எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இளநிலை உதவியாளர் பதவியில் 66  காலியிடங்களும் கணினி இயக்குபவர் பதவியில் 111 காலியிடங்களும் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

தேவையான தகுதி:

இளநிலை உதவியாளர் பதவிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குபவர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினியில்  சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அதோடு ஒரு மணி நேரத்தில் 8  ஆயிரம் எழுத்துக்களைத் தமிழ், ஆங்கிலத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

1.7.2018 தேதியின்படி, வயது  18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் பி.சி., எம்.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்படும்.

எனினும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரும் (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி.), பொதுப்

பிரிவில் உள்ள கணவனை இழந்த பெண் களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சக் கல்வித் தகுதியான எஸ்.எஸ்.எல்.சி.-யைக் காட்டிலும் கூடுதல் கல்வித் தகுதி (பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டம்) பெற்றி ருந்தால்  அவர்களுக்கு வயது வரம்பு கிடை யாது.

தேர்வு விவரம்: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது. கணினி இயக்குபவர் பணிக்கு மட்டும் கூடுதலாகக்  கணினி தட்டச்சுத் திறன் தேர்வு நடத்தப்படும். இரண்டு பதவிகளுக்கும் அடிப் படைச் சம்பளம் ரூ.19,500 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அகவிலைப்படி,  வீட்டுவாடகைப் படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி போன்ற வற்றைச் சேர்த்தால் சம்பளம் தோராயமாக ரூ.27 ஆயிரம் கிடைக்கும். உரிய கல்வித் தகுதியும்,  வயது வரம்புத் தகுதியும் உடைய வர்கள் தமிழ்நாடு தொழிலாளர் துறையின் இணைய தளத்தில் (www.labour.tn.gov.in) வெளியிடப் பட்டுள்ள  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ் களின் நகல்களையும், விண்ணப்ப கட்டண மாக “The  Secretary, TNCWWB” என்ற பெயரில் ரூ.100-க்கு எடுக்கப்பட்ட கேட்பு வரைவோலையையும்  இணைத்து “செய லாளர், தமிழ்நாடு  கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், 8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600 034” என்ற முகவரிக்கு நவம்பர் மாதம் 2ஆம்  தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர்,  பழங்குடியினர், அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள்  விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கூடுதல் விவரங்களைத் தமிழ்நாடு தொழிலாளர் துறையின் இணையதளத்தில் விரிவாக  அறிந்துகொள்ளலாம்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ‘தினம் ஒரு செயல்பாடு’

“அரசு வேலைக்காக  நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி., வங்கிப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது,  தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற உதவி செய்வது, வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன்களை மேம்படுத்தும் வேலைகள் செய்யப்படுகிறது.

‘தினம் ஒரு செயல்பாடு’ என்பதை முன்வைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் திங்கள் முதல் வெள்ளிவரை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பணி மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில்,  திறன்மிகு திங்கள், சேவை செவ்வாய், போட்டித் தேர்வு புதன், விழிப்புணர்வு வியாழன், வேலைவாய்ப்பு வெள்ளி  எனத் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பணியில் கவனம் செலுத்தப்படுகிறது.

திங்கள் அன்று வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களின் முக்கியத்துவம், அவற்றை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள்  தொடர்பான பணிகள் நடைபெறும். செவ்வாய் அன்று எங்கள் அலுவலர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமின்றி கிராமப்புறங்களுக்குச் சென்று  கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் குறித்து ஆலோசனை வழங்குவார்கள்.

புதன் அன்று போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி, தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், மாதிரி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும். இதற்காக ஒவ்வொரு வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் வாசகர் வட்டம் என்ற  அமைப்பு இயங்குகிறது. வியாழன் அன்று பொதுமக்களுக்கு உயர்கல்வி வழங்கும் முக்கிய நிறுவனங்கள், வளர்ந்து வரும்  வேலைவாய்ப்புகள், அதற்கான கல்வித் தகுதிகள், சுயதொழில் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்குகின்றனர்.

வெள்ளி அன்று வேலை தேடுவோரையும், வேலைக்கு ஆள் தேடும் தனியார் நிறுவனங்களையும் ஒரே  இடத்தில் வரவழைத்து  வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமின்றி வேலை தேடு வோர் யார்  வேண்டுமானாலும் பங்கேற்கலாம். முற்றிலும் இலவசம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner