண்டறிந்து அவற்றை திட்ட அறிக்கையாக போட்டி அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும். 4 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் 3ஆவது சுற்றுக்கு (அரையிறுதி) தேர்ந்தெடுக்கப்படும் பள்ளி மாணவர்கள் வளாகத்துக்கு அழைக்கப் பட்டு, தங்கள் கண்டுபிடிப்பு குறித்த செயல் விளக்கம் அளிக்கக் கோரப்படுவர். இதில், தேர்வாகும் மாணவர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்பர். அவர்களில் இருந்து முதல் 3 இடங்களைப் பெற்ற பள்ளிகளை நடுவர் குழு தேர்ந் தெடுக்கும்.

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் நிகழாண்டு போட்டியில், இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து 2000 பள்ளிகள் பங்கேற்றன. இதில், திருச்சி செல்லம்மாள் வித்யாலயா,   உள்ளிட்ட 24 பள்ளிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.

இந்தப் பள்ளி மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளுடன் - வளாகத்துக்கு வந்து நடுவர்கள் முன்னிலையில் செயல் விளக்கம் அளித்தனர்.

இதிலிருந்து மிகச் சிறந்த 6 பள்ளிகள் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டன. இறுதிச்சுற்று கடந்த அக்டோபர் மாதம் 27, 28 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இதில், சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள காங்கேர் வேலி அகாதெமி பள்ளி மாணவர்கள் பரிநீதி புரா, மன்வீர்சிங் ஆகியோர் கண்டுபிடித்த குறைந்த செலவில், வீட்டிலேயே தயாரிக்கப்படும் மூலிகை சுவாச வடிகட்டி முதலிடத்தை வென்றது.

அதே போல, ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த கிராஸ்வோர்ட் பள்ளி மாணவர்கள் ஹேமசிறீவாணி, விஸ்ணுதேஜா, சுடன்ஷூ ஆகியோர் உருவாக்கிய சாலைக் குழிகளை உடனடியாக சரிசெய்யும் மின்னணு கருவி   இரண்டாமிடத்தை வென்றது.

மேலும், ஜார்கண்ட் மாநிலம், ஜாம்சேத் பூரைச் சேர்ந்த தாராபூர் பள்ளி மாணவர்கள் அதிதி சாஹே, சுடிபா பட்டாச்சார்ஜி ஆகியோர் கண்டுபிடித்த சூரிய மற்றும் மீயொலி உணரி களை வைத்து கழிவுகளைக் கையாளும் ஸ்மார்ட் கழிவு மேலாண்மை கருவி மூன் றாவது இடத்தைப் பிடித்தது.

இவற்றோடு   பள்ளியின்    செயல்திட்டங்கள் மாணவர்களின் உயர்சிந்தனைகளின் வெளிப் பாடாக அமைந்திருந்தன. செயல்திட்டங்களின் உண்மைத் தன்மை, சமூக தாக்கம், வழங்கல் தரம், ஒட்டுமொத்த திட்ட உத்தி ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டு சிறந்த கண்டு பிடிப்புகள் தேர்வுசெய்யப்பட்டன.

இந்தத் திட்டத்தில் நிகழாண்டு 35 சதவீத மாணவிகள் பங்கேற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப் போட்டி இவ்வளவு முக்கியத்துவம் பெற, இதன் மதிப்பீடுகள் அனைத்தும் சர்வதேச அளவில் அமைந்ததும் முக்கிய காரணம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner